ராஜிவ் காந்தி – மறக்கமுடியாத மாமனிதர் -நினைவு நாள் செய்தி
இன்று இந்தியர்கள் உலகம் முழுக்க கணினித்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் ராஜீவ் காந்திதான். ரயில்வே டிக்கெட் டுகள் கணினிமயமக்கப்பட்டது, இளைஞர்களுக்கு வாக்களிக்கும் வயதை 21 வயதிலிருந்து 18 ஆகக் குறைத்து, பஞ்சாயத்துராஜ் சட்டமும் நவோதயா பள்ளி கள் இந்தியா முழுக்கத் தொடங்கப்பட்டதும் ராஜிவ் காந்தி காலத்தில்தான்.
40 வயதிலேயே பிரதமராகப் பொறுப்பேற்ற உலகின் இளம் தலைவர்களில் ராஜீவ் காந்தியும் ஒருவர். இதன்மூலம் இந்திய அரசியலில் இளைஞர்கள் நுழைய நம்பிக்கையையும் ஏற்படுத்தினார்.
1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஃபெரோஸ் காந்தி- இந்திரா காந்தி தம்பதி யின் மூத்த மகனாகப் பிறந்தார் ராஜீவ் காந்தி. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அவருக்கு வயது மூன்று. பள்ளிப்படிப்பையெல்லாம் இந்தியாவில் முடித்தவருக் குப் பொறியியல் மீதுதான் காதல். அதனால், மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிப்பை இங்கிலாந்திலுள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றார். பின்னர், பைலட் ஆக விமானத்தில் பறக்க விரும்பியவர் இந்தியாவுக்குத திரும்பி டெல்லியில் அது குறித்த நுழைவுத்தேர்வில் பாஸ் செய்து ஏர் இந்தியா நிறுவனத் தில் விமான ஓட்டியாகவும் பணிபுரிந்து வந்தார்.
ராஜீவ் காந்தி கேம்ப்ரிட்ஜில் படித்துக்கொண்டிருந்தபோதுதான், அதே கேம்ப்ரிட்ஜ் ஜில் படித்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஆங்கிலத்துறை மாணவி சோனியாவை காதலித்தார். கேம்ப்ரிட்ஜ் அவர்கள் காதலுக்கான கேம்பஸ் ஆகியது. பெற்றோர் சம்மதத்தோடு 1968ஆம் ஆண்டு திருமண வாழ்க்கையைத் தொடங்கினார்கள். பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் திருமணத்திற்குப் பிறகும் ராஜீவ் காந்திக்கு ஆர்வம் என்பதோ அறிவியல் மீதும் விமானத்தின் மீதும்தான் இருந்தது. அவரது நூலகம் முழுக்க அறிவியல், பொறியியல், விமானம் சார்ந்த புத்தகங்கள்தான் இருந்தது.
1980ஆம் ஆண்டு அவரது தம்பி சஞ்சை காந்தியின் மறைவுக்குப் பிறகு அறிவியல் வாதியான ராஜீவ் காந்தியை அரசியல்வாதியாய் மாற்றியது வரலாறு. அவரின் தம்பி சஞ்சய் காந்தி மறைவுக்குப் பிறகு, அவர்கள் குடும்பத் தொகுதியான, அதே உத்திரபிரதேசத்தின் அமேதியில், நடந்த இடைத்தேர்தலில் அமோகமாய் வெற்றி பெற்றார். அதன்பிறகு, அவரது அம்மா இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு தனது பாதுகாவலர்களாலேயே படுகொலை செய்யப்பட்டபோது ஒரே இரவில் காங் கிரஸ் கட்சியின் தலைமையைப் பொறுப்பை ஏற்றார்.
நேரு காலத்தில் எப்படி பொதுத்துறை நிறுவனங்களும் தொழில்துறையும் வளர்ந்ததோ, அதேபோலத்தான் ராஜீவ் காந்தி காலத்தில் அறிவியலும் தொழில் நுட்பமும் வளர்ந்தது. தொழில்நுட்பத்தால்தான் வறுமையை விரட்டமுடியும் என்று உறுதியாக நம்பினார் ராஜிவ் காந்தி. இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளில் ஏற்பட்ட போர்களின்போதும் அமைதிக்காகக் குரல் கொடுத்தவர் ராஜீவ் காந்தி. இன்று உலகம் முழுக்க இந்தியர்கள் கணினித்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் ராஜீவ் காந்திதான். அவரது காலத்தில்தான் டிஜிட்டல் மயம் வந்தது.
கிராமப்புறப் பகுதிகளுக்கும் தொலைதொடர்பில் பி.சி.ஓ. டிஜிட்டல் முறையைக் கொண்டுவந்ததோடு, அதற்கான அமைப்பையும் ஏற்படுத்தினார். அந்த அமைப் பால்தான் இன்று நாம் செல்போன்களைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். இவர், காலத்தில்தான் சுற்றுச்சூழலுக்கென்று தனி அமைச்சகமும் தனித்துறை யும் கொண்டுவரப்பட்டது. கட்சித் தாவல் தடைச்சட்டமும் இயற்றப்பட்டது.
இந்தியாவில் ரயில்வே டிக்கெட்டுகள் கணினிமயமக்கப்பட்டது, இவரது காலத் தில்தான். இளைஞரான ராஜீவ் காந்தி இளைஞர்களுக்கு அரசியல் பிரதிநிதித் துவப்படுத்த வாக்களிக்கும் வயதை 21 வாயதிலிருந்து 18 ஆக குறைத்தார். அதேபோல சிறப்புமிக்க பஞ்சாயத்துராஜ் சட்டமும் இவரது காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது. சிறப்புமிக்க நவோதயா பள்ளிகளும் இந்தியா முழுக்கத் தொடங்கப்பட்டது. பல்கலைக்கழகங்கள் நவீனமயமாக்கப்பட்டது.
இந்திரா காந்தியின் மறைவுக்குப்பிறகு நடந்த பொதுத்தேர்தலில் இந்தியா முழுக்க 250 இடங்களுக்குச் சென்று மக்களோடு மக்களாக பிரச்சாரம் செய்தார். ஆனால், அவரது எளிமையே அவரது இறப்புக்கும் காரணமாய் அமைந்தது.
இந்தியாவின் இளம் வயது பிரதமராகவும் நேரு குடும்பத்தின் கடைசி பிரதமராக வும் ராஜீவ் காந்தி நிலைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1991 மே 21ஆம் தேதி இரவு சரியாக 10:21 மணிக்கு தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூ ரில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்திருந்த ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார், அவரை கொன்ற தானு என்கிற பெண், சந்தன மாலையை அணிவிப்பதற்காக ராஜிவ் காந்திக்கு அருகில் சென்றார். அவர் கால்களைத் தொடுவதற்காக அந்தப் பெண் கீழே குனிந்தார், காதுகளை செவிடாக்கும் பெரும் சப்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. ராஜிவ் காந்தி மரணமடைந்தார். நாடே துக்கத்தின் ஆழ்ந்தது.