வரலாற்றில் இன்று – 12.05.2020 – சர்வதேச செவிலியர் தினம்
சர்வதேச செவிலியர் தினம் மே 12ஆம் தேதி 1965ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. இத்தினம் அர்ப்பணிப்புடனும், சேவை மனப்பான்மையுடனும் செவிலியர்கள், நம் சமூகத்திற்கு ஆற்றிவரும் சிறப்பான பங்களிப்பை நன்றியுடன் நினைவுக்கூற இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மேலும், செவிலியர்கள் பின்பற்ற வேண்டிய நவீன நடைமுறைகளை உருவாக்கி தந்தவரான ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்
செவிலியர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழும் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) 1820ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரில் பிறந்தார்.
இவர் 1850ஆம் ஆண்டு லண்டனில் பணிபுரிந்த போது ரஷ்யப் பேரரசுக்கும், பிரிட்டிஷ் பேரரசுக்கும் இடையே ஏற்பட்ட போரில் காயமடைந்த வீரர்களுக்காக சேவையாற்றினார்.
இவர் 1883ஆம் ஆண்டு விக்டோரியா அரசியிடமிருந்து அரச செஞ்சிலுவை விருதை பெற்றார். மேலும், 1907ஆம் ஆண்டு ஆர்டர் ஆஃப் மெரிட் (Order of Merit) எனும் விருதையும் பெற்றார். இவர் இவ்விருதைப் பெற்ற முதல் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிவரை சேவை மனப்பான்மையுடன் பணியாற்றிய இவர் 1910ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1895ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி சிறந்த தத்துவ ஆசிரியர், பேச்சாளர், எழுத்தாளரான ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி பிறந்தார்.
1949ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி சோவியத் ஒன்றியம், பெர்லின் மீதான முற்றுகையை நிறுத்தியது.
1881ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி வட ஆப்ரிக்காவில் துனீசியா, பிரான்சின் நேரடி ஆட்சியின் கீழ்வந்தது.