அனைத்துக் கட்சிகளுக்கு பிரதமர் மோடி கடிதம்

புதுடெல்லி: ‘‘மகளிர் இடஒதுக்​கீடு சட்​டத்தை அமல்​படுத்த அனைத்து கட்​சிகளும் ஆதரவு அளிக்க வேண்​டும்’’ என்று பிரதமர் நரேந்​திர மோடி அழைப்பு விடுத்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அனைத்து கட்​சிகளுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: ஏப்​ரல் 16-ம் தேதி தொடங்க உள்ள நாடாளு​மன்ற சிறப்பு கூட்​டத்​தில் நாரி சக்தி வந்​தன் அதினி​யம் (மகளிர் இடஒதுக்கீடு சட்டம்) குறித்து வரலாற்று சிறப்​புமிக்க விவாதம் நடை​பெற உள்ளது. பெண்​கள் முன்​னேறி​னால் ஒரு சமு​தா​யம் முன்னேறும். இன்​றைய காலத்​தில் நமது பெண்​கள் ராணுவம் முதல் ஸ்டார்ட் அப் நிறு​வனங்​கள் வரை​ புதிய சாதனைகளை படைத்து வரு​கின்​றனர்.

கடந்த 2023-ம் ஆண்​டில் நாடாளு​மன்​றத்​தில் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் நிறைவேற்​றப்​பட்​டது. இந்​திய மக்​கள் தொகை​யில் பாதிக்​கும் மேற்​பட்​டோர் பெண்​கள் ஆவர். எனவே இந்​திய அரசி​யலில் அவர்​களின் பங்​களிப்​பும் மிகவும் அவசி​ய​மாகிறது. இதை கருத்​தில் கொண்டு நாடாளு​மன்​றத்​தில் பெண்​களுக்​கான இடங்​கள் அதிகரிக்கப்பட உள்​ளன. மகளிர் இடஒதுக்​கீடு சட்​டத்தை அமல்​படுத்​து​வது குறித்து நாடாளு​மன்​றத்​தில் விரி​வாக விவாதம் நடத்​தப்பட உள்ளது.

இந்த சட்​டத்தை உடனடி​யாக அமல் செய்ய வேண்​டியது அவசி​யம். இதுதொடர்​பாக பல்​வேறு தரப்​பினருடன் மத்திய அரசு சார்​பில் ஆலோ​சனை​கள் நடத்​தப்​பட்​டன. குறிப்​பாக அரசி​யல் கட்​சிகளின் தலை​வர்​களின் கருத்துகளும் கேட்​டறியப்​பட்​டன. இவற்​றின் அடிப்​படையில் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டத்தை அமல்​படுத்த முடிவு செய்​யப்​பட்டு உள்​ளது. இதன்​படி வரும் 2029-ம் ஆண்டு மக்​கள​வைத் தேர்​தல் மற்​றும் மாநிலங்​களின் சட்டப்​பேர​வைத் தேர்​தல்​களில் மகளிருக்கு மூன்​றில் ஒரு பங்கு இடஒதுக்​கீடு வழங்​கப்​படும். இதன்​மூலம் இந்​திய ஜனநாயகம் வலுப்​படும்.

எனவே நாடாளு​மன்ற சிறப்பு கூட்​டத்​தில் மகளிர் இடஒதுக்கீடு சட்ட அமலாக்​கத்​துக்கு அனைத்து கட்சிகளின் எம்​பிக்​களும் ஆதரவு அளிக்க வேண்​டும். பெண்​களுக்​கான இடஒதுக்​கீட்டை அதி​கரிக்க வேண்​டும் என்று அனைத்து கட்​சிகளும் விரும்​பு​கின்​றன. அந்த லட்சிய கனவை, நனவாக்​கும் நேரம் வந்​து​விட்​டது. வரலாற்று சிறப்​புமிக்க மாற்​றத்தை ஏற்​படுத்​து​வோம். இவ்வாறு பிரதமர் மோடி கடிதத்​தில் குறிப்​பிட்டு உள்​ளார்.

கடந்த 1996-ம் ஆண்டு முன்​னாள் பிரதமர் தேவக​வுடா ஆட்சி​யின்​போது முதல்​முறை​யாக மகளிர் இடஒதுக்​கீடு மசோதா அறி​முகம் செய்​யப்​பட்டு தோல்வி அடைந்​தது. அதன்பின்னர் பல முறை இந்த மசோதா கொண்டு வரப்பட்டு தோல்வி அடைந்தது. சுமார் 27 ஆண்​டு​களுக்​குப் பிறகு பிரதமர் மோடி தலை​மையி​லான ஆட்​சி​யில் 2023-ம் ஆண்​டில் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் நிறைவேற்றப்பட்டது.

தற்​போது நாடு முழு​வதும் மக்​கள் தொகை கணக்​கெடுப்பு தொடங்கி உள்​ளது. இந்த கணக்​கெடுப்​புக்​குப் பிறகு மக்கள​வைத் தொகு​தி​களின் எண்​ணிக்கை அதிகரிக்கப்பட உள்​ளது. இதன்​படி மக்​களவை​யின் 543 இடங்​கள், 816 ஆக அதி​கரிக்​கப்பட உள்​ளது. இதில் பெண்​களுக்கு 273 இடங்​கள் ஒதுக்​கீடு செய்​யப்பட உள்​ளன. இதை உறுதி செய்​யும் மசோ​தாக்​களை நிறைவேற்ற ஏப்ரல் 16-ம் தேதி முதல்​ 18-ம்​ தேதி வரை நா​டாளு​மன்​ற சிறப்​பு கூட்​டம்​ நடைபெற உள்​ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!