என்னையும் புதுப்பிக்க.. ************************* நலம் நலமறிய ஆவலில் தொடங்கியது என் பயணம்உறவுகளை இணைக்கும் அன்பு பாலமானேன்கிராமத்திற்கும் நகரத்திற்குமானதகவல்களை கொண்டுசேர்க்கும் தூதுவனாகஇருக்கின்றேன்தினமும் கருத்தரித்துதினமும் பிரசவிப்பேன்மனதின் உணர்வுகளை சுமப்பதால்சிவப்பாகவே இருக்கின்றேன்அறுவை சிகிச்சை செய்துபிரசவம் பார்க்கும் மருத்துவர்என்னுயிர் தபால்காரர்நீண்டதொலைவிலிருக்கும்தாய்க்கும் மகனுக்குமானஇன்னொருதொப்புள்கொடி உறவானேன்புறாவிற்கும் அன்னத்திற்கும்ஒய்வு கொடுத்த அதிகாரி…
