வார ராசிபலன்கள் (31.05.2021 – 06.06.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்
மேஷம் :
மேஷ ராசி அன்பர்களே… இந்த வாரம் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் நிதானம் வேண்டும். தனவரவுகள் மேம்படும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்களின் வழியில் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நன்மையை ஏற்படுத்தும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். மாணவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் இருப்பவர்கள் அதிகாரங்களை சூழ்நிலைக்கேற்றவாறு பயன்படுத்துவது முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
வழிபாடு :
செவ்வாய்க்கிழமைதோறும் சென்னிமலையில் உள்ள முருகப்பெருமானை வழிபாடு செய்துவர உடல் ஆரோக்கியமும், மனக்கஷ்டமும் குறையும்.
ரிஷபம் :
ரிஷப ராசி அன்பர்களே… இந்த வாரம் மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் அலைச்சல்களுக்கு பின்பே சாதகமான முடிவுகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நன்மையை ஏற்படுத்தும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். போட்டிகள் தொடர்பான விஷயங்களில் நிதானத்துடன் முடிவெடுப்பது நன்மையை அளிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவான முடிவுகளை எடுக்க முடியும். குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மக்கள் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நன்மையளிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் அனுகூலமற்ற சூழ்நிலைகள் உண்டாகும்.
வழிபாடு :
திங்கட்கிழமைதோறும் தம்பதி சமேதராக இருக்கும் முருகப்பெருமானை தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும்.
மிதுனம் :
மிதுன ராசி அன்பர்களே… இந்த வாரம் மனதில் தேவையில்லாத பழைய நினைவுகளின் மூலம் குழப்பங்கள் உண்டாகும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்பட வேண்டும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் படிப்படியாக குறையும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
வழிபாடு :
செவ்வாய்க்கிழமைதோறும் காலபைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர ஆரோக்கியம் மேம்படும்.
கடகம் :
கடக ராசி அன்பர்களே… இந்த வாரம் மனதில் தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். பயணங்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். பணப்புழக்கம் திருப்திகரமாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் நேரிடலாம். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கேற்ப பொறுமையுடன் செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் முடிவுகள் எடுப்பது மேன்மையை ஏற்படுத்தும். அரசியல் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனைகளும், சக மாணவர்களின் உதவிகளும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
வழிபாடு :
சிவாலயத்தில் உள்ள அம்பாளை திங்கட்கிழமைதோறும் விரதமிருந்து வழிபாடு செய்துவர குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
சிம்மம் :
சிம்ம ராசி அன்பர்களே… இந்த வாரம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நன்மையை ஏற்படுத்தும். புதிய முயற்சிகளில் வித்தியாசமான முடிவுகள் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் குடும்ப விவகாரங்களை பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. பயணங்கள் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். சமூகப்பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சூழ்நிலைக்கேற்ப சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். கடன் தொடர்பான விஷயங்களில் பொறுமையை கையாளுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாலின மக்கள் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். சமூகப்பணிகளில் இருப்பவர்கள் கோபத்தை விடுத்து நிதானத்துடன் செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும்.
வழிபாடு :
தன்வந்திரி மந்திரத்தை தினமும் 48 முறை பாராயணம் செய்து பெருமாளை வழிபட்டு வர ஆரோக்கியம் மேம்படும்.
கன்னி :
கன்னி ராசி அன்பர்களே… இந்த வாரம் மனதில் தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் தெளிவும், தீர்க்கமான சிந்தனைகளும் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவடையும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவெடுப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவின் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். புதிய முயற்சிகளில் துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று முடிவெடுக்கவும். உறவினர்களின் விருப்பமின்றி அவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத பதவி உயர்வின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூகப்பணிகளில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்ல வேண்டும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் இருப்பது நல்லது.
வழிபாடு :
தினந்தோறும் மாலை நேரத்தில் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்துவர பழைய வாராக்கடன் திரும்ப கிடைக்கும்.
துலாம் :
துலாம் ராசி அன்பர்களே… இந்த வாரம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுடனும், புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். வாகனம் தொடர்பான பயணங்களில் போக்குவரத்து விதிகளுக்கு கட்டுப்பட்டு செயல்படுவது நல்லது. கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முயற்சிகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைத்தாலும் தகுந்த அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் ஆர்வம் குறைந்து பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் குறையும்.
வழிபாடு :
சஷ்டி அன்று முருகப்பெருமானுக்கு உகந்த கந்தரனுபூதி பாடிவர மன அமைதி மற்றும் தொழில் அபிவிருத்தி உண்டாகும்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி அன்பர்களே… இந்த வாரம் எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை கூறும் போது கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பாராத பணியிட மாற்றங்கள் சிலருக்கு சாதகமாக அமையும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுக்கிடையே உங்களின் மீதான நன்மதிப்புகளில் மாற்றங்கள் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். அரசியல் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அறிமுகங்கள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.
வழிபாடு :
ஆஞ்சநேயரின் புகைப்படத்தில் உள்ள வாலுக்கு பொட்டு வைத்து வழிபாடு செய்துவர பலவிதமான முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு :
தனுசு ராசி அன்பர்களே… இந்த வாரம் தடைபட்டுவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். தனம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நிலுவையில் இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவதன் மூலம் புரிதல் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசியல் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் விளையாட்டு சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் சாய்பாபாவிற்கு நைவேத்தியமாக பொட்டுக்கடலை, நாட்டுச்சர்க்கரை வைத்து படைத்து குழந்தைகளுக்கு கொடுக்க நன்மைகள் உண்டாகும்.
மகரம் :
மகர ராசி அன்பர்களே… இந்த வாரம் மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் அமைதியின்மை ஏற்படும். மற்றவர்களின் பேச்சுக்களை கேட்டு முடிவு எடுப்பதை குறைத்துக்கொள்வது நல்லது. திட்டமிட்ட காரியங்களை செய்து முடிக்க முயற்சிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடன் பணிபுரிபவர்களிடம் தேவையற்ற விஷயங்களையும், ரகசியங்களையும் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. அரசியல் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது தீர விசாரிப்பது நன்மையை அளிக்கும். மாணவர்கள் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து எழுதிப் பார்ப்பது முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
வழிபாடு :
வாரந்தோறும் சனிக்கிழமை அன்று சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி, கருங்குவளை மலர் சாற்றி வழிபாடு செய்துவர மேன்மை உண்டாகும்.
கும்பம் :
கும்ப ராசி அன்பர்களே… இந்த வாரம் குடும்ப உறுப்பினர்களை எண்ணங்களை அறிந்து அதற்கேற்ப செயல்படுவது நல்லது. வாழ்க்கைத்துணைவரின் உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். எதையும் செய்து முடிக்கும் தன்னம்பிக்கையை மேம்படுத்திக் கொள்வது நல்லது. போட்டிகள் தொடர்பான விஷயங்களில் நிதானத்தோடு செயல்படுவது அவசியமாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் புகழ் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத அலைச்சல்கள் ஏற்பட்டாலும் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாலின மக்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. அரசியல் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நடைபெறும்.
வழிபாடு :
சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தயிர் சாதம் நைவேத்தியம் செய்து வழிபாடு செய்துவர மகிழ்ச்சி உண்டாகும்.
மீனம் :
மீன ராசி அன்பர்களே… இந்த வாரம் எதையும் செய்து முடிக்கும் பொழுது யோசித்து முடிவெடுப்பது நன்மையை அளிக்கும். நிதானமான பேச்சுக்களின் மூலம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தேவையில்லாமல் மற்றவரின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது உங்களின் மீதான அவப்பெயர்களை தவிர்க்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அவ்வப்போது சிறு சிறு கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதங்களும் தோன்றி மறையும். உத்தியோகத்தில் மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதுவிதமான அனுபவங்களின் மூலம் மனதளவில் மாற்றங்கள் ஏற்படும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்கள் புதிய முடிவுகளை எடுக்கும் பொழுது கட்சி சார்ந்த உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நன்மையை ஏற்படுத்தும். விவசாயம் தொடர்பான பணிகளில் பாசன வசதிக்கேற்ப விளைச்சல்கள் தேர்வு செய்வது லாபத்தை மேம்படுத்தும்.
வழிபாடு :
ராகு காலத்தில் துர்க்கைக்கு சகஸ்ரநாமம் ஸ்லோகம் பாடி வழிபாடு செய்துவர முயற்சிகள் ஈடேறும்.