உஜ்ஜயினியில் உள்ள மஹாகாலேஷ்வரருக்கு தினமும் அதிகாலை 4.00 மணிக்கு நடக்கும் பஸ்மார்த்தி அபிஷேகம். இயற்கை மரணம் அடைந்த மனித உடலை எரித்து அந்த சாம்பலால் அபிஷேகம் செய்யப்படும். இந்த அபிஷேகம் இந்தியாவில் வேறெங்கும் நடக்காது. சிவபெருமான் காலனுக்கும் காலன் ஆவார் என்பதையும், எந்த உடலின் சாம்பலால் அபிஷேகம் செய்ய படுகிறதோ அந்த உயிர்க்கு இனி பிறவியில்லை என்பதையும் இந்த அபிஷேகம் உணர்த்துகிறது. நீங்கள் உஜ்ஜைனி சென்றாலும் இதை காணமுடியாது. ஏனென்றால் 2 கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு […]Read More
இன்று வைத்தியர்களுக்கெல்லாம் வைத்தியனாக விளங்கி, உடற்பிணி மட்டுமல்ல, பிறவிப்பிணியையும் சேர்த்து நீக்கும் நம் ஈசனை ‘வைத்தியநாதர்’ என்கிற திருநாமத்தில் அவன் எழுந்தருளிருக்கும் புள்ளிருக்குவேளூர் என்கிற வைத்தீஸ்வரன் கோவில் மூலம் அறிந்துகொள்வோம். வைத்தீஸ்வரன் கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள புகழ்பெற்ற செவ்வாய் பரிகார ஸ்தலமாகும். செவ்வாய் தோஷம் நீங்க இங்கு அங்காரகனை வழிபடுகின்றனர். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்றவராவார். தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது […]Read More
🌷சக்கரத்தாழ்வார் என்பவர், திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் உருவமாக கருதப்பெறுகிறார். இவர் சுதர்சனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும் அறியப்பெறுகிறார். இவர் பதினாறு கைகளை கொண்டவராகவும், சில இடங்களில் முப்பத்திரண்டு கைகள் கொண்டவராகவும் அறியப்பெறுகிறார். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென தனி சந்நிதி காணப்பெறுகிறது. 🌷ஆண்டுதோறும் ஆனி மாதம் தசமி திதியில், சித்திரை நட்சத்திரத்தில், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள்,ஸ்ரீ சுதர்சன ஜயந்தி உற்சவமாக கொண்டாடப்படும். 🌷மஹா விஷ்ணுவின் திருக்கரங்களில் ஐந்து ஆயுதங்களைக் காணலாம். இவற்றில் முக்கியமானது சக்கரம் […]Read More
நந்தி என்ற சொல்லுக்கு எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இந்த நந்தி சிவபெருமானின் வாகனமாக கருதப்படுவதோடு ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். நந்தி குறித்து பல சுவையான கதைகள் சொல்லப்படுகின்றன. அதாவது நந்தி தேவர் சிவலோகத்தின் தலைமைக் காவலனாக விளங்குவதால் சிவனை தரிசிக்க வரும் பக்தர்கள் நந்தியிடம் அனுமதி பெற்றுத்தான் சிவனை தரிசிக்க முடியுமாம். அதுபோன்று ஒருமுறை சிவனின் வாயிற்காப்போனாக பணிசெய்து வந்த நந்தி தேவர், […]Read More
அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்,இலுப்பைபட்டு, நாகப்பட்டினம் கணவனை காத்த அம்பாள் : பாற்கடலை கடைந்தபோது, வாசுகி பாம்பு களைப்பில் விஷத்தை கக்கியது. தேவர்களை காப்பதற்காக விஷத்தை சிவன் விழுங்கினார். அவ்விஷம், சிவனின் உடம்பில் சேராமல் இருப்பதற்காக அம்பாள், சிவனுக்கு பின்புறமாக இருந்து அவரது கண்டத்தை (தொண்டைக்குழி) பிடித்து நிறுத்தினாள். விஷம் கழுத்திலேயே தங்கியது. இதன் அடிப்படையில் இத்தலத்தில் சிவன் சன்னதிக்கு பின்புறம் அமிர்தவல்லிக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. அமிர்தத்தில் கலந்திருந்த விஷத்தை நிறுத்தியவள் என்பதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறாள். கணவனை காத்த […]Read More
கிருத யுகத்தில் வீக்ஷாரண்யம் என்ற அடர்வனத்தில் ‘ஹிருத்தாபநாசினி’ என்ற தீர்த்தக்குளம் ஒன்று அமைந்திருந்தது. ஒவ்வோர் ஆண்டும் கங்கை முதலான பல தீர்த்தங்கள் இந்தக் குளத்து நீரோடு கலப்பதாக ஐதீகம். இந்த உண்மையை அறிந்திருந்த முனிவர்களும் தேவர்களும், தை அமாவாசையன்று இக்குளத்திற்கு வந்து நீராடிச் செல்வார்கள். தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருந்த சாலிஹோத்ரர் என்ற அந்தணர், ஒரு தை அமாவாசையன்று இங்கு வந்தடைந்து முனிவர்களும் தேவர்களும் நீராடும் காட்சியைக் கண்டு விவரங்களை விசாரித்தறிந்தார். ‘இப்பேர்ப்பட்ட குளத்தி்ன அருகில் இறைவன் இல்லாதிருப்பதா?’ […]Read More
சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார். காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்ட தேவர் அவர்கள், சிவஸ்தானம் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி ‘விபத்து நேர்ந்து விட்டது’ என்று சொன்ன மாத்திரத்தில் ‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’ என்றும் பெரியவர் கேட்க, அதிர்ந்து […]Read More
பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா? தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்! தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய. தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன. இதை கவனித்த நம் […]Read More
வைகாசி விசாக நாளில், மனமொன்றி வழிபாடு செய்வோம். முருகப்பெருமானை நினைத்து, எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, இயலாதவர்களுக்கு வழங்குவோம். கேட்கும் வரம் அனைத்தும் தந்தருள்வான் வடிவேலன். பங்குனி மாதத்தின் உத்திரம் போல, தை மாதத்து பூசம் போல, கார்த்திகை மாதத்தின் கார்த்திகை போல, வைகாசி மாதத்தில் விசாகம் முருகக் கடவுளுக்கு உகந்த அற்புதமான நாள். பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, தைப்பூசம், வைகாசி விசாகம் முதலான நாட்களில், முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பார்கள் பக்தர்கள். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று […]Read More
விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடனான பதிவு! யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்களுக்கு நன்மை செய்யும் என்பதை இந்தப்பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்… இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது. திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் .. ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளதால் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் . கந்த புராணத்தில் […]Read More
- முதன் முதல் என் தொண்டின் ஆர்வம்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசுத்தொகை – முதல்வர் அறிவிப்பு
- தொடர்ந்து ட்ரெண்டிங்கில் ‘ஹிட்லர்’ படத்தின் பர்ஸ்ட் லுக்…
- மகாத்மா காந்தி
- அகிலம் அறிந்திட அறிவை தந்த வள்ளலே
- காந்தி ஜெயந்தி பாடல்தேசத் தந்தையேஎண் சீர் விருத்தம்
- காந்தி ஜெயந்தி பாடல்| எண்சீர் விருத்தம்| முனைவர் பொன்மணி சடகோபன்
- ஆதி குணசேகரன் ஆக ப்ரோமோவில் வந்த “அந்த” ப்ரபலம்…
- இன்று கிராமசபை கூட்டம்.. தமிழ்நாடு முழுவதும் ஆன்லைனில் பேசும் முதல்வர் ஸ்டாலின்…
- பிக் பாஸ் சீசன் 7ல் வீட்டிற்குள் நுழைந்த 18 போட்டியாளர்களின் விவரம்…