ஓவியம் மற்றும் தமிழுக்காக வாழ்வையே அர்ப்பணித்த ஓவியர் வீர சந்தானம்
அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஓவியத் துறையில் பங்காற்றிய ஓவியர் வீர சந்தானம், தமிழ் பண்பாட்டின் ஆழத்திலிருந்து ரத்தமும் சதையுமாக வரைந்த ஓவியங்களால் எட்டுத்திக்கும் கொடிகட்டிப் பறந்தவர். ஓவியத் துறை யையும் கடந்து ஆடை வடிவமைப்பாளர், தமிழ் உணர்வாளர், நடிகர் என பன்முகம் கொண்டவராக விளங்கினார். ஆடை வடிவமைப்புத் துறையில் இவர் தேசிய விருது பெற்றுள்ளார். தமிழ் உணர்வாளரான இவர், பல்வேறு போராட் டங்களில் கலந்துகொண்டுள்ளார்.
பாரிசில் ஒரு ஓவியருக்குக் கிடைக்கும் வாழ்க்கையும் பாராட்டுதலும் உலகில் வேறு எங்கும் கிடைக்காது என்பார்கள். அந்தளவுக்கு மக்கள் உயர்வாக அந்த ஓவியரைக் கொண்டாடுவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் பிறக்கக்கூடாது. காற்றோட்டமில்லாத தெருவில் வாழ்ந்து எந்த ஒரு எதிர் பார்ப்பும் இல்லாமல் கலைக்காக வாழ்ந்தவர் வீர சந்தானம்.
ஓவியர் வீர சந்தானம் கும்பகோணம் உப்பிலியப்பன் கோயில் தெருவில் ஆகஸ்ட் 1, 1947ஆம் ஆண்டு பிறந்தவர். அவருடைய இளமை வாழ்க்கை முழுவதும் கோயில்களில் தான் கழிந்தது. பின்னர் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் படித்தார். தன்னுடைய மேற்படிப்பை சென்னை ஓவியக் கல்லூரி யில் தொடர்ந்தார். இவர் நடிகர் சிவகுமாரின் நெருங்கிய நண்பர். அவருடைய ஓவியப் புத்தகத் திற்கு ஹிந்து நாளிதழில் மதிப்புரை எழுதினார். மேலும் பிரபல ஓவியர் ஆதிமூலத்தின் நெருங்கிய நண்பர். இவர் படிப்புச் செலவை முழுவதும் பிரபல சிற்பி தனபால் ஏற்றுக்கொண்டார்.
1956ஆம் ஆண்டு பெரியாரை உட்கார வைத்து நேரடியாக அவர் சிலையை வடிவமைத்த பெருமை தனபாலைச் சாரும். அப்படிப்பட்ட சிற்பி யின் உதவினால் ஆதிமூலம் மற்றும் வீரசந்தானம் தங்களுடைய படிப்பைத் தொடங்கினார்கள்.
வீரசந்தானம் ராஜஸ்தானில் பனஸ்தலி வித்யா பீட் பல்கலைக்கழகத் தில் பிரஸ்கோ என்னும் சிறப்பு சுவரோவியக் கலையில் பயிற்சி பெற்றார். அந்தச் சமயம் இத்தாலி, ஜெய்ப்பூர் அஜந்தா வகை ஓவியங்களின் செய் முறையை தேவன்கி சர்மா என்பவரிடம் கற்றுக்கொண்டார். நாட்டுப்புறக் கலைகளின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்.
பழங்குடியின மக்களின் குறிப்பாக திரிபுரா மாநில மக்களின் நாகரிகத்தை ஓவியத்தில் கொண்டு வந்தார். கோயில் தூண்களில் இடம்பெற்றுள்ள 108 பறவைகளை ஒன்று சேர்த்து ஒரு ஓவியத்தை உருவாக்கினார். திசு நெசவு முறையில் அச்சுக் கலையைப் பயன்படுத்தி வடிவமைப்பை உருவாக்கினார். கண்ணனூர் கோவில்களில் உள்ள உருவங்களை உள்வாங்கி 108 தையம் உருவங்களை வடிவமைத்து திரைச்சீலைகளை உருவாக்கினார்.
தஞ்சை மாவட்டத்தில் விளார் என்ற ஊரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கூடத்தில் அமைந்துள்ள சிற்பங்கள் இவர் அமைத்துக் கொடுத் தது. அந்தச் சிற்பங்கள் ஈழத் தமிழர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்களை எடுத்துக்காட்டியது. பாலு மகேந்திராவின் ‘சந்தியா ராகம்’ திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார் வீர சந்தானம். பீட்சா, மகிழ்ச்சி, அவள் பெயர் தமிழரசி, அனேகன், அரவான், கத்தி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் இறுதிக் காலத்தில் ராஜேந்திரன் இயக்கிய ‘ஞானச்செருக்கு’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
நெசவாளர் சேவை மையத்தில் வேலைக்குச் சேர்ந்து சென்னை, பெங்களூரு, திரிபுரா போன்ற இடங்களில் வேலை செய்து வந்த அவர் 25 ஆண்டு விலங்கு களின் வாழ்க்கை பற்றிய புகைப்படத்திற்கான விருதை 1975 ஆம் களுக்குப்பின் விருப்ப ஓய்வு பெற்றார்.
வன ஆண்டு பெற்றார். சிறந்த ஓவியத்திற்கான தேசிய விருது 1988 ஆம் ஆண்டு பெற்றார். சிறந்த ஓவியங்களைப் படைத்தமைக்காக 1990 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் விருதும், அகில இந்திய தொழிற்துறை கண்காட்சியின் விருது 1997 ஆம் ஆண்டும் பெற்றார் வீர சந்தானம்.
ஜல்லிக்கட்டு போராட்டம், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியவர், தன் உடல்நிலையைக் கருதாமல் தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் வாழ்ந்து தன் வாழ்நாள் முழுவதும் கலைக்காக அர்ப் பணித்துக் கொண்டார்.
‘தானே’ புயலின்போது சென்னையில் மிகப்பெரிய ஓவியக் கண்காட்சியை நடத்தி நிதி வசூல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்துள்ளார்.
இறுதிக் காலத்தில் சென்னை திருவள்ளுவர் சாலை, பாரதிதாசன் தெருவில் வாழ்ந்துவந்த வீரசந்தானம் மாரடைப்பால் தனது 70வது வயதில் 13, ஜூலை 2017ஆம் ஆண்டு உயிர் துறந்தார்.