இன்று தவெக தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார் விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலயில், அரசியல் கட்சிகள் அனல் பறக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கவர்ச்சிகர வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையையும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் தவெக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிடுகிறார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது தொடர்பாக தவெக தலைமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இன்று (16.04.2026, வியாழக்கிழமை), சென்னை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில், மாலை 3 மணிக்கு நடைபெற உள்ள நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தொலைநோக்குப் பார்வை கொண்ட, தமிழ்நாட்டு மக்களுக்கான கழகத் தேர்தல் அறிக்கையை விஜய் வெளியிடுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் 800 பேர் மட்டுமே கலந்துகொள்ள, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.எனவே, QR code அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ள கழக நிர்வாகிகள் தவிர்த்து, வேறு யாருக்கும் அனுமதி இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவாசய கடன் தள்ளுபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,500, குடும்பத்திற்கு வருடத்திற்கு 6 சமையல் கேஸ் சிலிண்டர்கள் இலவசம் உள்ளிட்ட திட்டங்களை ஏற்கனவே தனது பிரசாரத்தில் விஜய் அறிவித்துள்ள நிலையில், இன்று வெளியிட உள்ள தேர்தல் அறிக்கையிலும் கவர்ச்சிகர வாக்குறுதிகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!