தாயம்

 தாயம்

தாய கட்டையி்ல் விழும் எண்களின் மகிமை!

அரசர்களின் ராஜ தந்திர விளையாட்டு தாயம் உருட்டுதல் ஆகும்

தாயம் உருட்டும் போது 1 (தாயம்), 5, 6, 12 விழுந்தால் கட்டையை தொடர்ந்து உருட்டுவது ஏன் தெரியுமா!

தாயம் (1) சூரியனை குறிக்கும் சூரியனே பிரபஞ்சத்தின் ஆதாரம்!

5ம் எண் பஞ்ச பூதங்களை குறிக்கும் (நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி)

6ம் எண் மற்ற ஆறு கிரகங்களையும் (சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி) மற்றும் ஆறு பருவங்களையும் (இளவேனிற், முதுவேனிற், கார், குளிர், முன்பனி, பின்பனி )காலங்களை குறிக்கும்!

12 ம் எண் 12 இராசிகளையும் ( 12 மாதங்களையும்) குறிக்கும்

இந்த 1, 5, 6, 12 க்குறிய மேற்கண்ட அம்சங்களை ஆராய்ந்தே எதிரி நாட்டுடன் படை எடுப்பர்

அதேபோல் 2ம் எண் இரண்டு அயனங்களை ( உத்ராயனம், தட்சிணாயனம்)

3ம் எண் முக்குண வேளையை (சாத்வீகம், ராஜஸம், தாமஸம்) குறிக்கும்

4ம் எண் நான்கு யோகங்களை (அமிர்த, சித்த, மரண, பிரபலாரிஷ்ட) குறிக்கும்

எனவே இந்த எண்களில் 1, 5 ,6, 12 பகடையில் முக்கிய அம்சமாக கருதுவதால் அந்த எண்கள் விழுந்தால் மீண்டும் தாயகட்டையை உருட்டுகின்றனர்..!!!

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...