‘சக்ரா’ படம் லாபமா, நஷ்டமா? ‘அடுத்து என்ன செய்வது’ – விஷால்
‘சக்ரா’ திரைப்படத்தின் மூலம் பெரிதாக லாபம் கிடைக்காததால், அடுத்த என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் விஷால்.
‘சக்ரா’ படம் லாபமா, நஷ்டமா? ‘அடுத்து என்ன செய்வது’ என்ற யோசனையில் விஷால்
‘சக்ரா’ மூலம் பெரிதாக லாபம் இல்லை
தயாரிப்பை கைவிடலாம் என்ற முடிவில் இருந்த விஷாலுக்கு, ‘சக்ரா’ திரைப்படத்தின் தோல்வி மேலும் அழுத்தத்தை தந்துள்ளதாம்
ஆரம்பத்தில் தொடர் கமர்ஷியல் வெற்றிகளை தந்து வந்த விஷாலுக்கு 2018 ல் மித்ரன் இயக்கத்தில் வெளியான ‘இரும்புத்திரை’ திரைப்படம் தான், கடைசி வெற்றிப்படமாக அமைந்தது. நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் சறுக்கல்களை சந்தித்து வந்த
விஷால் தயாரிப்பை கைவிட்டு, வெளி தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்து கல்லா கட்டலாம் என்ற முடிவில் இருக்கிறாராம் விஷால்.
சமீபத்தில் விஷாலின் நடிப்பில் ‘சக்ரா’ திரைப்படம் வெளியானது.. கொரனோ, ஊரடங்கு போன்ற பிரச்சனைகளால் குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாவது தள்ளிப்போனது. இதன் பிறகு ஒரு வழியாக சமீபத்தில் வெளியானது ‘சக்ரா’ திரைப்படம்.. ‘இரும்புத்திரை’ படம் அளவிற்கு இந்த திரைப்படமும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது.
தற்போதைய டெக்னாலஜி உலகில் என்னென்ன முறைகேடுகள் செய்து மக்களை ஏமாற்றலாம் என்பதை குறித்து, இந்த படத்தின் திரைக்கதை அமைந்திருந்தது..23 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழகத்தில் 425 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது.. இந்நிலையில் இப்படத்தின் தற்போதைய பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
425 திரையரங்கில் வெளியான இந்த திரைப்படத்தின் தற்போதைய நிலவரப்படி திரையரங்குகளின் ரைட்ஸ் மூலம் கிடைத்த வசூல் 11 கோடி 80 லட்சம்.. இதில் 7 கோடி 30 லட்சத்தை திரையரங்கிற்கு திருப்பி தர வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறாராம் விஷால்.
மேலும் இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை சன்டிவி கேட்ட போது, தர மறுத்து விட்டார் விஷால்.. ‘சக்ரா’ படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை ஏற்கனவே அடமானம் வைத்து கடன் வாங்கியதால், சன்டிவி உடன் ஒப்பந்தம் போட விஷால் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளி வந்தன.
23 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ‘சக்ரா’ திரைப்படத்தின் மூலம் பெரிதாக லாபம் கிடைக்காததால், அடுத்த என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் விஷால்.. ஏற்கனவே தயாரிப்பை கைவிடலாம் என்ற முடிவில் இருந்த விஷாலுக்கு, ‘சக்ரா’ திரைப்படத்தின் தோல்வி மேலும் அழுத்தத்தை தந்துள்ளதாம்.. இதனால் விஷாலின் தயாரிப்பில் வெளிவந்த கடைசி படமாக ‘சக்ரா’ இருக்கும் என்கின்றனர் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.