இன்றைய தினப்பலன்கள் (05.06.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (05.06.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

உத்தியோகம் தொடர்பான பணிகளை திறமையுடன் செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நண்பர்களின் மூலம் மனமகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : திறமைகள் வெளிப்படும்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : தாமதங்கள் குறையும்.

ரிஷபம் :

எந்தவொரு காரியத்தையும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் செய்து முடிப்பீர்கள். மனதில் இருக்கும் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : சுறுசுறுப்பான நாள்.
ரோகிணி : சேமிப்புகள் மேம்படும்.
மிருகசீரிஷம் : முயற்சிகள் அதிகரிக்கும்.

.

மிதுனம் :

வியாபாரம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். திறமைக்கேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். விவசாயம் தொடர்பான விளைச்சலில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவெடுக்கவும். ஆசிரியர்களுக்கு பொறுப்புகள் அதிகரித்தாலும் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
திருவாதிரை : பொருட்சேர்க்கை ஏற்படும்.
புனர்பூசம் : அனுகூலமான நாள்.

கடகம் :

மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். சிறு தொழில் புரிபவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். தந்தை வழி சொத்துக்களின் மூலம் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.
ஆயில்யம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

சிம்மம் :

மனதில் குழப்பங்களும், தனம் தொடர்பான நெருக்கடிகளும் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். தொழில் தொடர்பான புதிய முடிவுகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். மனதில் இருக்கும் கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும்..

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : நெருக்கடியான நாள்.
பூரம் : சிந்தித்து செயல்படவும்.
உத்திரம் : காலதாமதம் உண்டாகும்.

கன்னி :

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். குழந்தைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திரம் : லாபகரமான நாள்.
அஸ்தம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
சித்திரை : அறிமுகம் உண்டாகும்.

துலாம் :

மனதில் இருக்கும் பலவிதமான குழப்பங்களுக்கு தெளிவும், உயர்வும் ஏற்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் சாதகமாக அமையும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்ளும் பொழுது அதற்கு தகுந்த ஆவணங்களையும், கோப்புகளையும் எடுத்து செல்ல வேண்டும். பழைய நினைவுகளின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : தெளிவு பிறக்கும்.
சுவாதி : அபிவிருத்தியான நாள்.
விசாகம் : மாற்றங்கள் உண்டாகும்.

விருச்சிகம் :

தனவரவுகள் எதிர்பார்த்தபடி இருந்தாலும் அதற்கேற்ற செலவுகள் உண்டாகும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சலுக்கு பின்பே நிறைவேறும். உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் அமையும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த சில பணிகளை செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
விசாகம் : செலவுகள் உண்டாகும்.
அனுஷம் : சாதகமான நாள்.
கேட்டை : இழுபறிகள் நீங்கும்.

தனுசு :

வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களையும், சந்தேக உணர்வுகளையும் தவிர்த்து பொறுமையுடன் செயல்பட வேண்டும். வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். நிலுவையில் இருந்துவந்த உத்தியோகம் தொடர்பான பணிகளை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : வாய்ப்புகள் ஏற்படும்.
பூராடம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம் : அனுகூலமான நாள்.

மகரம் :

பெரியோர்களின் ஆலோசனைகள் மற்றும் குடும்ப நபர்களிடம் ஒற்றுமை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பாதிப்புகள் குறைந்து சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : ஒற்றுமை மேம்படும்.
திருவோணம் : ஆதரவு கிடைக்கும்.
அவிட்டம் : வெற்றிகரமான நாள்.

கும்பம் :

குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ப முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்களிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் சிலருக்கு ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பழைய பாக்கிகள் கிடைக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
சதயம் : பொறுமை வேண்டும்.
பூரட்டாதி : மேன்மை உண்டாகும்.

மீனம் :

புதிய முயற்சிகளில் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை அதிகரிக்கும். கூட்டாளிகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இளைய உடன்பிறப்புகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பூரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : அனுகூலமான நாள்.
ரேவதி : ஆதரவு கிடைக்கும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...