வரலாற்றில் இன்று – 06.11.2020 சர்வதேச போர் மற்றும் ஆயுத மோதல்களின் சுற்றுச்சூழல் சுரண்டல் தடுக்கும் தினம்

 வரலாற்றில் இன்று – 06.11.2020 சர்வதேச போர் மற்றும் ஆயுத மோதல்களின் சுற்றுச்சூழல் சுரண்டல் தடுக்கும் தினம்

சர்வதேச போர் மற்றும் ஆயுத மோதல்களின் சுற்றுச்சூழல் சுரண்டல் தடுக்கும் தினம் நவம்பர் 6ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

போர் மற்றும் ஆயுத மோதல்களால் இயற்கை பலவிதங்களில் சேதமடைகிறது. பயிர்கள், தண்ணீர் விஷமாதல், காடுகள் எரிதல், காடுகள் அழிக்கப்படுதல் போன்ற மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இது தவிர பல தொழில்நுட்பங்களும் அழிக்கப்படுகின்றன. எனவே, சுற்றுச்சூழல் பாதிக்கக்கூடாது என்பதற்காக ஐ.நா.சபை 2001ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது.

ஜேம்ஸ் நெய்ஸ்மித்

கூடைப்பந்து கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் 1861ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி கனடாவில் பிறந்தார்.

இவர் கனடா விளையாட்டு கல்வி ஆசிரியரும், அமெரிக்க கால்பந்தாட்டத்தின் தலைக்கவசத்தை கண்டுபிடித்தவரும் ஆவார். 1891ஆம் ஆண்டு இவர் முதல் 13 கூடைப்பந்து சட்டங்களை கூறியுள்ளார். இச்சட்டங்களில் 12 இன்று வரை ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுகின்றன.

இவர் 1891ஆம் ஆண்டு மாசசூசெட்ஸில் விளையாட்டு கல்வி ஆசிரியராக இருக்கும்பொழுது கூடைப்பந்து விளையாட்டை கண்டுபிடித்தார். 13 ஆண்டுகளுக்குப் பின்னர் 1904ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் சோதனை போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டு, 1936ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக கூடைப்பந்து விளையாட்டு கொண்டுவரப்பட்டது.

1898ஆம் ஆண்டு நெய்ஸ்மித், கேன்சஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகவும், முதல் கூடைப்பந்து பயிற்றுனராகவும் பணியாற்றினார். இவர் 1939ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1814ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி சக்சபோனைக் (இசைக்கருவி) கண்டுபிடித்த அடோல்ப் சக்ஸ் என்பவர் பெல்ஜியத்தில் பிறந்தார்.

1872ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி அமெரிக்கப் பொறியியலாளர் ஜார்ஜ் கார்டன் மீடு மறைந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...