இன்று முதல் 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்

பன்னிரெண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடங்க உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மாநிலப்பாடத்திட்டத்தில் படித்து பொதுத்தேர்வு எழுதிய 12-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 11 -ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகளை இன்று முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை மேற்கொள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 12-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 2-ஆம் தேதி முதல் மார்ச் 27-ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுதுவதற்கு மாநிலம் முழுவதும் மொத்தம் 7,99,692 மாணவ, மாணவிகள விண்ணப்பித்திருந்தனர்.

12-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை முதன்மை தேர்வாளர் மற்றும் கூர்ந்தாய்வு அலுவலர்கள் இன்று நடைபெறும் . அவர்கள் அரசுத் தேர்வு இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ள விடைக்குறிப்பில் ஏதேனும் மாற்றம் இருந்தால் தெரிவிக்க வேண்டும்.

அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதிக்குள் உதவி தேர்வாளர்களாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தம் செய்யப்படும். இந்தப் பணிகளை 20-ஆம் தேதிக்குள் முகாம்களில் முடிக்க வேண்டும் எனவும், 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி வெளியிடப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அரசுத் தேர்வுத்துறை இயக்கக அதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!