வரலாற்றில் இன்று – 09.07.2020 கே.பாலசந்தர்

 வரலாற்றில் இன்று – 09.07.2020 கே.பாலசந்தர்

தமிழ் திரையுலக இயக்குநர், கே.பாலசந்தர் (Kailasam Balachander) 1930ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில் பிறந்தார்.

1964ஆம் ஆண்டு திரைப்படத்திற்கு வசனம் எழுதி, சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அதற்கு அடுத்த ஆண்டில் இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் நீர்க்குமிழி மகத்தான வெற்றி பெற்றது.

இவர் ‘கவிதாலயா’ என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, ஏராளமான நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவர் பத்மஸ்ரீ விருது, தாதா சாகேப் பால்கே விருது (2010), தேசிய விருதுகள், மாநில அரசின் விருதுகள், அறிஞர் அண்ணா விருது, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

திரையுலகில் வெற்றி உலா வந்த கலையுலக பாரதி கே.பாலசந்தர் 2014 ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1819ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி தையல் இயந்திரத்தை கண்டுபிடித்த எலியாஸ் ஓவே அமெரிக்காவில் மாசாசூசெட்சு மாநிலத்தில் ஸ்பென்சர் என்ற ஊரில் பிறந்தார்.

2006ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி அக்னி 3 ஏவுகணை ஒரிசாவில் சோதிக்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி தமிழக எழுத்தாளர் சி.ஆர்.கண்ணன் மறைந்தார்.

1927ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி இந்திய இயற்கையியலாளர் ஜே.சி. என்று அறியப்படும் ஜீவநாயகம் சிரில் டேனியல் பிறந்தார்.

1943ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி தமிழக எழுத்தாளர் நாஞ்சில் நாரண. தொல்காப்பியன் கன்னியாகுமரி மாவட்டம் நரிக்குளம் எனும் ஊரில் பிறந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...