வரலாற்றில் இன்று – 06.06.2020 – அலெக்ஸாண்டர் புஷ்கின்

 வரலாற்றில் இன்று – 06.06.2020 – அலெக்ஸாண்டர் புஷ்கின்

கவிதை யுகத்தின் சிறந்த படைப்பாளியான அலெக்ஸாண்டர் செர்ஜியேவிச் புஷ்கின் (Alexander Sergeyevich Pushkin) 1799ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் பிறந்தார்.

இவர் போரிஸ் குட்னவ் (Boris Godunov), தி ஸ்டோன் கெஸ்ட்(The Stone Guest), மொஸார்ட் அண்ட் ஸலியெரி(Mozart and Salieri) என்ற பிரபலமான நாடகங்களையும், ரஸ்லன் அண்ட் லுட்மிலா (Ruslan and Lyudmila) என்ற கவிதையையும் எழுதியுள்ளார்.

இவர் உரைநடை, கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், விமர்சன கட்டுரைகள், கடிதங்கள் என இலக்கியத்தின் அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தார்.

நவீன ரஷ்ய இலக்கியத்தின் தந்தை செர்ஜியேவிச் புஷ்கின் 1837ஆம் ஆண்டு மறைந்தார். செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் இவர் கடைசியாக வாழ்ந்த வீடு தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

மு.சி.பூர்ணலிங்கம் நினைவு தினம்……!

தமிழ் நூல்களை மொழிப்பெயர்த்து வெளிநாட்டினருக்கும் மொழியின் அருமையை உணர்த்திய தமிழறிஞர் மு.சி.பூர்ணலிங்கம் 1866ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முந்நீர்ப்பள்ளம் என்ற ஊரில் பிறந்தார்.

இவர் தமிழில் 18 நூல்களும், ஆங்கிலத்தில் 32 நூல்களும் மற்றும் சட்ட நூல்களையும் எழுதியுள்ளார். மேலும் சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், குழந்தை இலக்கியம், ஆய்வுக் கட்டுரைகள், மொழிப்பெயர்ப்புகளையும் எழுதியுள்ளார்.

தமிழ் இந்தியா என்ற ஆங்கில நூலில் தமிழ் மொழியின் சிறப்பை வரலாற்று ஆதாரங்களோடு கூறியுள்ளார். சமயச் சான்றோர் வரலாறு மற்றும் அவர்களது தத்துவங்களை பத்துத் தமிழ் முனிவர்கள் என்ற நூலில் விளக்கியுள்ளார். தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை 1947ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1891ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி கன்னடத்தில் புகழ்பெற்ற வரலாற்றுப் புதினங்களை எழுதிய மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (Masthi Venkatesha Iyengar) கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் பிறந்தார். இவர் 1986ஆம் ஆண்டு தனது பிறந்தநாள் அன்றே மறைந்தார்.

1908ஆம் ஆண்டு ஜூன் 06ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பி.எஸ்.பி.பொன்னுசாமி பிறந்தார்.

1933ஆம் ஆண்டு ஜூன் 06ஆம் தேதி இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஹைன்றிக் ரோரர் பிறந்தார்.

தமிழ் ஈழ மாணவர் எழுச்சி தினம் : ஈழ தமிழர்களின் மனதில் போராட்ட குணத்தை ஊட்டிய தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் நினைவாக ஜூன் 6ஆம் தேதி தமிழ் ஈழ மாணவர் எழுச்சி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2004ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி இந்தியாவில் தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...