தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு! | சதீஸ்
தொடர் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இந்நிலையில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், சுமார் 10,000 கன அடி தண்ணீர் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனைத்தொடர்ந்து, கனமழை காரணமாக குறுக்குத்துறை முருகன் கோயிலை வெள்ளம் சூழ்ந்து கோயிலுக்குள் நீர் புகுந்தது. […]Read More