இன்றைய தினப்பலன்கள் (07.05.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (07.05.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

ஆன்மிக எண்ணங்களில் மனம் ஈடுபடும். செய்தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்துவதால் தனித்திறமைகள் புலப்படும். கற்ற கலைகளால் எதிர்பார்க்காத இலாபம் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
அஸ்வினி : தனித்திறமை புலப்படும்.
பரணி : இலாபம் உண்டாகும்.
கிருத்திகை : தேவைகள் நிறைவேறும்.

ரிஷபம் :

பூர்வீக சொத்துக்களிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரும். சக ஊழியர்களை நிதானத்துடன் அனுசரித்து செல்லவும். புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழிலில் இலாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு இன்னல்கள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : அனுசரித்து செல்லவும்.
மிருகசீரிஷம் : இன்னல்கள் மறையும்.

மிதுனம் :

தொழில் சம்பந்தமான புதிய முடிவுகளை எடுப்பதில் கவனத்துடன் இருக்கவும். இழந்த பொருட்களை மீட்பதற்கான அனுகூலமான சூழல் உண்டாகும். எதிர்காலம் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். அரசாங்க பணியில் இருந்த இடர்பாடுகள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
திருவாதிரை : அனுகூலமான நாள்.
புனர்பூசம் : இடர்பாடுகள் நீங்கும்.

கடகம் :

தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான எண்ணங்கள் மேலோங்கும். நண்பர்களிள் மூலம் சாதகமான சூழல் அமையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் மேன்மையான செயல்களை செய்து முடிப்பீர்கள். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவுகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : எண்ணங்கள் மேலோங்கும்.
பூசம் : மேன்மையான நாள்.
ஆயில்யம் : உறவுகள் மேம்படும்.

சிம்மம் :

பொதுகூட்டப் பேச்சுக்களில் ஈடுபடுபவர்கள் கவனமாக பேசவும். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குருமார்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். வாரிசுகளிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : பேச்சில் கவனம் வேண்டும்.
பூரம் : மாற்றம் உண்டாகும்.
உத்திரம் : அமைதி வேண்டும்.

கன்னி :

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். புதுவிதமான ஆராய்ச்சி சம்பந்தமான எண்ணங்கள் தோன்றும். கால்நடைகளின் மூலம் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : அறிமுகம் கிடைக்கும்.
சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.

துலாம் :

பிரியமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வேளாண்மை சம்பந்தமான பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். தாய் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
சித்திரை : அனுசரித்து செல்லவும்.
சுவாதி : அலைச்சல்கள் ஏற்படும்.
விசாகம் : சிந்தனைகள் மேலோங்கும்.

விருச்சிகம் :

மற்றவர்களுக்கு உதவும்போது கவனம் வேண்டும். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறைந்து இலாபம் அதிகரிக்கும். மறைமுக திறமைகள் வெளிப்பட்டு அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். முயற்சிக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : இலாபம் அதிகரிக்கும்.
அனுஷம் : பாராட்டப்படுவீர்கள்.
கேட்டை : உயர்வான நாள்.

தனுசு :

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். புதிய இலட்சியத்தை அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். மனதில் இருக்கும் கவலைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மூலம் : ஆரோக்கியம் மேம்படும்.
பூராடம் : துரிதம் உண்டாகும்.
உத்திராடம் : கவலைகள் நீங்கும்.

மகரம் :

புதிய தொழில் முயற்சிகளால் சுபவிரயம் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளின் மூலம் இலாபம் ஏற்படும். சுயதொழில் சார்ந்த சிந்தனைகள் மேலோங்கும். விளையாட்டு துறையில் இவர்களுக்கு திறமைகள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : முயற்சிகள் ஈடேறும்.
திருவோணம் : இலாபம் உண்டாகும்.
அவிட்டம் : திறமைகள் வெளிப்படும்.

கும்பம் :

சபை தலைவராக இருப்பவர்களுக்கு சக ஊழியர்களால் ஆதரவு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களை பற்றிய நம்பிக்கை மேலோங்கும். கௌரவ பதவிகளால் செல்வாக்கு அதிகரிக்கும். நிர்வாகம் சார்ந்த செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
சதயம் : நம்பிக்கை மேலோங்கும்.
பூரட்டாதி : செல்வாக்கு அதிகரிக்கும்.

மீனம் :

உறவினர்களின் வழியில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முடியும் என எதிர்பார்த்த சில காரியங்களில் தடை, தாமதங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
உத்திரட்டாதி : தடை ஏற்படும்.
ரேவதி : காலதாமதம் உண்டாகும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...