நோய்க் கண்ணாடி இதயம் காப்போம்

 நோய்க் கண்ணாடி இதயம் காப்போம்

மனித உடலில் 24 மணிநேரமும் இயங்கிக்கொண்டே இருப்பது இதயம். ஒரு நிமிடத்திற்கு 72 முறை நம் இதயம் துடிக்கும். இதயம் சீராக இயங்கினால் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். ஒரு நோய் குறித்து மருத்துவரிடம் சென்று பரிசோதித்தால்கூட மருத்துவர் நம் இதயத்தை ஸ்டதஸ்கோப் மூலம் பரிசோதித்துதான் நோயைக் கண்டறிவார். உடலில் எங்கு, எந்த பாதிப்பு என்றாலும் நாடித்துடிப்பு மூலம் இதயம் அதைக் காட்டிவிடும் நோய்க் கண்ணாடி இதயம். அந்த இதயம் ரத்தத்தோடு நெருங்கிய தொடர்புடையது. ரத்தம் அடர்த்தி யானாலோ, அடர்த்தி குறைந்தாலோ, விபத்து போன்ற பாதிப்புகளால் அதிக ரத்தம் வெளியேறினாலோ ஆபத்து. அதுமட்டு மல்ல, ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைந்தாலும் இதயம் இயங்காது.

பொதுமக்கள் இதயத்தை மனசாட்சியோடு ஒப்பிட்டு பேசுவது அதன் செயல்பாடுகளை வைத்துத்தான். இதய சுத்தியோடு பேசுகிறார் களா? அவள் இதயம் கல்லா? இரும்பா? இப்படிப் பேசுகிறான்? நெஞ்சறிஞ்சு நான் தப்பா பேசல சார்… என்று வழக்காடுவது வழக்கம். மருத்துவ உலகம் விரிவடைவதற்கு முன்பு மக்கள் இதயத்தைத்தான் மூளையாகப் பாவித்துப் பேசினார்கள். காரணம் அது நம்மோடு எப்போதும் ஓசை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். இதயத்தை மன தோடு இணைத்துப் பேசுவார்கள். மனம் என்பது எங்கிருக்கிறது என்ற ஆராய்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. அது மூளையில் இருக்கிறதா? இதயத்தில் இருக்கிறதா என்பது கேள்வி. ஆனால் பாமர மக்கள் மனம் இதயத்தில் உள்ளதாகத்தான் கருதினார்கள். அந்த இதயத்தின் செயல் பாடுகள் பற்றிப் பார்ப்போம்.

மனித இயத்தின் எடை அரைகிலோ கிராமிற்கும் குறைவாகவே இருக்கும். (நம் கைபிடி அளவுதான் இருக்கும்.)

மனிதனின் இதயத் துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ்நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன.

பெண்களின் இதயத்துடிப்பு ஆண்களின் இதயத் துடிப்பைவிட அதிகம். மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத் துடிப்பு வேகமாக இருக்கும்.

ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக ஒரு மில்லியன் பேரல் ரத்தத்தை பம்பு செய்கிறது. ஒரு பேரல் என்பது 117.34 லிட்டர்.

லப்டப் லப்டப் சத்தம் நம் இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும்போது உருவாகிறது.

இதயத்தின் வடிவம் – கூம்பு
இதயத்தை சூழ்ந்து உள்ள உறை – பெரிகார்டியம்
இதயம் அமைந்துள்ள பகுதி – மீடியாஸ்டினம்
இதய துடிப்பு என்பது – ஒரு நிமிடத்திற்கு 72 முறை
இதயம் சுருங்குவதற்கு பெயர் – சிஸ்டோல்
இதயம் வாரிவடைவதற்கு பெயர் – டயல்ஸ்டோல்
இதயத்தில் அமைந்துள்ள அறைகள் – 4
இதயத்தில் உள்ள இரண்டு வால்வுகள் பெயர் – ஆரிகல், வெண்ரிக்கல்
ஆரிகல், வெண்ரிக்கல் பிரிப்பது – செப்டா
இடது ஆரிகல் இடது வெண்ரிக்கல் பிரிப்பது – ஈரிழல் வால்வு (மிட்ரல் வால்வு)
வலது ஆரிகல் வலது வெண்ரிக்கல் பிரிப்பது – மூவிழல் வால்வு (பிறை சந்திர வால்வு)
சுத்த இரத்தத்தை எடுத்து செல்வது – தமணி
அசுத்த இரத்தத்தை எடுத்து செல்வது – சிறை
முடக்கு நோயால் பாதிக்கப்படும் உறுப்பு – இதயம்
இதயத்தில் இருந்து அசுத்த இரத்தத்தை எடுத்து செல்வது – நுரையீரல் தமணி
இதயத்தில் இருந்து சுத்த இரத்தத்தை எடுத்து செல்வது – நுரையீரல் சிறை
இதயம் முடக்கு நோய்க்கு மருந்து கண்டறுந்தவர் – வில்லியம் விதரிங்

இதயம் பாதுகாக்க டிப்ஸ்

மாதத்துக்கு ஒரு முறை உடல் எடையைச் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை மற்றும் இதய நோய்களுக்கு முக்கியக் காரணி உடல் பருமன். உடல் எடையின் பி.எம்.ஐ. (பாடி மாஸ் இண்டெக்ஸ்) 30-க்கு மேல் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதயத் துடிப்பின்போது, தசைகள் சுருங்கி விரிய நார்ச்சத்து முக்கிய மானது. பழத்தைச் சாறாக்கும்போது அதில் உள்ள நார்ச்சத்து போய்விடும். எனவே, பழங்களை அப்படியே கடித்துச் சாப்பிடுவது நல்லது. புகைப்பழக்கத் தைக் கைவிட வேண்டும்.

யோகா, காலை நடைப்பயிற்சி, உடற்பயிற்சிகள் தவிர, இதய நலத்துக்கு அதிகாலை மூச்சுப் பயிற்சி மிகவும் அவசியம்.

கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைக்கவேண்டும். இதய நாளங் களில் கொலஸ்ட்ரால் படிவதால் நாளடைவில் இறுகி, ரத்தம் செல்லும் பாதை அடைபட்டு மாரடைப்பு ஏற்படுகிறது

ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். இதற்கு நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய உப்பின் அளவை கவனிக்க வேண்டும்.

ஆரோக்கியமான வாழ்வைத் தொடங்கி மனஅழுத்தம் நீங்கி வாழ்வோம்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...