12 மணி நேரத்தில் ஒரு காதல் – குறும்பட விமர்சனம் | கமலகண்ணன்
12 மணி நேரத்தில் ஒரு காதல் என்ற மலேசிய குறும்படம் சரியாக 30 நிமிடங்கள். அமெரிக்க மாப்பிள்ளையோடு திருமணம் என முடிவு செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு சென்ற அடுத்த நாள் திருமணம் என்ற சூழ்நிலையில், விமானம் ஏறுவதற்காக, விமான நிலையம் வருகிறார் கதாநாயகி.
அப்பொழுது “ஹாய்” என்ற குரலோடு கதாநாயகன் கதாநாயகியை அழைக்கும் ஓசையோடு படம் துவங்குகிறது.
கதாநாயகன் அர்ஜுன் கதாநாயகி யாத்ராவின் கல்லூரியில் படித்தவர். ஆனால் கதாநாயகி யாத்ராவுக்கு கதாநாயகன் அர்ஜுனை யாரென்றே தெரியவில்லை என்பதும் கடந்த ஐந்து வருடமாக யாத்ராவை ஒருதலையாய் காதலித்து வந்திருக்கிறார் என்பதும் விமானம் ஏறும் சில நிமிடங்களுக்குள் அர்ஜுனின் காதலை யாத்ராவுக்கு புரியவைக்கும் அவசியத்தில் இருக்கும் சூழ்நிலை என்பதில் ஒரு புதுவிதமான படமாக நிமிர்ந்து உட்கார வைக்கிறது.
கதாநாயகன் கதாநாயகியிடம் தனக்கு யாத்ராவுடன் ஐந்து நிமிடங்கள் பேசுவதற்கு நேரம் தருமாறு கேட்கிறார். அதற்குள் விமானம் 12 மணி நேரம் தாமதம் என்று அறிவிப்பு வருகிறது. தன் தந்தையிடம் சென்று விளக்கி அனுமதி கேட்கிறார் யாத்ரா.
“கொஞ்ச நேரம் பேசுவதால் என்ன ஆகிவிடப் போகிறது ஆனால் இதில் தோல்வி அடைந்தால் அவன் தான் எடுப்பதெல்லாம் தோல்வி அடைந்து விடுவான்.” என்று ஒரு நேர்மறையான நோக்கத்தோடு அவர் தந்தை அனுமதி அளிக்கிறார்.
12 மணிநேரம் நேரத்தில் அடுத்ததாக அவன் காதலை சொல்ல இருவரும் காபி ஷாப்பில் உட்கார்ந்து பேசத் தொடங்குகிறார் அர்ஜுன். காபி ஷாப்பில் அவர்களுடைய பேச்சு துவங்குகிறது. முதலில் சிரிப்பு வருகின்ற அளவிற்கு பேசும் பொழுது நமக்கும் கூடவே சிரிப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை.
ஆனாலும் அடுத்தடுத்த பேச்சில் அவர் எப்படி சுவாரஸ்யமாக யாத்ராவிடம் தன்னுடைய காதலை அழுத்தமாக பதிவு செய்கிறார் என்பதுதான் அடுத்தடுத்து வரும் திரைக்கதையின் காட்சிகள்.
அதிலும் ஒரு குறிப்பாக யாத்ராவுக்கு உயரம் என்றால் பயம். அர்ஜுன் யாத்ராவை உயரத்தில் கொண்டு போய் நிறுத்தி, எப்படி இருக்கிறது என்று கேட்க,
“எனக்கு பயமாக இருக்கிறது. பொதுவாக பெண்களுக்கு பிடித்த விசயத்தை பேசித்தான் காதலை சொல்வார்கள். ஆனா நீ என்ன பண்ணுற?” என்று கேட்கிறார் யாத்ரா.
“வாழ்க்கையில் பிடிக்காத விசயத்தை பிடிக்க வைக்கிறதுதான் காதல்.” என்று சொல்கிறார் அர்ஜுன்.
“உயரத்தில் இருந்து உலகத்தை பார்த்தே இல்லல்ல. இப்போ பாருங்க. அழகா இருக்கா?” என்று கேட்கிறார் அர்ஜுன்.
“பயமா இருக்கு.” என்று சொல்கிறார் யாத்ரா.
“அழகா இருக்கா?” என்று கேட்கிறார் அர்ஜுன்.
“ம்ம்ம்ம்.” என்று சொல்கிறார் யாத்ரா.
“அவ்வளவுதான்.” என்று சொல்கிறார் அர்ஜுன்.
“உனக்கு காதல் என்றால் பயம். அப்பொழுது காதலை கேட்டால் நீ மறுத்துவிட்டால் என்ன என்ற பயம் மட்டுமே என்னை இவ்வளவு நாள் நிறுத்தி இருக்கிறது.” என்று சொல்லும் வசனம் சபாஷ் என்று சொல்ல வைக்கிறது.
இறுதி முடிவில் அர்ஜுன் எப்படித் தன் காதலை பதிய வைத்தானா இல்லையா அமெரிக்க மாப்பிள்ளையை யாத்ரா திருமணம் செய்தாளா அல்லது நம் கதாநாயகன் அர்ஜுனை திருமணம் செய்தாளா என்பதுதான் கிளைமாக்ஸ்.
30 நிமிடங்கள் இந்த படத்தை பாருங்கள். ஒரு அழுத்தமான காதலை ஒரு குறும்படத்தில் சொல்லிவிட முடிகிறது என்றால், அந்த இயக்குனர் மதன் அவர்களும் மற்றும் அதன் ஒளிப்பதிவாளர் நாதன்குமாரன் அவர்களும் திறமையானவர்கள் என்று சொல்லியே ஆகவேண்டும்.
மலேசிய மண்ணில் எடுக்கப்பட்ட கட்சியாக இருந்தாலும் அதை அப்படியே நம் மண்ணின் மணம் மாறாமல் தந்திருப்பதை மறுக்க முடியவில்லை. அந்த இயக்குநர் மதன் அவர்களுக்கு ஒர் ஜே.
மிகப் பெரிய கதாநாயகி போல உணர்வுகள் அத்தனையும் தன் இரு விழிகளில் வெளிப்படுத்தி இருக்கும் விடியா லியானா வை ஆக சிறந்த சிறந்த நடிகை என்று சொல்ல வைக்கிறது. அதிலும் ஒற்றை சிரிப்பில் பார்க்கின்ற அத்தனை ஆண்களும் கதாநாயகனாகவே மாறிவிட தோன்றும் அப்படி ஒரு நடிப்பு.
கதாநாயகன் தன் பரிதாபமான முகத்தோடு, பொங்கும் காதலை தன் முகத்தில் கொண்டு வந்து காதலின் வலியை கதாநாயகியின் கண்களுக்கு கொண்டு செல்கிறார் மனோ என்பதுதான் சிறப்பு.
அனைத்தையும் பார்க்கின்ற அத்தனை பெண்களும் இவன் நமக்கான கணவனாக தோன்றி விட மாட்டானா என்ற உணர்வை பதிய வைத்திருக்கிறார்.
இணைந்து நடித்திருக்கிற அண்ணாமலை, சுதா, ஈஸ்வர் ஜி, சதீஸ், எம்.லோகன், லோகா, சங்கரி, ஜி.யுவன் ராஜ், அஸ்வினி, ஷாமினி, நேத்யா, மாகேஸ் & லூக் அத்தனை நடிகர்களும் தங்களின் பாத்திரங்களை உணர்ந்து நடித்து நடித்திருக்கிறார்கள். யாத்ராவின் அப்பாவின் மீது யாத்ராவின் அம்மா நெகிழ்வாக தோளில் சாய்து கொள்வது நெகிழ்ச்சி.
யாத்ராவின் அப்பாவாக வரும் நடிகர் மிகச்சிறந்த அப்பாவாக வாழ்ந்திருப்பதை பார்க்கும் பொழுது படத்திற்கு இன்னும் வலு சேர்க்கிறது.
கருத்தையும் செய்தியும் கதையாக திரைக்கதையாக பதிவு செய்து அதை குறும்படமாக எடுத்து வெளியிட்ட இயக்குனர் மதன் அவர்களுக்கு ஒரு பெரிய சபாஷ்.
ஒளிப்பதிவு அற்புதம். படம் பார்ப்பது போன்று இல்லாமல் நாம் அந்த அரங்கத்தில் இருப்பதை போன்ற உணர்வை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் நாதன்குமாரன். அவர்களுக்கு ஒரு சபாஷ்.
பின்னணி இசை சிறப்பாக ஈர்ப்பதோடு கதையோடு ஒன்றிப்போக செய்ய விட்டது இசையமைப்பாளர் லிங்கஸ் (டி.ஜே.பி ரெக்கார்ட்ஸ்) அவர்களுக்கு ஒரு சபாஷ். உச்சகட்டகாட்சியில் கதாநாயகி யாத்ரா வெட்கப்படும் காட்சியின் பின்னணி இசை அட்டகாசம்.
படத்தொகுப்பு தினேஸ்வரன் போலே அவர்கள் நறுக் என படத்தை பால் போல எடுத்தப் படத்தை -> வெண்ணை -> நெய்யாக மாற்றி தொகுத்து கொடுத்திருக்கிறார்.
காதலின் கவிதையாக இருக்கும் இந்தப்படத்தில் உருவாக்கிய இத்திரைப்பட குழுவினர் அத்தனை பேருக்கும் ஒரு சபாஷ். இந்த முப்பது நிமிடங்களில் நீங்கள் அந்த குடும்பமாக வாழ்ந்து விட்டீர்கள்.
கதாநாயகனின் நண்பர்களாக வரும் இருவரும் இன்னும் சிறப்பாக நடித்து இல்லை இல்லை குதித்து அந்த இடத்தை அதிர வைத்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
நிச்சயமாக இந்த குடும்பத்தை அனைவரும் நேரம் ஒதுக்கி பாருங்கள். ஒரு நல்ல படத்தை பார்த்த உணர்வு நிச்சயமாக உங்களுக்கு கிடைக்கும். நிச்சயமாக இப்படி ஒரு படத்தில் திரைக்கதையும் விதமும் கவர்ந்து இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும் சபாஷ் இயக்குனர்…
தயரிப்பாளர் குணா பாய் அவர்களுக்கு மிகப் பெரிய நன்றி.
அந்த படத்தை கீழே உள்ள இணைப்பில பார்க்க…
1 Comment
மிக்க நன்றி கமலகண்ணன் சார், உண்மையில் ஈர்க்கப்பட்டேன்
சிறந்த விமர்சனம்
Tq so much Kamalakannan sir, really impressed
Great review