45வது சென்னை புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்
சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப் பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சி உலகளவில் புகழ்பெற்றது. இக்கண்காட்சியை பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு – பொங்கல் காலத்தில் பத்து நாட்கள் நடைபெறும். ஆனால் கொரோனா மூன்றாவது அலை கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறந்திருக்கும் நிலையில், புத்தகக் கண்காட்சியை மீண்டும் நடத்த அனுமதி தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தமிழக அரசின் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.
பிப்ரவரி 16-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடக்கவுள்ளது. காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். இந்தக் கண்காட்சியில் அரசு ஸ்டால்கள் 10 உள்பட 790 ஸ்டால்கள், தமிழ் எழுத்தாளர்களின் பெயர்களைத் தாங்கி எட்டு வீதிகள் அமைக்கப்பட் டுள்ளன. 16 லட்சம் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சி திறப்பதற்கு முன்பே ஆன்லைனில் 50 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. தற்போது ஆன்லைனில் டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. Bapasi.Com என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் நுழைவுச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என பபாசி தெரிவித்துள்ளது. கண்காட்சியில் அறுசுவை அரசு உணவகம் மற்றும் குடிநீர் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு இலவசம் எனக் கூறினர் பபாசி சங்கத்தினர்.
கொரோனா முன்னெச்சரிக்கையாக 65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் கர்ப்பிணிகள் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கண்காட்சியில் முதலமைச்சர் முகஸ்டாலின் வழக்கமாக வழங்கப்படும் நிதியுடன் ரூ. 50 லட்சத்தையும் சேர்த்து ரூ.1.25 கோடி வழங்கினார்.
இந்தப் புத்தகக் கண்காட்சி விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலைஞர் பொற்கிழி விருதுகளை வழங்கியுள்ளார். அதன்படி ஆறு பேருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலைஞர் பொற்கிழி விருதுகளை வழங் கினார். இதில் கலைஞர் பொற்கிழி மற்றும் பபாசி விருதுகளை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.
தமஸ், ஆசைதம்பி, வெண்ணிலாவுக்கு கலைஞர் பொற்கிழி விருது வழங் கப்பட்டுள்ளது. அதோடு பிரசன்னா ராமசாமி, பால் சக்காரியா, மீனா கந்த சாமிக்கும் கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்பட்டுள்ளது. பெண்ணழகு, திருவை பாபு, தேவிராவுக்கு பபாசி விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்.
இந்நிலையில், புத்தக்காட்சி விழா மேடையில் பேசிய முதலமைச்சர், சென்னை, மதுரை, கோவை போல தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் பபாசி புத்தகக் காட்சியை நடத்த வேண்டும் அதற்கான உதவிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் என்று கூறினார்.
மேலும், திராவிட இயக்கம் என்பது அறிவு இயக்கம் என்றும், திராவிட கழகத்தின் தலைமை அலுவலகத்தின் பெயரே அண்ணா அறிவாலயம் என்றும் கூறிய அவர், ஆண்டாண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டிருந்த தமிழ் சமூகத்திற்குப் புத்தகங்கள் மூலம் அறிவை வளர்த்தது திராவிட இயக்கம் என்று பெருமிதம் தெரிவித்தார்.
அத்துடன், மாநிலத்தின் அனைத்து போட்டி தேர்வுகளிலும் கட்டாயம் தமிழ் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று கூறிய முதலமைச்சர், அரசு ஊழியர்கள் தமிழ் மொழியில் கையெழுத்திடுவது கோப்புகளை தமிழில் எழுதுவதை அரசு ஊக்குவித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
தான் தற்போது உங்களில் ஒருவன் என்கிற தலைப்பில் தன் சுயசரிதை புத்தகத்தை எழுதியிருப்பதாகவும் அதை இந்த மாத இறுதிக்குள் வெளியிட இருப்பதாகவும், அதில் தம் இளமைக்காலம் முதல், தான் அரசியலில் அடியெடுத்த வைத்து காலம் வரையும், தான் கலந்துகொண்ட முதல் கூட்டம் வரை அனைத்து எழுதியிருப்பதாகவும் குறிப்பிட்டார். முதல் நாளி லேயே பல்லாயிரக்கணக்கான எழுததாளர்களும் புத்தக விரும்பிகளும் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.