இன்றைய தினப்பலன்கள் (06.06.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

முயற்சிக்கேற்ற அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும். கவனக்குறைவால் பிறரிடம் அவச்சொல் வாங்க நேரிடலாம். கடன் சார்ந்த பிரச்சனைகளால் மனவருத்தங்கள் உண்டாகும். சகோதர உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோகம் சார்ந்த கோப்புகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
அஸ்வினி : அங்கீகாரம் காலதாமதமாகும்.
பரணி : மனவருத்தங்கள் உண்டாகும்.
கிருத்திகை : கவனம் வேண்டும்.

ரிஷபம் :

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பதவி உயர்வு கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடிவரும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கிருத்திகை : உயர்வான நாள்.
ரோகிணி : முயற்சிகள் கைகூடும்.
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.

மிதுனம் :

பிள்ளைகளின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். உறவினர்களின் மூலம் நற்செய்திகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான பயணங்கள் சாதகமான பலனை அளிக்கும். உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகளும், வழிகாட்டுதலும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : நற்செய்திகள் கிடைக்கும்.
புனர்பூசம் : தெளிவு பிறக்கும்.

கடகம் :

வீடு, மனை வாங்குவது பற்றிய சிந்தனைகள் மேம்படும். செய்யும் வேலையில் கவனத்துடன் செயல்படவும். தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படுவது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். இளைய சகோதரர்களின் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும்.
பூசம் : கவனத்துடன் செயல்படவும்.
ஆயில்யம் : வாய்ப்புகள் உண்டாகும்.

சிம்மம் :

குறுகிய தூர பயணங்களால் சாதகமான சூழல் உண்டாகும். சாதுர்யமான பேச்சுக்களால் பாராட்டப்படுவீர்கள். தனவரவு மேம்படும். பணிபுரியும் இடங்களில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் முன்னேற்றமான சூழல் அமையும். பணியாளர்களின் மூலம் இலாபம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : சாதகமான நாள்.
பூரம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
உத்திரம் : இலாபம் மேம்படும்.

கன்னி :

நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் சாதகமாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். செய்யும் செயல்களால் செல்வாக்கு மேம்படும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் பாராட்டப்படுவீர்கள். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நலீ ம்
உத்திரம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
அஸ்தம் : செல்வாக்கு மேம்படும்.
சித்திரை : உதவிகள் கிடைக்கும்.

துலாம் :

மனதில் ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். தந்தையாரின் உடல்நலத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும். தனவரவில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். தொழிலில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கல்வி பயிலும் மாணவர்கள் கவனத்துடன் இருக்கவும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நன்று.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : இன்னல்கள் நீங்கும்.
சுவாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
விசாகம் : வாக்குறுதிகளை தவிர்க்கவும்.

விருச்சிகம் :

சுரங்க பணியில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். பங்காளிகளிடமிருந்து ஆதரவான உதவிகள் கிடைக்கும். உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பிறருக்கு உதவும் போது கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அனுஷம் : ஆதரவான நாள்.
கேட்டை : சிந்தித்து செயல்படவும்.

தனுசு :

தலைமை பதவியில் இருப்பவர்களுக்கு அனுகூலமான நாள். தொழில் சம்பந்தமான நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். புதிய நபர்கள் அறிமுகமாவார்கள். பொதுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். நண்பர்களுடன் விருந்துகளில் கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : கவலைகள் நீங்கும்.
பூராடம் : கலகலப்பான நாள்.
உத்திராடம் : கேளிக்கையில் ஈடுபடுவீர்கள்.

மகரம் :

வியாபாரத்தை விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவுகள் உண்டாகும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த இடர்பாடுகள் நீங்கும். கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். சிறுதொழில் சார்ந்த முயற்சிகளில் பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
திருவோணம் : இடர்பாடுகள் நீங்கும்.
அவிட்டம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

கும்பம் :

புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். முக்கிய முடிவுகளில் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். குடும்ப பொருளாதாரம் மேம்படும். புதிய நபர்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : ஆசிகள் கிடைக்கும்.
சதயம் : பொருளாதாரம் மேம்படும்.
பூரட்டாதி : நுணுக்கங்களை கற்பீர்கள்.

மீனம் :

குடும்ப நபர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். பூமி விருத்திக்கான செயல் திட்டங்களில் சாதகமான சூழல் ஏற்படும். எதிர்பாராத சுபச்செய்திகளால் சுபவிரயங்கள் ஏற்படும். முயற்சிக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : குழப்பங்கள் நீங்கும்.
உத்திரட்டாதி : விரயங்கள் ஏற்படும்.
ரேவதி : பாராட்டுகள் கிடைக்கும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...