மேஷம் :
உடனிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். பொதுக்காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.
பரணி : நாட்டம் அதிகரிக்கும்.
கிருத்திகை : புதிய நட்பு கிடைக்கும்.
ரிஷபம் :
வியாபாரம் தொடர்பான முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தனவரவு திருப்தியை தரும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் இலாபம் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : முயற்சிகள் ஈடேறும்.
ரோகிணி : நம்பிக்கை அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : இலாபம் உண்டாகும்.
மிதுனம் :
எதிர்காலம் சார்ந்த தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உழைப்பிற்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். மற்றவர்களுக்கு உதவும் போது சிந்தித்து செயல்படவும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மிருகசீரிஷம் : பாராட்டுகள் கிடைக்கும்.
திருவாதிரை : சிந்தித்து செயல்படவும்.
புனர்பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.
கடகம் :
கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் நேரிடும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : வேறுபாடுகள் நீங்கும்.
பூசம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : மனச்சோர்வு உண்டாகும்.
சிம்மம் :
உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் செய்யும் சில மாற்றங்கள் சாதகமான பலன்களை அளிக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மகம் : சாதகமான நாள்.
பூரம் : மாற்றம் உண்டாகும்.
உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.
கன்னி :
வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழல் உண்டாகும். கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடமால் பயன்படுத்தவும். கொடுக்கல்–வாங்கல்கள் தொடர்பான பிரச்சனைகள் சீராகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : தீர்ப்புகள் சாதகமாகும்.
அஸ்தம் : வாய்ப்புகள் உண்டாகும்.
சித்திரை : பிரச்சனைகள் நீங்கும்.
துலாம் :
வியாபாரத்தில் உள்ள நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனதில் நினைத்த ஆசைகள் நிறைவேறும். எண்ணிய காரியங்கள் எண்ணிய விதத்தில் நடைபெறும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
சித்திரை : நுட்பங்களை அறிவீர்கள்.
சுவாதி : பாராட்டப்படுவீர்கள்.
விசாகம் : ஆசைகள் நிறைவேறும்.
விருச்சிகம் :
தொழில் தொடர்பாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் எண்ணிய வெற்றியை தரும். உங்களை பற்றி புரிந்து கொள்வதற்கான சூழல்கள் அமையும். தாயாருடன் சிறு கருத்து வேறுபாடுகள் வந்து போகும். பெரியவர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : முயற்சிகள் கைகூடும்.
அனுஷம் : வேறுபாடுகள் நீங்கும்.
கேட்டை : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
தனுசு :
திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மூலம் : வெற்றி உண்டாகும்.
பூராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திராடம் : காரியசித்தி உண்டாகும்.
மகரம் :
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
திருவோணம் : மாற்றம் உண்டாகும்.
அவிட்டம் : முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம் :
வாகனப் பராமரிப்பு செலவுகள் குறையும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். செலவுகளை குறைக்க முயல்வீர்கள். பழக்க வழக்கங்களில் மாற்றம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : செலவுகள் குறையும்.
சதயம் : மாற்றம் உண்டாகும்.
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
மீனம் :
எதிர்பாராத தனவரவு கிடைக்கும். வேலையில் பணிச்சுமைகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : சுமைகள் குறையும்.
உத்திரட்டாதி : அன்பு அதிகரிக்கும்.
ரேவதி : நன்மை உண்டாகும்.
