ரஷ்யா உக்ரைன்மேல் போர் தொடங்கியது ஏன்?

 ரஷ்யா உக்ரைன்மேல் போர் தொடங்கியது ஏன்?

ரஷ்யா சோவியத் யூனியனாக இருந்து பல நாடுகளாக 1991ஆம் ஆண்டு கொரபச்சேவ் அதிபரால் பிரிக்கப்பட்டு பல நாடுகள் சுதந்திரம் பெற்றபோது தான் உக்ரைனும் சுதந்திரம் பெற்றது. அப்போதே அதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு தான் பிரிக்கப்பட்டது. இதற்கு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளும் கையெப்பமிட்டு உள்ளன.

உக்ரைன், 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியனிலிருந்து சுதந்திரம் பெற்று தனிநாடானது முதலே ரஷ்யாவிற்கு உக்ரைன் ஐரோப்பிய யூனியனிடம் நேட்டோ அமைப்பிடமும் சேர்ந்துவிடாமல் பார்த்துக்கொண்டது.

அதுதான் மின்ஸ் ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின்படி உக்ரைன், தனிநாடாக செயல்படும். ஆனால் நோட்டோ அமைப்பிடமும் ஐரோப்பிய யூனியனிடமும் அணி சேர்ந்துவிடக் கூடாது என்று போடப்பட்ட ஒப்பந்தமே மின்ஸ் ஒப்பந்தம்.

(நேட்டோ உலகின் மிகப்பெரிய இராணுவ கூட்டமைப்பு. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ரஷ்யா அசுர வளர்ச்சி அடைந்ததை அடுத்து இக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பை அமெரிக்கா & ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து உருவாக்கியுள்ளன.

ஆரம்பத்தில் இக்கூட்டமைப்பில் 12 நாடுகள் இருந்தன. தற்போது 30 நாடுகள் உள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், துருக்கி, ஸ்பெயின், ருமேனியா, போர்ச்சுகல், போலந்து, நார்வே, நெதர்லாந்து, லக்சம்பர்க், லுத்துவேனியா, இத்தாலி, ஐஸ்லாந்து, ஹங்கேரி, கிரீஸ், ஜெர்மனி, எஸ்டோனியா, டென்மார்க், கனடா, பல்கேரியா, பெல்ஜியம், அல்பேனியா, ஸ்லோவோகியா, குரோஷியா, செக்குடியரசு, லத்துவியா, மாண்டிநீக்ரோ, வடக்கு மாசிடோனியா

கிரீஸ் ஆகிய 30 நாடுகள் இந்த அமைப்பில் உள்ளன.

இந்த 30 நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டை யார் தாக்கினாலும் மீதி உள்ள 29 நாடுகளும் ஒன்று சேர்ந்து போருக்கு வரும். இந்த அமைப்பு இதுவரை ஒரு முறை மட்டுமே போரிட்டுள்ளது. 2001ல் அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலின்போது இந்த அமைப்பு ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்துள்ளது.

இந்த நாடுகளுள் ஐஸ்லாந்து மட்டும் இராணுவம் இல்லாத நாடு.

இந்த அமைப்பின் மொத்த நிதிப் பங்களிப்பில் கிட்டத்தட்ட 75% அமெரிக்கா வும் 25% மீதமுள்ள நாடுகளும் ஏற்றுள்ளன.

கடந்த ஜூலை மாத கணக்கின்படி

தரைப்படை போர் வீரர்கள் – 62,89,000

தயார் நிலை – 34,48,000

தரைப்படை – 15,137 டாங்கிகள்

கவச வாகனங்கள் – 66,223

ஆர்டில்லரி – 5,222

பீரங்கிகள் – 7,121

விமானப்படை ராக்கெட் புரொஜக்டர் – 2,838

விமானப்படை – போர் விமானங்கள் – 3,702

தாக்குதல் விமானங்கள் – 962

போக்குவரத்து விமானங்கள் – 1,529

பயிற்சி விமானங்கள் – 4,438

உளவு விமானங்கள் – 977

ஹெலிகாப்டர்கள் – 9,195

தாக்குதல் ஹெலிகாப்டர்கள் – 1,424

கடற்படை போர்க் கப்பல்கள் – 2,036

விமானம் தாங்கிக் கப்பல்கள் – 29

தாக்கி அழிக்கும் கப்பல்கள் – 112

Frigates கப்பல்கள் – 134

கொர்வாட் கப்பல்கள் – 48

நீர்மூழ்கிக் கப்பல்கள் – 144

ரோந்து கப்பல்கள் – 300

சிறிய ரக போர் விமானங்கள் – 174

அணு ஆயுதங்கள் – 6890

அணு ஆயுத ஏவுகணைகள் – அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளிடம் உள்ளன.

இந்த அளவுக்கு வலிமையான நிலையில் இந்த அமைப்பு உள்ளது.

அது சரி, இந்தியா நிலை என்ன?

இந்தியா இங்கு மத்தியஸ்தம் (நாட்டாமை) பொறுப்பு வகிக்கலாம். காரணம் நாம் அமெரிக்காவுக்கு ஆதரவு தருவோம் மறுபுறம் ரஷ்யாவிடமிருந்து ரபேல் போர் விமானங்களை இறக்குமதி செய்வோம்.

இங்கு இந்தியா மதில் மேல் பூனை என்ற நிலைப்பாட்டில் இருக்கிறது. இடை இடையே அமெரிக்கா இந்தியாவையும் கொம்பு சீவிவிடுகிறது. இந்தியா ரஷியாவிடம் போர் நிறுத்தம் பற்றிப் பேசவேண்டும் என்றும், இந்தியா ரஷியா விஷயத்தில் நடுக்கத்தோடு உள்ளது என்றும் பேசிவருகிறது.

இன்னொருபுறம் சீனாவிடம் ரஷியாவுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என்று நேரடியாக அந்த அதிபரிடமே பேசியிருக்கிறது. அமெரிக்காவின் நோக்கம் இன்னொரு வல்லரசான தன் எதிரிநாடான கம்யூனிஸ நாடு பாதிக் கப்பட வேண்டும். உக்ரைனும் தம்மிடம் கடன்பெற்று அடிமையாகவேண்டும். ரஷியா பொருளாதாரத்தில் தத்தளிக்கவேண்டும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் கதைதான் அமெரிக்காவின் தந்திரம்.

F

ஆனால் சீனாவும் ரஷ்யா விஷயத்தில் இரட்டை நாடகம் ஆடுகிறது. ரஷியா வில் உள்ள தனது முதலீடுகளைத் திரும்பப் பெற்றுள்ளது.

உக்ரைனை வளக்கும அமெரிக்கா

இந்த நிலையில் அமெரிக்கா உக்ரைனை அமெரிக்க நேட்டோ அமைப்பில் அணி சேர்த்து ரஷ்யாவிற்கு எதிராகப் பயன்படுத்த நினைத்தது, உக்ரைன் ரஷ்யாவின் மிக நெருங்கிய எல்லைப் பகுதி. கிட்டத்தட்ட இந்திய பாகிஸ் தான் காஷ்மீர் எல்லையைப் போன்றது.

உக்ரைன் பிரிந்தபோதே உக்ரைனின் எல்லைப் பகுதியில் இருக்கும் DONBAS எனும் எல்லை மாகாணம் ரஷ்ய பாரம்பரிய மக்களின் ஆதரவு பெற்ற மாகாணம். இந்த மாகாணத்தில் இரண்டு சர்வதேச விமான தளமும் உள்ளது. இது உக்ரைனின் தலைநகரில் இருந்து 300 மைல் தொலைவில் உள்ளது. அங்கே ரஷ்ய மொழி பேசும் மக்களே அதிகம் உள்ளனர். அவர்களுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வந்தது. அவர்களும் ரஷ்ய ஆதரவையே விரும்புகின்றனர். இந்த மக்களுக்கும், உக்ரைன் பாரம்பரிய மொழி பேசும் மக்களுக்கும் பனிப் போர், அதன் தொடர்ச்சியாக புரட்சிப் போர்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதற்கு முன்பே உக்ரைன் பகுதியிலிருந்து ரஷ்ய மொழி பேசும் பாரம்பரிய மக்கள் வாழும் கிரீமிய தீபகற்பமும் உக்ரைனிடமிருந்து பிரிக்கப்பட்டு ரஷ்யா விடமே வைத்துக்கொள்ளப்பட்டது. இந்தப் பகுதி ரஷ்யாவின் கருங்கடல் பகுதி. இந்த பகுதியில் ரஷ்ய போர்க் கப்பல்களை நிறுத்தமுடியாத சூழலை உணர்ந்தே ரஷ்யா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

காரணம் ரஷ்யாவைச் சுற்றி இருக்கும் நாடுகளான அனைத்து சிறிய நாடு களும் நேட்டோ அமைப்பில் இருக்கும் அமெரிக்க ஆதரவு நாடுகள். கருங்கடல் பகுதியில் கடல் வழி தாக்குதல் தொடுத்தால் ரஷ்யாவால் எதிர் தாக்குதல் செய்யமுடியாது. அதனாலேயே கிரிமியா பகுதியைத் தன்னுடன் இணைத்துக்கொண்டது. இப்போது கருங்கடல் பகுதியில் ரஷ்ய போர்க் கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே DONBAS பகுதியில் இருக்கும் பல புரட்சிப் போராளிகள் உக்ரைன் ராணுவத்தை எதிர்த்துப் போர் புரிந்து வந்தனர். இந்தப் புரட்சிப் போராளிகளுக்கு ரஷ்யாவே உதவி வந்தது. ராணுவ ரீதியாக ஆயுதங்கள் வழங்குவது முதற்கொண்டு பல உதவிகளையும் அம்மக்களுக்குச் செய்து வந்தது.

இந்த நிலையில் அமெரிக்கா தனது நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளை அணிசேர்க்கும் வேலையில் தொடர்ந்து பல வருடங்களாக ஈடுபட்டு வந்தது. உதாரணத்துக்கு போலந்து, பல்கேரியா, ஹங்கேரி போன்ற உக்ரைனைச் சுற்றியிருக்கும் அனைத்து சிறிய நாடுகளுக்கும் போர்ப் பயிற்சி கொடுத்து வந்தது.

இந்தப் போர்ப் பயிற்சி தேவையற்றதாகவே அந்த நாடுகளைச் சேர்ந்த மக்க ளும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இது அனைத்துமே ரஷ்யாவுக்கு எதிராகச் செயல்பட வைக்க அமெரிக்கா வலிந்து கொடுத்த போர் பயற்சி. இதைக் கடந்த ஐந்து வருடங்களாகச் செய்து வந்தது.

(இப்போது எல்லா நாடுகளும் உக்ரைனுக்கு நிதிஉதவி கடன்கள் தான் வழங்கி வருகின்றனர். ஒரு நாள் அவற்றை திரும்பத் தர வேண்டும். ஆயுதங்களும் அதில் அடக்கம். பழையதாகிப் போன இராணுவ ஆயுதம் மற்றும் தளவாடங்களை தள்ளி விட இது ஒரு சரியான சந்தர்ப்பம் அல்லவா!)

இதன் கடைசிக்கட்டமாக, உக்ரைனையும் தன் பக்கம் இழுத்து நேட்டோ அமைப்பில் சேரவைத்து போர் பயிற்சியும் ஆயுதங்களையும் கொடுத்து ரஷ்யாவுக்கு எதிராகக் களமிறக்கவும், போர் வந்தால் தனது ராணுவ நிலை களை உக்ரைனில் நிறுத்தவும் அமெரிக்கா முயற்சித்தது.

இதை உணர்ந்த ரஷ்யா, அமெரிக்காவின் ஒப்பந்தத்தை மீறிய செயலை நிறுத்த உக்ரைனுக்குத் தனது ஆதரவுப் பகுதியிலிருந்து அழுத்தம் கொடுத்தது நேட்டோ அமைப்பில் சேரக்கூடாது என்று. ஆனால் உக்ரைன் பாரம்பரிய மக்களின் ஆட்சி அடிபணியவில்லை.

மாற்று வழியாக ரஷ்யா உக்ரனை, உக்ரைனின் எல்லைப் பகுதி DONBASஐ தன்னாட்சி பெற்ற பகுதியாக அறிவிக்க ரஷ்யா வலியுறுத்தியது. கைது செய் யப்பட்ட போராளிகளை விடுவிக்க வேண்டும், அவர்கள் மீது எந்த வழக்கும் போடக்கூடாது என்ற நிபந்தனைகளை ரஷ்யா விதித்தது. அதற்கும் உக்ரைன் மறுத்துவிட்டது.

இதன் தொடர்ச்சியாக நடைபெற்றதே உக்ரைன் மீதான போர் பிரகடனம் மற்றும் தற்போதைய தாக்குதல்.

ரஷ்யா போர் எப்போது முடிவடையும்?

ரஷ்யா, தன்னைச் சுற்றி யாரும் – நேட்டோ நாடுகள் படையோ / அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளோ ரஷ்ய நாட்டை நெருங்காதவண்ணம் – ஒரு பாதுகாப்பு வளையத்தை அழகாக ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க என்ன அடிப்படைக் காரணம் என்பதைத் தெரிந்து கொள்வோம்:

உக்ரைன் நாடு, நேட்டோ (North Atlantic Treaty Organization) அமைப்பில் சேரத் துடிப்பதுதான் இந்த ரஷ்யா-உக்ரைன் போருக்குக் காரணமான முக்கியப் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது

கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வரும் இந்த உக்ரைன்-ரஷ்யா போரைத் தவிர்க்கத்தான் ரஷ்யா நினைத்தது. அதனால்தான், உக்ரைன் நாட்டுடன் இது விஷயமாகப் பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது ரஷ்யா.

உக்ரைன் நாடு ‘நேட்டோ’ பக்கம் போகக்கூடாது என்பது தான் ரஷ்யாவின் ஒரேயொரு முக்கிய கோரிக்கை. உக்ரைன் ஒருவேளை ‘நேட்டோ’ அமைப் பில் சேர்ந்துவிட்டால், ‘நேட்டோ’ அமைப்பில் உள்ள நாடுகள், ரஷ்ய நாட்டைச் சுற்றிலும் தங்களின் படை களைக் குவிக்கத் தொடங்கிவிடும். அது ரஷ்ய நாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு சூழலை ஏற்படுத்திவிடும்.

தற்போது நடக்கின்ற போரில், உக்ரைன் நாட்டுக்கு உதவும் வகையில் (ரஷ்யா விற்கு எதிராக), அமெரிக்கா நூற்றுக்கணக்கான அதிநவீன போர்க் கருவிகளை (javeline missile / rocket launcher) உக்ரைன் நாட்டிற்கு வழங்கியுள்ளது என்பது இங்கே முக்கியமாக குறிப்பிட்டாக வேண்டும். இதனைத்தான் ரஷ்யா முன்பே சரியாகக் கணித்திருந்தது. ஆனால் உக்ரைன் நாடு பிடிவாதமாக ‘நேட்டோ’ அமைப்பில் சேர, பலத்த முயற்சிகளைத் தொடர்ந்து இன்னமும் மேற் கொண்டு வருகிறது என்பதுதான், ரஷ்யாவிற்கு அதிக அளவில் கோபத்தை ஏற்படுத்துகிறது

இந்தப் போரில் உக்ரைன் நாட்டை ‘முழுமையாக ஆக்கிரமிப்பு’ செய்வது ரஷ்யாவின் நோக்கம் அல்ல என்பதை மிகவும் தெளிவாகக் கூறியுள்ளார் ரஷ்ய அதிபர் புடின்.

இன்னும் சரியாகச் சொல்லவேண்டும் என்றால் அதிபர் புடின் மிகவும் தெளி வாக (போர் தொடங்கும் முன்பே) கூறினார் ‘இந்தப் பிரச்சினை உக்ரைன் நாட்டுக்கும் ரஷ்யா நாட்டுக்கும் இடையே உள்ள பிரச்சினை. ஆகவே வேறு எந்த நாடும் இது விஷயத்தில் தலையிட வேண்டாம்’ என்று. காரணம், ஏற்கனவே USSR என்கிற அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற நாடுகளில், உக்ரைன் நாடும் ஒன்றாகும். அங்கு ரஷ்ய நாட்டைச் சேர்ந்த / ரஷ்ய கலாச்சாரம் கொண்ட மக்கள் அநேகம் பேர் உள்ளனர்.

இதுநாள் வரை, உக்ரைன் உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு எந்தவிதமான தொல்லையும் அல்லது அந்த நாடுகளுக்கு எதிரானதொரு எந்தவொரு நடவடிக்கையும் ரஷ்யா மேற்கொண்டது இல்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகளில், உக்ரைன் நாடுதான் பெரியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா தனது படைபலத்தால் எளிதாக உக்ரைன் நாட்டை போரில் தோல்வி யுறச் செய்து விட முடியும் என்று நினைக்கிறது. ஆனால் உக்ரைன் நாடோ (ரஷ்ய நாட்டை எதிர்த்துப் போரிடும் அளவுக்குத் தன்னிடம் போதிய படை பலம் / துருப்புகள் இல்லை என்ற காரணத்தால்) ‘நேட்டோ’ நாடுகள் உதவி கொண்டு, ரஷ்யாவைப் போரில் வென்றுவிடலாம் என்று இன்னமும் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது.

இப்பவும், உக்ரைன் நாடு ரஷ்யாவிடம் (சில முக்கிய நிபந்தனைகளுடன்) சரணடைய முன்வந்தால், போர் உடனே முடிவுக்கு வந்துவிடும் என்று ரஷ்ய அதிபர் புடின் முழுமையாக நம்புகிறார்.

சென்ற வாரம், உக்ரைன் அதிபர் நேட்டோ நாடுகள் அமைப்பில் இனி சேரப் போவதில்லை என கூறினார். மேலும் ரஷ்ய அதிபரோடு பேச்சு வார்த்தை நடத்தத் தயார் என்றும் கூறி இருந்தார். ஆனால் இதுவரை உக்ரைன்- ரஷ்யா நாடுகள் நடத்திய நான்கு கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில்தான் முடிந் தன. ரஷிய அதிபருடன் பேச்சை வார்த்தைக்குத் தயாரில்லை என்கிறார். மேலும் ரஷியா போரை நிறுத்தாவிட்டார் மூன்றாம் உலகப்போர் வெடிக்கும என்றும் எச்சரிக்கை விடுக்கிறார். மேலும் ரஷ்ய நாட்டின் மீது இன்னும் அதிக அளவில் தடைகள் விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். அவருக்குத் தெரியாது அமெரிக்காவின் நரித் தந்திரம்.

ஆனால் இதுவரை உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக – ரஷ்ய நாட்டை யாரும் / எந்த நாடும் அவ்வளவு எளிதில் நெருங்க முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம், ஐக்கிய நாடுகள் சபையில், உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கிய முதல் வாரத்தில் அமெரிக்கா மற்றும் அல்பேனியா நாடு ஆகிய இரண்டும் சேர்ந்து ரஷ்ய நாட்டிற்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டுவந்தன. ஆனால் அந்தத் தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ (Veeto power) அதிகாரத்தைப் பயன்படுத்தி, எளிதில் தோல்வி அடையச் செய்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐக்கிய நாடுகள் சபையில் தனக் கெதிராகக் கொண்டுவரும் எந்த ஒரு தீர்மானத்தையும் ரஷ்யாவால் சுலப மாகத் தோல்வி அடையச் செய்ய முடியும். ஆதலால் தான் மேற்கத்திய நாடு கள் குறிப்பாக அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகள் / அதன் படைகள் எதுவும் ரஷ்ய நாட்டை இதுவரை நெருங்க முடியவில்லை.

மேலும் சீனாவும் ரஷ்யாவும் பரஸ்பரம் நட்பு நாடுதான். அதனால் தான் ரஷ்யா, தனது படைபலம் / துருப்புகள் கொண்டு எளிதாக உக்ரைன் நாட்டை – தான் திட்டமிட்டபடி – தன் வசப்படுத்த – அதன் மீது அதீத தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தி வருகிறது.

அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகள் உக்ரைன் நாட்டுக்கு ஆயுத உதவிகள் இன்றுவரை செய்து வந்தபோதிலும், ரஷ்ய நாட்டிற்கு எதிராகப் போர் தொடுக்க எந்த நாடும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது

ரஷிய அதிபர் தனக்கு யாரும் தேவையில்லாமல் தொந்தரவு கொடுத்தால், தக்க பதிலடி கொடுப்பேன் என பகிரங்கமாகச் சொல்லிக்கொண்டு உக்ரைன் நாட்டின் மீது கடந்த மூன்று வாரங்களாகப் போர் புரிந்துகொண்டு இருக்கிறார்.

இருப்பினும், இந்தப் போரின் காரணமாக சொந்த நாட்டு மக்கள் (சுமார் இருபது லட்சத்திற்கும் மேல்) சொத்து சுகத்தை விட்டு விட்டு, அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறும் அவலம் மற்றும் போரினால் இந்த நிமிடம் வரை தொடர்ந்து ஏற்படும் உயிர் இழப்புகளை, சற்று நேரம் நினைத் துப் பார்த்தால், மனம் வலிக்கிறது.

போரினால் கொல்லப்படும் அப்பாவி மக்கள் – குறிப்பாக பெண்கள், குழந்தை கள் என்ன பாவம் செய்தார்கள்?

வல்லரசுகளின் வல்லாண்மையை வெளிப்படுத்த இவர்கள் உயிர் என்ன பரிசோதனைக் கூடமா?

நல்ல வேளை ரசாயன குண்டுகள் இந்தப் போரில் பயன்படுத்தப்படவில்லை. பயன்படுத்தவும் வாய்ப்பில்லை. ஆனாலும் போர் தேவையற்றது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published.