
இளம் கவிஞர்களை ஊக்குவித்து எழுதத் தூண்டுவதில் ஆர்வத்தோடு செயல்பட்ட வர் மறைந்த கவிஞர் பல்லவன். எங்காவது நல்ல கவிதைகளைப் படித்தால் அந்தக் கவிஞரின் செல் எண்ணைக் கேட்டுப் பாராட்டுவது அவர் பழக்கம்.
தமிழ் இலக்கியத்தில் கவிஞர்களின் தாக்கம் பெரியது. ஒவ்வொரு கவிஞரும் தன் உணர்ச்சிப்பெருக்கோடு படைக்கும் படைப்பு முத்தாய்ப்பாய் அமையும். பாரதி தொடங்கி பாரதிதாசன், கண்ணதாசன் முதல் அனைவரது கவிதைகளும் முத்தாய்ப் பாய் அமைவது அவர்களை அடையாளப்படுத்தும். அப்படி அனைவராலும் அடை யாளப்பட்ட கவிஞர் பல்லவன்.
“மம்மி என்றது குழந்தை
அம்மா என்றது மாடு…”
என்ற கவிதை மூலம் உலகத் தமிழர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் கவிஞர் பல்லவன்.
இவர் கவிதை மட்டுமல்லாது, சிறுகதை, கட்டுரை, ஆய்வுத் தொடர் எழுதுவதில் வல்லவர். இவர் இல்லத்தில் பெரிய சொத்தாகப் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அரிய நூல்களைச் சேமித்து வைத்திருக்கிறார். தமிழகத்தில் சில முக்கிய தலைவர்கள் கிடைக்காத நூல்களைப் பற்றிய குறிப்புகளை இவரிடம்தான் கேட்பார்கள். அது மட்டுமல்லாது, கேட்டமாத்திரத்தில் திராவிட இயக்கம் பற்றிய செய்திகளை விரல்நுனியில் வைத்திருப்பவர். தமிழ், தமிழர் கலாசாரம், பாரம்பரியம் பற்றியும் உலக விஷயங்களைப் பற்றியும் ஆதாரபூர்வமான தகவல்களை அள்ளித்தரும் தகவல் களஞ்சியம் கவிஞர் பல்லவன்.
தமிழர்களின் தொன்மைச் செய்திகளை போகிறபோக்கில் சொல்லிக்கொண்டே போவார். குறிப்பாக தமிழிலக்கணத்தில் ஒவ்வொரு சொல்லும் பொருள் குறித் தனவே என்பதுபோல, தமிழர்கள் ஒவ்வொரு பொருளுக்கும் அதன் வினை குறித்தே பெயர் வைத்தார்கள் என்பதற்கு, குளம் குளிப்பதற்கும், ஏரி நீர்பாசத்துக்கும், ஆறு அருந்துவதற்கும் தமிழர்கள் பெயர் வைத்தார்கள் என்று பொருள் பொதிந்த இயல்பான கருத்துக்களைச் சொல்லிச்செல்வார் கவிஞர் பல்லவன்.
பல்லவனின் இயற்பெயர் வீரரராகவன். திருக்கழுக்குன்றம் சொந்த ஊர். அங்கு பேரூராட்சி அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்துவந்தார்.
பல்லவன் ஏராளமான சிறந்த ஹைக்கூ கவிதைகளைப் படைத்து உச்சத்தைத் தொட்டவர்.சிறந்த புதுக்கவிதைகள், மரபுக் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் படைத்திருக்கும் கவிஞர் பல்லவன் இளம் கவிஞர்களை ஊக்குவித்து எழுதத் தூண்டு வதில் ஆர்வத்தோடு செயல்படுபவர். எங்காவது நல்ல கவிதைகளைப் படித்தால் அந்தக் கவிஞரின் செல் எண்ணைக் கேட்டுப் பாராட்டுவது அவர் பழக்கம்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பற்றிய செய்திகளை, அவர்கள் காலத்தில் நடந்த சம்பவங்களைக் கேட்பவர்களிடம் அப்படியே தேதிவாரியாகச் சொல்லக்கூடியவர் பல்லவன்.
திராவிட இயக்கக் கொள்கையோடும், தமிழ்ப்பற்றோடும் தொடர்ந்து எழுதிவரும் கவிஞர் பல்லவன் எழுதி தேனிசை செல்லப்பா இசையமைத்துப் பாடிய “கிழவனல்ல அவன் கிழக்கு திசை இருள் கிழித்தெழும் கதிரவன் உலகின் மிசை!” என்ற பாடல் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்து பல்லவனின் புகழ்பாடியது.
கவிஞர் பல்லவன் எளிமைக்கு உதாரணமாகத் திகழ்ந்தவர். தோற்றத்திலும் எளிமை, வாழ்க்கை முறையிலும் எளிமையைக் கடைப்பிடித்தவர்.
தமிழ்வழி கல்விக்குப் பாடுபட்ட தமிழ்ச்சான்றோர் பேரவையின் தொடக்கத்துக்கு ஒரு முக்கிய தூணாக விளங்கியவர் பல்லவன்.
இவரின் தமிழ்த்தொண்டைப் பாராட்டி பாவேந்தர் பாரதிதாசன் விருது, தந்தை பெரியார் தமிழிசை மன்றம் விருது, முகம் இதழின் மாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற கவிஞர் பல்லவன்,
