ஸ்ரீபதிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு..! | உமாகாந்தன்
உரிமையியல் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பழங்குடியின பெண் ஸ்ரீபதிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக கூறிய அவர், சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில் என்றும் கூறியுள்ளார்.Read More