1997 ல் தொலைக்காட்சியில் அப்போது 7வது படித்துக் கொண்டிருக்கிறேன் யார் எழுத்தாளர் யாருடைய கதை என்றெல்லாம் தெரியாது.ஆனால் அந்த தொடரின் பி.ஜி.எம். தொடரின் ஆரம்பத்தில் மர்மதேசம் என்ற அமானுஷ்யம் கலந்த குரல்,அதை தொடர்ந்து குதிரையில் முண்டாசு கட்டிய யாரோ ஒருவர்,தன் நீண்ட வாளின் மூலம் கொல்லும் காட்சி ஒவ்வொரு முறையும் இந்த காட்சியில் ஒரு நொடி கண்சிமிட்டி பின் பயத்தோடு ஒருவித பதட்டத்தோடும் கதையைப் பார்க்கத் தொடங்குவோம்.தேவதர்ஷினியின் முதல் தொடர் தைரியம் மிகுந்த பெண்ணாக நடித்திருப்பார் சேத்தனின் நடிப்பும்அபாரம்தான்! அந்த இரண்டு பெரிய கோலிகுண்டு கண்கள் அவர் உருட்டும் போது எங்கே வெளியே வந்து விழுந்து விடுமோ என்ற பயம் நமக்குத் தெரியும். அன்றைய தொலைக்காட்சியை மிகவும் ஆக்கிரமித்து இருந்தது இவருடைய மர்மதேசம் தொடர்தான். ஒருமுறை என்னுடைய தொடர் பற்றி ராணி புத்தகத்தின் எடிட்டர் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, அப்போது ராணியில் வெளிவந்த இந்திராசெளந்தராஜன் அய்யா அவர்களின் கதைப் பற்றிய பேச்சு வந்தது. அவருடைய கதை வெளிவரும் போது எல்லாம் அந்த மாதிரி இடங்கள் எங்கே இருக்கிறது என்று வாசகர்கள் நிறைய கடிதங்களிலும் போன் மூலமாகவும் கேட்பார்கள் என்று சொல்லியிருந்தார்.என்னுடைய உயிரோவியம் புத்தக வெளியீட்டு விழாவிற்காக நான் அவரை அழைத்திருந்தேன். இலக்கியம் தொடர்பாக எழுதுவது சிறந்ததென்றாலும் கருத்து சொல்வதை விடுத்து, சமுதாயம் தொடர்பான எழுத்துக்களை எழுதுங்கள் என்று எனக்கு அறிவுரை வழங்கினார் அன்று ! எழுத்திலும் பேச்சிலும் மிகச்சிறந்த ஆற்றல் பெற்றவர். தற்போது நடந்த க்ரைம் மன்னன் ராஜேஷ்குமார் அவர்களின் விழாவில் கூட இவரின் பேச்சை கேட்க நேர்ந்தது நிறைவைத் தந்தது. கதையின் தொடக்கத்தில் நமது எதிர்ப்பார்வையும் ஆர்வத்தையும் இறுதிபக்கம் வரையில் வைத்திருப்பார், தசாவதாரத்தில் கமல் கடைசி காட்சியில் சொல்வதைப் போல இல்லையென்று எங்கே சொன்னேன் இருந்தால் நன்றாக இருக்கும் என்றேன் என்பார். அதேபோல் இருக்கா இல்லையா என்ற கேள்விக்குறியை (அது பேய் பற்றியதாகவும் சரி, தெய்வீகம் பற்றியதாகவும் சரி) நமக்குள் உண்டு செய்திடுவார். பள்ளி விடுமுறை நாட்களில் காம்பெளண்டு வீட்டில் பக்கத்து வீட்டு அண்ணன் எடுத்துவரும் பழைய புத்தகத்தில் பாதி பக்கம் கிழிந்து சில நேரம் சிதிலமடையாத அட்டையுடன் வரும் இவர்களின் புத்தகத்தைப் படிக்கும்போது அத்தனை பரவசம் இருக்கும். இவருடைய புதினங்கள் ஒவ்வொரு மாதமும் கிரைம் ஸ்டோரி மற்றும் இன்றைய கிரைம் நியூஸ் என்று வெளியிடப்பட்டுதான் வருகிறது இப்போதைய தொலைக்காட்சிகள். அவரின் கைவண்ணத்தில் தொலைக்காட்சிகள் வெளியிடப்பட்டது அவைகளில் நான் அறிந்தவை · என் பெயர் ரங்கநாயகி · சிவமயம் · ருத்ர வீணை · விடாது கருப்பு · மர்ம தேசம் – ரகசியம்,
Category: நகரில் இன்று
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி, பெட்ரோல் லிட்டர் ரூ.76.18க்கும், டீசல் ரூ.69.54க்கும் விற்பனை.
கீழ்கட்டளையில் வீடு புகுந்து 18 பவுன் நகை திருட்டு
கீழ்கட்டளையில் வீடு புகுந்து 18 பவுன் நகை திருட்டு சென்னையை அடுத்த மடிப்பாக்கம் அருகே உள்ள கீழ்கட்டளை அம்பாள் நகர் சுப்பிரமணிய தெருவைச் சேர்ந்தவர் முகமது ஆரிப் (வயது 61). இவர், வண்டலூரில் உள்ள ஒரு…
5வது நாளாக பெட்ரோல் விலை அதிகரிப்பு!
சென்னையில் தொடர்ந்து சில நாட்களாக குறைந்து வந்த பெட்ரோல் விலை, 5வது நாளாக இன்று (நவ.,12) அதன் விலையில் 10 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.76.18 காசுகள், டீசல் விலையில் 6 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.69.54 காசுகள் என நிர்ணயம்…
வருமான வரித்துறை- ஜேப்பியார் குழுமத்திற்கு
ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம், ரூ.3 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் – வருமான வரித்துறை. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடிக்கும் மேலான வருவாயை கணக்கில் காட்டாதது சோதனையில் கண்டுபிடிப்பு .
சுபஸ்ரீ வழக்கு – ஜெயகோபாலுக்கு ஜாமீன்
பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு: கைதான ஜெயகோபாலுக்கு ஜாமீன் ஏழை நோயாளிகளின் சிகிச்சைக்கு ரூ.50,000 வழங்கவும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனைக்கு தலா ரூ.25,000 வழங்கவும், மதுரையில் தங்கி தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் நிபந்தனை
சென்னையில் பெட்ரோல் விலை
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு, 16 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.76.08க்கும், டீசல் விலை 7 பைசா குறைந்து ரூ.69.60க்கும் விற்பனை.
பாட்ஷா பட டயலாக் மாதிரி டிரிட்மெண்ட் பண்ற டாக்டரே மிரண்டு போய் நிக்கிறார்ன்னு இளைஞரின் காதில் பத்து கரப்பான் பூச்சிகள்
காதுவலி காரணமாக மருத்துவமனைக்குச் சென்ற இளைஞருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரே அதிர்ச்சியில் உறையும் அளவுக்கு, காதின் உள்ளே கரப்பான் பூச்சி குடும்பத்துடன் குடியிருந்துள்ளது. சீன இளைஞரின் காதில் குடும்பம் நடத்திய கரப்பான்பூச்சிகள் பாட்ஷா பட டயலாக் மாதிரி டிரிட்மெண்ட் பண்ற டாக்டரே…
அமெரிக்க எச்.1பி விசா பதிவு செய்ய கட்டணம் டிச.9ம் தேதி அறிமுகம்
அமெரிக்க அரசு ஆண்டுதோறும் 85 ஆயிரம் பேருக்கு மட்டுமே எச்1பி விசா வழங்குகிறது. இதில், வேலைக்கு வருபவர்கள் 65 ஆயிரம் பேர், உயர்கல்வி படிக்க வருவோர் 20 ஆயிரம் பேர், இவர்களை தேர்வு செய்வதற்கு வரும் டிசம்பர் 9ம் தேதி முதல்…
வாரணாசியில் கடவுள் சிலைகளுக்கு முகமூடி அணிவிப்பு..
காற்று குறித்த மாசுபாடு நிகழ்வுகளுக்கு விழிப்புணர்வு சமூக ஆர்வலர்கள் பலரால் கொண்டு வரப்படுகிறது ஷெனாய் நகரில் ஒரு பள்ளியில் கூட இந்த விழிப்புணர்விற்கு மாணவிகள் வரவேற்பு தந்துள்ளதாக ஒரு செய்தியும் இருந்தது. வாகனப்புகை, பட்டாசு, மேலும் பல மாசுக்களினால் நோய் பரவும்…
