மே மாத ராசிபலன்கள்…!! ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 மே மாத ராசிபலன்கள்…!! ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :
மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் அரசு தொடர்பான காரியங்களில் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகளின் மூலம் திருப்தியான சூழ்நிலைகள் அமையும். தடைபட்டுவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். உறவுகளிடத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். வாகனங்களை சரி செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபமும், அறிமுகமும் கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
வழிபாடு :
முருகப்பெருமானை வழிபாடு செய்துவர மனக்கஷ்டங்கள் குறையும்.

ரிஷபம் :
ரிஷப ராசி அன்பர்களே இந்த மாதம் மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். நண்பர்களின் உதவிகளால் தனவரவுகள் மேம்படும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். விருப்பமானவர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். போட்டிகளில் பங்கேற்று பாராட்டுகளை பெறுவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகளை அறிந்து கொள்வதற்கான சூழல் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். திரவம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் அமையும்.
வழிபாடு :
விஷ்ணு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துவர பணப்பிரச்சனைகள் தீரும்.

மிதுனம் :
மிதுன ராசி அன்பர்களே இந்த மாதம் பிள்ளைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அநாவசியமான செலவுகளை குறைத்து சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நுட்பமான விஷயங்களில் ஆர்வமும், ஈடுபாடும் அதிகரிக்கும். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் சாதகமாகும். தனம் சார்ந்த விஷயங்களில் அலைச்சல்கள் ஏற்படும். அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கேற்றவாறு அனுசரித்து நடந்துகொள்வது நன்மையளிக்கும். நெருக்கமானவர்களிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.
வழிபாடு :
பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபாடு செய்துவர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

கடகம் :
கடக ராசி அன்பர்களே இந்த மாதம் குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விவசாய பொருட்களின் மூலம் தனவரவுகள் மேம்படும். கால்நடைகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். முக்கியமான செயல்பாடுகளில் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். பயணங்களால் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் எதையும் சமாளிக்கும் திறமையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். மனைவி வழி உறவுகளின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.
வழிபாடு :
விநாயகப்பெருமானை வழிபாடு செய்துவர மனதில் இருந்துவந்த குழப்பங்கள் அகலும்.

சிம்மம் :
சிம்ம ராசி அன்பர்களே இந்த மாதம் சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெறுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத பொறுப்புகள் கிடைக்கும். சில செயல்களை பக்குவமாகப் பேசி செய்து முடிப்பீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.
வழிபாடு :
வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபாடு செய்துவர தடைகள் விலகும்.

கன்னி :
கன்னி ராசி அன்பர்களே இந்த மாதம் உழைப்பிற்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவும் பொழுது சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய முயற்சிகளால் எண்ணிய வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். காணாமல் போன சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழல் ஏற்படும்.
வழிபாடு :
புதன்கிழமைகளில் பெருமாளை வழிபாடு செய்துவர வியாபாரம் தொடர்பான இன்னல்கள் குறையும்.

துலாம் :
துலாம் ராசி அன்பர்களே இந்த மாதம் வியாபாரம் தொடர்பான பணிகளில் வாடிக்கையாளர்களிடம் கனிவு வேண்டும். வீட்டிற்கு தேவையான வசதியை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பழைய கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டும் பணி தொடர்பான முயற்சிகள் கைகூடும். இடமாற்றம் பற்றிய சுபச்செய்திகள் கிடைக்கும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.
வழிபாடு :
குலதெய்வத்தை வழிபாடு செய்துவர மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம் :
விருச்சிக ராசி அன்பர்களே இந்த மாதம் மனதில் இருக்கும் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவர்களை சந்திப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். நண்பர்களின் உதவிகள் மூலம் நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதில் தேவையற்ற பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு மறையும். எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் உடல் சோர்வு ஏற்பட்டு மறையும். பயணங்களின் மூலம் மனதில் மாற்றமும், புரிதலும் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.
வழிபாடு :
செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபாடு செய்துவர முயற்சிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும்.

தனுசு :
தனுசு ராசி அன்பர்களே இந்த மாதம் எதிர்பாராத இடமாற்றங்களால் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் லாபகரமான சூழல் அமையும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். பிள்ளைகளின் வழியில் மனமகிழ்ச்சி உண்டாகும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பார்த்த தனவரவுகள் திருப்திகரமாக இருக்கும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் நீங்கி புத்துணர்ச்சியான சூழல் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தம்பதிகளுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
வழிபாடு :
வியாழக்கிழமைகளில் குருபகவானை வழிபாடு செய்துவர நன்மைகளும், மகிழ்ச்சியும் உண்டாகும்.

மகரம் :
மகர ராசி அன்பர்களே இந்த மாதம் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நுட்பமான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கூட்டாளிகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். எதிர்பாராத தனவரவுகளால் சேமிப்புகள் உயரும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அறிமுகமில்லாதவர்களுக்கு உதவும்போது கவனம் வேண்டும்.
வழிபாடு :
பைரவரை வழிபாடு செய்துவர எல்லா பிரச்சனைகளும் சுமூகமாக முடிந்து குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

கும்பம் :
கும்ப ராசி அன்பர்களே இந்த மாதம் சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். செல்வச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். பழைய நினைவுகளின் மூலம் மனதில் மாற்றம் பிறக்கும். மாணவர்கள் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழல் உண்டாகும். நிர்வாகத்திறமைகள் வெளிப்பட்டு பாராட்டப்படுவீர்கள். தானிய சம்பத்துக்களால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பிரபலங்களின் அறிமுகத்தால் சாதகமான சூழல் உண்டாகும்.
வழிபாடு :
மாரியம்மனை வழிபாடு செய்துவர எதிர்ப்புகள் விலகும் மற்றும் காரிய வெற்றி உண்டாகும்.

மீனம் :
மீன ராசி அன்பர்களே இந்த மாதம் முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். பொறுமையுடன் செயல்பட்டு திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். வாக்குவன்மைகளின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்ப பிரச்சனைகளில் மற்றவர்களின் தலையீட்டை தவிர்க்கவும். கொடுத்த கடன் வசூலாகும். உடைமைகளில் கவனம் வேண்டும். செய்யும் பணிகளில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனை சார்ந்த செயல்பாடுகளில் லாபம் மேம்படும்.
வழிபாடு :
நரசிம்மரை வழிபாடு செய்துவர நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...