தீபஒளி – குறும்பட விமர்சனம் | லதா சரவணன்
ஊரெங்கும் தீபாவளியின் கொண்டாட்டங்கள் ஆனால் எல்லாப்பண்டிகைகளும் எல்லாரும் இன்பத்தைத் தருவதில்லை, ஏன்டா இந்தப்பண்டிகைகள் எல்லாம் வருகிறது என்று ? அப்படி வறுமையில் வாழும் ஒரு குடும்பம் தான் கதாநாயகனுடையது. சைக்கிளை மிதித்து கவலையோடு வாசலைக் கடந்து வரும் அவருக்கு அப்பா வாங்கிட்டு வந்தியா என்ற மகளின் குரல் அந்த பிள்ளையை அடக்கும் மனைவி, சாப்பிட உட்கார்ந்து ஒரு கவளம் சோற்றை வாய்க்குள் கொண்டு செல்லும்போது நாடியைப் பிடித்து அப்பா நாளைக்காவது வாங்கிட்டு வர்றீயாப்பா என்று அழுகைக் குரலில் மீண்டும் மனைவியிடம் அடிவாங்கும் பிள்ளைக்காக மனம்வருந்தி.
வேலை பார்க்கும் இடத்தில் வாங்கின கூலியோடு அட்வான்ஸ் கேட்க ஓனரின் வீட்டுக்கு செல்வதும் காசு கிடைக்கவில்லை, ஆனால் வெறுப்பேற்றி ஓனரின் மகனை கிளம்பும்போது ஒரு குட்டுவைக்கும் குழந்தைத்தனம் ரசிக்கவைத்தது. அட்வான்ஸ் கிடைக்காமல் வட்டிக்கு வாங்கியப்பணத்தோடு கடன் சுமையும் சேர்ந்தாலும் மகளின் முகத்தில் காணப்போகும் மகிழ்ச்சிக்காக அவன் கொடுக்கும் விலைதான் ஏமாறும் தகப்பனாய். அவரின் நடிப்பு அதை நடிப்பென்றே சொல்ல முடியாத அளவிற்கு தத்ரூபம்.
வறுமையும், குறைவான சம்பளமும் நல்ல குடும்பத்தை சேர்ந்தவனைக் கூட திருடனாய் மாற்றிவிடுகிறது என்பதுதான் கடைசி காட்சி. இன்னொரு ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவன் தன்பிள்ளைகளுக்கு உடைகள் வாங்கவும் அந்தப் பர்ஸை பிரிக்கும் போது காசை உள்ளே வைக்கும் போது முகத்தில் தெரிந்த குற்றஉணர்வு நெஞ்சைப் பிசைந்தது.
நல்ல குறும்படம் மின்கைத்தடி சார்பாக தீபாஒளி குறும்படக் குழுவிற்கு வாழ்த்துக்கள்.