ஜூலை மாத ராசிபலன்கள்…!!

 ஜூலை மாத ராசிபலன்கள்…!!

மேஷம் :

மேஷ ராசி அன்பர்களே… இந்த மாதம் முயற்சிக்கேற்ப முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாக குறையும். அனுபவ அறிவின் மூலம் செயல்பாடுகளில் இருந்த தடை, தாமதங்களை அறிந்து கொள்வீர்கள். பழைய நினைவுகளின் மூலம் சோர்வு உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். விருப்பத்திற்கு மாறான சில செயல்கள் நடைபெறும். புதிய நபர்களின் தொடர்புகள் உண்டாகும். நபர்களின் தன்மைகளை அறிந்து கொள்வது நன்மையை ஏற்படுத்தும். பழக்கவழக்கங்கள் தொடர்பான விஷயங்களில் மாற்றங்கள் உண்டாகும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்குவதற்கான தருணங்கள் அமையும்.

வழிபாடு :
செவ்வாய்க்கிழமைதோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்துவர எண்ணத்தெளிவு உண்டாகும்.

ரிஷபம் :

ரிஷப ராசி அன்பர்களே… இந்த மாதம் உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது நன்மையை ஏற்படுத்தும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் இருக்கக்கூடிய உண்மைகளை ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. பார்வை தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். மறைமுகமாக இருந்துவந்த தடைகளின் மூலம் ஆதாயமான சூழ்நிலைகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், அதிகாரங்களும் மேம்படும். மனை வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டாகும்.

வழிபாடு :
மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்துவர கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

.

மிதுனம் :

மிதுன ராசி அன்பர்களே… இந்த மாதம் எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் ஆதாயம் உண்டாகும். பொருட்களை கையாளும் பொழுது சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். உணவு தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். கலை நுட்பமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கடன் சார்ந்த நெருக்கடிகள் படிப்படியாக குறையும். நெருப்பு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும்.

வழிபாடு :
சிவபெருமானை வழிபாடு செய்துவர முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும்.

கடகம் :

கடக ராசி அன்பர்களே… இந்த மாதம் குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்ல வேண்டும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் இழுபறியான காரியங்களை செய்து முடிப்பீர்கள். புதிய பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஆர்வம் ஏற்படும். வாகன வசதிகள் அதிகரிக்கும். திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கோபமின்றி பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் எண்ணிய இலக்கை அடைய இயலும். முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து எடுப்பது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.

வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் குருமார்களை வழிபாடு செய்துவர எதிர்பாராத உதவிகளின் மூலம் மாற்றமும், அனுகூலமும் ஏற்படும்.

சிம்மம் :

சிம்ம ராசி அன்பர்களே… இந்த மாதம் மனதில் நினைத்த எண்ணங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொருள் சேர்க்கைக்கான எண்ணங்கள் மற்றும் அதை சார்ந்த முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவமும், தொழில் சார்ந்த முன்னேற்றமும் உண்டாகும். பல வழிகளில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். குடும்ப பெண்கள் மற்றும் எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பகையை தவிர்க்க இயலும்.

வழிபாடு :
சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்துவர உத்தியோகம் தொடர்பான சிக்கல்கள் குறையும்.

கன்னி :

கன்னி ராசி அன்பர்களே… இந்த மாதம் தொழில் தொடர்பாக இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். காரியங்களில் இருந்துவந்த எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வழக்கு சார்ந்த பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உறவினர்களுக்கிடையே செல்வாக்கு மேம்படும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த காரியங்கள் நிறைவேறும். முயற்சிக்கேற்ப முன்னேற்றமும், அதற்கான அங்கீகாரமும் கிடைக்கும். காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் மேம்படும். வர்த்தகம் தொடர்பான துறைகளில் முதலீடுகளும், புதிய நபர்களின் ஆலோசனைகளும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

வழிபாடு :
வெள்ளிக்கிழமைதோறும் குபேர வழிபாடு செய்துவர தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும்.

துலாம் :

துலாம் ராசி அன்பர்களே… இந்த மாதம் செய்கின்ற முயற்சிகளில் எதிலும் திருப்தியற்ற சூழ்நிலைகள் உண்டாகும். அரசு மற்றும் சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது தொண்டர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவை அனுசரித்து எடுப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் மூலம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் மறைமுகமான ஆதரவு கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் வளர்ச்சிக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். செய்யும் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும்.

வழிபாடு :
திங்கட்கிழமைதோறும் பார்வதிதேவியை வழிபாடு செய்துவர வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் குறையும்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி அன்பர்களே… இந்த மாதம் மனதில் வித்தியாசமான இனம்புரியாத புதிய சிந்தனைகள் மேம்படும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்வியில் நுட்பமான விஷயங்களை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். மனைவி மற்றும் நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களையும், கருத்துக்கள் கூறுவதையும் குறைத்துக்கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதில் கவனம் வேண்டும்.

வழிபாடு :
தினமும் விநாயகரை வழிபாடு செய்துவர உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும்.

தனுசு :

தனுசு ராசி அன்பர்களே… இந்த மாதம் எதிர்பாராத பயணங்களின் மூலம் புதிய மாற்றங்களும், அனுபவங்களும் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதன் மூலம் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் மேம்படும். வெளியிடங்களில் கிடைக்கும் துரித உணவுகளை உண்பதை குறைத்துக்கொள்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ;டகரமான வாய்ப்புகள் உண்டாகும். வாகனப் பயணங்களில் தேவையான ஆவணங்களை எடுத்து செல்வது நல்லது. தம்பதியர்களுக்கு மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவும், ஒற்றுமையும் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்.

வழிபாடு :
சனிக்கிழமைதோறும் ஐயப்பனை வழிபாடு செய்துவர குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

மகரம் :

மகர ராசி அன்பர்களே… இந்த மாதம் மனதை உறுத்திக் கொண்டிருந்த பல விஷயங்களுக்கு முடிவுகள் கிடைக்கும். நினைத்த காரியங்களில் தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மனதில் அதிகரிக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆடம்பரப் பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் கோபமின்றி செயல்படுவதன் மூலம் பலரின் ஆதரவையும், நம்பிக்கையையும் பெற முடியும். கூட்டு வியாபாரத்தில் அனுசரித்து செல்ல வேண்டும். அரசியல்வாதிகளுக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். மேன்மை அடைவதற்கான எண்ணங்கள் மனதில் மேம்படும்.

வழிபாடு :
நவகிரகங்களில் இருக்கும் சனீஸ்வரரை வழிபாடு செய்துவர உடல் ஆரோக்கியமும், எண்ணத்தெளிவும் ஏற்படும்.

கும்பம் :

கும்ப ராசி அன்பர்களே… இந்த மாதம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அதை சமாளிப்பதற்கான தனவரவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டாகும். உடனிருப்பவர்களின் உதவிகளின்றி எண்ணிய காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்களும், அச்சமும் நீங்கி தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும்.

வழிபாடு :
செவ்வாய்க்கிழமைதோறும் ஐயனாரை வழிபாடு செய்துவர முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

மீனம் :

மீன ராசி அன்பர்களே… இந்த மாதம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுடனும், புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள். தனவரவுகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனை தொடர்பான பணிகளில் ஆதாயம் மேம்படும். புத்திக்கூர்மையான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். குழந்தைகளின் செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். திரவ உணவுகளை உட்கொள்வதன் மூலம் உஷ;ணம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தவறிப்போன சில பொருட்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.

வழிபாடு :
திங்கட்கிழமைதோறும் அர்த்தநாரீஸ்வரரை வழிபாடு செய்துவர குடும்ப ஒற்றுமை மேம்படும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...