இன்றைய தினப்பலன்கள் (06.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (06.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

தொழில் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். மனதில் ஆன்மிகம் தொடர்பான ஆர்வம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி ஆதரவுகளின் மூலம் வெற்றி அடைவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அஸ்வினி : பயணங்கள் சாதகமாகும்.
பரணி : வெற்றிகரமான நாள்.
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம் :

எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் திறமையும், வேகமும் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான பணிகளின் மீதான ஈர்ப்பு உண்டாகும். மாணவர்களுக்கு ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : தனவரவுகள் கிடைக்கும்.
ரோகிணி : துரிதம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

மிதுனம் :

மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும்போது சிந்தித்து செயல்படவும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்களில் காலதாமதம் உண்டாகும். மனதில் தோன்றும் பல நினைவுகளின் மூலம் குழப்பமான சூழ்நிலைகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்பும் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மிருகசீரிஷம் : காலதாமதம் உண்டாகும்.
திருவாதிரை : அன்பு அதிகரிக்கும்.
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.

கடகம் :

வாடிக்கையாளர்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். பங்காளி வகை உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : பொறுமை வேண்டும்.
பூசம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
ஆயில்யம் : ஆதரவான நாள்.

சிம்மம் :

எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்தியான சூழலை உண்டாக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மகம் : உதவிகள் கிடைக்கும்.
பூரம் : திருப்தியான நாள்.
உத்திரம் : விழிப்புணர்வு வேண்டும்.

கன்னி :

உறவுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வீடு, வாகனம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். செய்யும் முயற்சிகளில் எதிர்பார்த்த எண்ணங்கள் ஈடேறும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : தாமதங்கள் அகலும்.
சித்திரை : எண்ணங்கள் ஈடேறும்.

துலாம் :

குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். முயற்சிகளில் இருந்துவந்த மறைமுகமான தடைகள் அகலும். மாணவர்களுக்கு விளையாட்டிலும், கல்வியிலும் ஆர்வம் மேம்படும். தந்தைவழி உறவுகளின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெற்றோர்களின் ஆலோசனைகள் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
சித்திரை : கருத்து வேறுபாடுகள் குறையும்.
சுவாதி : ஆர்வம் அதிகரிக்கும்.
விசாகம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

விருச்சிகம் :

எந்தவொரு செயல்களிலும் சிந்தித்து செயல்படுவது நன்மையை அளிக்கும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். தொழில் தொடர்பான வியாபாரங்களில் எதிர்பாராத அலைச்சலும், காலதாமதமும் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : சிந்தித்து செயல்படவும்.
அனுஷம் : காலதாமதம் உண்டாகும்.
கேட்டை : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

தனுசு :

திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் எதிர்பார்த்த சில காரியங்களை செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியும், ஆதரவும் கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய கூட்டாளிகளின் அறிமுகங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூராடம் : அனுகூலமான நாள்.
உத்திராடம் : அறிமுகங்கள் உண்டாகும்.

மகரம் :

வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பழைய நினைவுகளின் மூலம் மனதில் சோர்வும், காலதாமதமும் ஏற்படும். இழுபறியாக இருந்துவந்த சில செயல்களை செய்து முடிப்பீர்கள். தம்பதியர்கள் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மையளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.
திருவோணம் : புரிதல் ஏற்படும்.
அவிட்டம் : இழுபறிகள் நீங்கும்.

கும்பம் :

மூத்த சகோதரர்களின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். திறமைகள் வெளிப்பட்டு பாராட்டுகள் கிடைக்கும். சபை தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வர்த்தக வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : காரியசித்தி உண்டாகும்.
சதயம் : திறமைகள் வெளிப்படும்.
பூரட்டாதி : சாதகமான நாள்.

மீனம் :

வாக்கு சாதுர்யத்தின் மூலம் இலாபம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பயணங்களின் மூலம் இலாபம் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
பூரட்டாதி : இலாபம் கிடைக்கும்.
உத்திரட்டாதி : பொறுப்புகள் குறையும்.
ரேவதி : முன்னேற்றமான நாள்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...