இன்றைய தினப்பலன்கள் (04.08.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (04.08.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

மனதில் இருந்துவந்த சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கையில் முன்னேற்றமான சிந்தனைகள் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அஸ்வினி : உற்சாகம் பிறக்கும்.
பரணி : சிந்தனைகள் மேலோங்கும்.
கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

ரிஷபம் :

வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். எண்ணிய காரியங்களில் செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பிரிந்து சென்ற நண்பர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை அளிக்கும். முக்கிய நபர்களின் சந்திப்பும், உதவியும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை
கிருத்திகை : புதிய கண்ணோட்டம் ஏற்படும்.
ரோகிணி : செயல்திறன் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : கலகலப்பான நாள்.

மிதுனம் :

இனிமையான பேச்சுக்கள் மற்றும் சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் எடுத்த காரியங்களை சாதகமாக முடிப்பீர்கள். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உறவினர்களின் மத்தியில் மரியாதை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிஷம் : சாதகமான நாள்.
திருவாதிரை : பாராட்டுகள் கிடைக்கும்.
புனர்பூசம் : மரியாதை அதிகரிக்கும்.

கடகம் :

பணிபுரியும் இடங்களில் உங்களின் கருத்திற்கு மாற்று கருத்துக்கள் உண்டாகலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் விழிப்புணர்வு வேண்டும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் நேரிடலாம். புதிய விஷ யங்களுக்காக செயல்பாடுகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : விழிப்புணர்வு வேண்டும்.
பூசம் : எதிர்பாராத திருப்பங்கள் நேரிடலாம்.
ஆயில்யம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

சிம்மம் :

உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது நம்பிக்கையை கொடுக்கும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மகம் : உதவிகள் கிடைக்கும்.
பூரம் : அனுசரித்து செல்லவும்.
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.

கன்னி :

புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற பலன்கள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் திறமைகள் அதிகரிக்கும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். பிள்ளைகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அஸ்தம் : திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும்.
சித்திரை : வாக்குவாதங்களை தவிர்க்கலாம்.

துலாம் :

குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். தெய்வ சிந்தனைகள் மேலோங்கும். எதிர்பார்த்த தனவரவு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : அனுசரித்து செல்லவும்.
சுவாதி : இடைவெளி குறையும்.
விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

விருச்சிகம் :

குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை சேரும். வியாபாரம் தொடர்பாக சில செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருக்கும் மந்தநிலை மாற கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : பெருமை உண்டாகும்.
அனுஷம் : செலவுகள் அதிகரிக்கும்.
கேட்டை : கவனம் வேண்டும்.

தனுசு :

எந்தவொரு செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் புதிய முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள். பணியில் மேலதிகாரிகளுடன் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் இலாபம் கிடைக்கும். அக்கம்-பக்கத்தாரிடம் மனவருத்தங்கள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மூலம் : பிரச்சனைகள் குறையும்.
பூராடம் : இலாபம் கிடைக்கும்.
உத்திராடம் : மனவருத்தங்கள் ஏற்படலாம்.

மகரம் :

நண்பர்களின் உதவியின் மூலம் பொருளாதார ரீதியாக இருந்துவந்த பிரச்சனைகள் சற்று குறையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். எந்தவொரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றி அடைவீர்கள். வியாபாரத்தில் இலாபம் திருப்திகரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : வெற்றி கிடைக்கும்.
திருவோணம் : போட்டிகள் குறையும்.
அவிட்டம் : திருப்திகரமான நாள்.

கும்பம் :

நண்பர்களின் எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரம் சம்பந்தமான முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். முன்னேற்றமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : சந்திப்புகள் உண்டாகும்.
சதயம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

மீனம் :

உத்தியோகத்தில் மேலதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் குறையும். செயல்பாடுகளால் அனைவரையும் கவர்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நினைத்த காரியங்களை செய்து முடிக்கும் சூழல் உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : சாதகமான நாள்.
உத்திரட்டாதி : மனவருத்தங்கள் குறையும்.
ரேவதி : சுபச்செய்திகள் கிடைக்கும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...