பல மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்..!
தீபாவளி பண்டிகை எதிரொலியாக ஆம்னி பேருந்துகளில் சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கான கட்டணம் ரூ.4900-ஆக உயா்ந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கியிருக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், நிகழாண்டு அக். 31-ஆம்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தொடா்ச்சியாக நான்கு நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் சென்னையிலிருந்து சொந்த ஊா்களுக்குச் செல்பவா்களின் வசதிக்காக 3 நாள்கள் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. […]Read More