கக்கன்
“அய்யா என் பெயர் கக்கன் நான் போலீஸ் மந்திரியாக இருக்கேன்….!?”
பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவியேற்றபோது தனது அமைச்சரவையில் 7 பேரை மட்டுமே சேர்த்து கொண்டார்…
அவர்களில் ஒருவர் கக்கன்…
இவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்…
போலீஸ்
பொதுப்பணி
விவசாயம்
சிறுபாசனம்
கால்நடைபராமரிப்பு
உள்துறை
சிறைத்துறை
நிதி
கல்வி
தொழிலாளர்நலம்
மற்றும்
மதுவிலக்கு…
இத்தனை துறைகளின் அமைச்சராக இருந்தவர் ..
பத்து வருடங்கள் அமைச்சராக இருக்கும் போதும், வெளியூர் சென்றால் தன் துணிகளை தானே துவைத்து கொள்வார்….
ஒரு முறை அவர் திருச்சி மாவட்டத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு இரவு ரயிலில் சென்னை செல்ல வேண்டும். நிகழ்ச்சிகளை முடித்து திருச்சி ஜங்ஷனுக்கு வந்த போது, அவர் செல்ல வேண்டிய ரயில் கிளம்பி விட்டது…
அடுத்த ரயில் அதிகாலையில்…
அமைச்சராக இருந்தாலும் யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை…
ரயில்வே அதிகாரிகளையும் அணுகவில்லை…
பேசாமல் ஒரு துண்டை விரித்து பிளாட்பார பெஞ்ச்சில் படுத்துவிட்டார்…
நடு இரவில் ரோந்து வந்த ரயில்வே போலிஸ்சார் யாரென்று தெரியாமல் லட்டியாய் இரண்டு தட்டு தட்டி எழுப்பினர்…!
யார் நீங்கள்
எழுந்து செல்லுங்கள்
இங்கெல்லாம் படுக்கக்கூடாது
என்றனர்…
அதற்கு அமைதியாக பதிலளித்தார்..
“அய்யா என் பெயர் கக்கன் நான் போலீஸ் மந்திரியாக இருக்கேன், அடுத்த ரயில் வந்தவுடன் சென்றுவிடுகிறேன் என்றார்”
அதிர்ந்தனர் போலீஸ்காரர்கள். அய்யா மன்னித்துவிடுங்கள் நீங்கள் முதல் வகுப்பு ஓய்வறையில் போய் படுங்கள் என்றனர்.
வேண்டாம் இந்த வசதியே எனக்கு போதும் என்று அந்த பெஞ்சிலேயே படுத்து உறங்கிவிட்டார்…
அவர் ரயில் ஏறும் வரை அங்கேயே போலீசார் நின்றிருந்து பத்திரமாக பார்த்துக் கொண்டனர்…
இப்படியும் ஒரு தமிழர்…!!!