வரலாற்றில் இன்று – 29.06.2020 – பி.சி.மகாலனோபிஸ்

 வரலாற்றில் இன்று – 29.06.2020 – பி.சி.மகாலனோபிஸ்

இந்தியாவின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய கணித மற்றும் புள்ளியியல் மேதை பிரசாந்த சந்திர மகாலனோபிஸ் (Prasanta Chandra Mahalanobis) 1893ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.

இவருடைய பிறந்த நாளை தேசிய புள்ளியியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் கொல்கத்தாவில் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தை 1931ஆம் ஆண்டு நிறுவினார். மகாலனோபிஸ் தொலைவு, ரேண்டம் சாம்ப்ளிங் முறை ஆகியவற்றை வரையறுத்துள்ளார்.

அமெரிக்க எகனாமிக் சொசைட்டியின் ஃபெலோஷிப், பத்ம விபூஷண், சீனிவாச ராமானுஜன் தங்கப்பதக்கம் என ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

பொருளாதாரத் திட்டமிடல் மற்றும் புள்ளி விவர வளர்ச்சி துறைகளில் மிக உன்னதமான பங்களிப்பை வழங்கிய மகாலனோபிஸ் 1972 ஆம் ஆண்டு மறைந்தார்.

ஆர்.எஸ்.மனோகர்

தமிழ் நாடக உலகில் புரட்சியை ஏற்படுத்திய, நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர் 1925ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி நாமக்கல்லில் பிறந்தார்.

இவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் மனோகரா என்ற நாடகத்தில் நடித்ததால், மனோகர் என்னும் பெயர் பெற்றார்.

இவர் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி நடித்துள்ளார். இவர் நடித்த இலங்கேஸ்வரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரஜித், நரகாசுரன், சுக்ராச்சாரியார் உள்ளிட்ட நாடகங்களும் குறிப்பிடத்தக்கவை.

சினிமா கதாநாயகனாக அறிமுகமான இவர் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் வண்ணக்கிளி, கைதி கண்ணாயிரம், வல்லவனுக்கு வல்லவன், ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், இதயக்கனி உட்பட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.

இவர் இசைப்பேரறிஞர், நாடகக் காவலர் உட்பட பல விருதுகள், பட்டங்கள் பெற்றவர். தமிழ் நாடகத் துறையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிய ஆர்.எஸ்.மனோகர் 2006 ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

2007ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்(iPhone) வெளியிடப்பட்டது.

2009ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி மொழியியல் அறிஞர் வ.ஐ.சுப்பிரமணியம் மறைந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...