3 நாட்கள் சென்னையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் – வெளியான முக்கிய அறிவிப்பு..!

7 மண்டலங்களில் 30ம் தேதி முதல் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 7 மண்டலங்களில் வரும் 30ம் தேதி முதல் 1ம் தேதி வரை குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் என்று சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.

,

செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2000 மி.மீ விட்டமுடைய 2வது வரிசை பிரதான குடிநீர் குழாயினை, ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் 2000 மி.மீ குடிநீர் பிரதான குழாயுடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 30.07.2025 அன்று காலை 08.00 மணி முதல் 01.08.2025 இரவு 10.00 மணி வரை மண்டலங்கள் –7 (அம்பத்தூர்), 8 – (அண்ணா நகர்), 9 – (தேனாம்பேட்டை), 10 – (கோடம்பாக்கம்), 11 – (வளசரவாக்கம்), 12 – (ஆலந்தூர்), 13 – (அடையாறு) மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!