தவெக நிர்வாகிகளுடன் ஏப்.16-ல் விஜய் ஆலோசனை

தவெக தலை​வர் விஜய், சென்​னை​யில் வரும் 16-ம் தேதி கட்சி நிர்​வாகி​களு​டன் முக்​கிய ஆலோ​சனை நடத்த திட்​ட​மிட்​டுள்​ளார்.

இதுகுறித்து தவெக வட்​டாரங்​கள் கூறிய​தாவது: தமிழக சட்​டப்​பேர​வைத்தேர்​தலில், நடிகர் விஜய்யின் தவெக தனித்​துப் போட்​டி​யிடு​கிறது. தனது கட்சி வேட்​பாளர்​களை ஆதரித்​து, தமிழகம் முழு​வதும் விஜய் பிரச்​சா​ரம் மேற்​கொண்டு வரு​கிறார்.

தேர்​தல் பிரச்​சா​ரம் இறு​திக்​கட்​டத்தை எட்​டி​யுள்ள சூழலில், வரும் 16-ம்தேதி சென்​னை​யில் கட்சி நிர்​வாகி​களு​டன் விஜய்மிக முக்​கிய​மான ஆலோ​சனை​யில் ஈடு​பட​வுள்​ளார். சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள ஆதவ் அர்​ஜு​னா​வின் அலு​வல​கத்​தில் இந்​தக் கூட்​டத்தை நடத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

அன்று காலை 10 மணிக்கு தொடங்​கும் கூட்​டத்​தில், கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த் உள்​ளிட்ட மாநில அளவி​லான முக்​கிய நிர்​வாகி​கள் பலரும் கலந்து கொள்​கின்​றனர். தமிழகம் முழு​வ​தி​லும் இருந்து 500-க்​கும் மேற்​பட்ட முக்​கிய நிர்​வாகி​கள் இதில் பங்​கேற்க வேண்​டும் என அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

தேர்​தல் நெருங்​கும் வேளை​யில், வாக்​குச்​சாவடி முகவர்​களின் பணி​கள் மற்​றும் களப்​பணி​கள் குறித்து இறு​திக்​கட்ட ஆலோ​சனை​களை​யும், தேர்​தல் வியூ​கங்​களை​யும் விஜய் இந்த சந்​திப்​பில் வழங்​கு​வார் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

தேர்​தலுக்கு இன்​னும் சில நாட்​களே உள்ள நிலை​யில், விஜய்​யின் இந்த ஆலோ​சனை கூட்​டம் அரசி​யல் வட்​டாரத்​தில் பெரும் எதிர்​பார்ப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இவ்​வாறு அவர்​கள் தெரிவித்​தனர்​.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!