வரலாற்றில் இன்று (நவம்பர் 08)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

இன்று நவம்பர் 8  கிரிகோரியன் ஆண்டின் 312 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 313 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 53 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1520 – டென்மார்க் படைகள் சுவீடனை முற்றுகையிட்டன. சுமார் 100 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1811 – இலங்கையில் இயற்றப்பட்ட புதிய நீதிமன்ற சட்டப்படி மேல் நீதிமன்றம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று கொழும்பில் பிரதம நீதியரசரின் நீதிமன்றமும், Puisne Justice என அழைக்கப்படும் நீதிமன்றம் யாழ்ப்பாணத்திலும் அமைக்கப்பட்டன. கிரிமினல் வழக்குகளுக்கு ஜூரி முறையும் அமுலுக்கு வந்தது.
1889 – மொன்டானா ஐக்கிய அமெரிக்காவின் 41வது மாநிலமாக இணைந்தது.
1895 – எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்ஹெம் ரொண்ட்ஜென் எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார்.
1917 – ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியை அடுத்து லெனின், ட்ரொட்ஸ்கி, ஸ்டாலின் ஆகியோருக்கு முழு அதிகாரமும் தரப்பட்டது.
1923 – மியூனிக் நகரில் ஹிட்லர் தலைமையில் நாசிகள் ஜெர்மனிய அரசைக் கவிழ்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
1938 – பாரிஸ் நகரில் ஜெர்மனிய தூதுவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் யூதர்களுக்கு எதிராக வன்முறைகள் கிளம்பின.
1939 – மியூனிக் நகரில் ஹிட்லரைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
1942 – மேற்கு உக்ரேனின் தெர்னோப்பில் நகரில் நாசி ஜேர்மனியினர் 2,400 யூதர்களை பெல்செக் நகரில் இருந்த வதை முகாமுக்கு அனுப்பினர்.
1950 – கொரியப் போர்: ஐக்கிய அமெரிக்க வான்படையினர் வட கொரிய மிக் விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தினர்.
1965 – பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது.
1977 – கிமு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க மன்னன் இரண்டாம் பிலிப்பு என்பவனின் சமாதி மனோலிஸ் அண்ட்ரோனிக்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1987 – வடக்கு அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவ நினைவு நிகழ்வொன்றில் ஐரியக் குடியரசு இராணுவத்தினரின் குண்டு வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – வாகரை குண்டுத்தாக்குதல்: மட்டக்களப்பு வாகரையில் இலங்கை இராணுவத்தினர் ஏவிய பல்குழல் எறிகணை வீச்சுத் தாக்குதலில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 125-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
2006 – பாகிஸ்தானில் தர்காய் என்ற இடத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1656 – எட்மண்டு ஏலி, ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1742)

1680 – வீரமா முனிவர், இத்தாலியத் தமிழறிஞர் (இ. 1742)

1831 – லிட்டன் பிரபு, இந்தியாவின் 30வது பிரித்தானிய ஆளுநர் (இ. 1880)

1875 – சியூ சின், சீனப் புரட்சியாளர், பெண்ணிய எழுத்தாளர் (இ. 1907)

1893 – துவாரம் வேங்கடசுவாமி நாயுடு, ஆந்திர வயலின் இசைக் கலைஞர் (இ: 1964)

1902 – ஜி. ஜி. பொன்னம்பலம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1977)

1903 – அல்பிரட் தம்பிஐயா, இலங்கைத் தொழிலதிபர், அரசியல்வாதி

1910 – நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை, தமிழக தவில் கலைஞர் (இ. 1964)

1912 – டி. எஸ். சந்தானம், தமிழகத் தொழிலதிபர் (இ. 2005)

1908 – ராஜா ராவ், இந்திய எழுத்தாளர் (இ. 2006)

1920 – சிதாராதேவி, இந்திய நடிகை, நடன இயக்குநர் (இ. 2014)

1923 – ஜாக் கில்பி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2005)

1926 – டார்லீன் சி. ஆப்மேன், அமெரிக்க அணுக்கரு வேதியியலாளர்

1927 – லால் கிருஷ்ண அத்வானி, இந்திய அரசியல்வாதி

1937 – ராண்டார் கை, இந்தியத் தமிழ்த் திரைப்பட, சட்ட எழுத்தாளர் (இ. 2023)

1943 – ரிச்சர்ட் பென்சன், அமெரிக்க நிழற்படக்காரர், அச்சுத் தொழிலாளி, கல்வியாளர், நூலாசிரியர் (இ. 2017)

1947 – உஷா உதூப், இந்திய நடிகை, பாடகர்

1954 – கசுவோ இசுகுரோ, சப்பானிய-பிரித்தானிய புதின எழுத்தாளர்

1957 – சுரேஷ் பிரேமச்சந்திரன், இலங்கைத் தமிழ்ப் போராளி, அரசியல்வாதி

1966 – சீமான், தமிழக அரசியல்வாதி, திரைப்பட இயக்குநர், நடிகர்

1969 – உபேந்திரா லிமாயி, இந்தியத் திரைப்பட நடிகர்

1976 – பிறெட் லீ, ஆத்திரேலியத் துடுப்பாளர்

1981 – நியல் ஓ’பிறையன், அயர்லாந்து அணியின் குச்சுக் காப்பாளர்

1986 – ஏரன் சுவோற்சு, அமெரிக்க கணினியியலாளர் (இ. 2013)

1989 – அசோக் செல்வன், தமிழ்த் திரைப்பட நடிகர்

இறப்புகள்

397 – மார்ட்டின், பிரான்சிய ஆயர், புனிதர்

955 – இரண்டாம் அகாப்பெட்டஸ் (திருத்தந்தை)

1240 – இப்னு அரபி, அராபிய சூபி இறைஞானி, மெய்யியலாளர் (பி. 1165)

1605 – இராபர்ட்டு கேட்சுபி, ஆங்கிலேயக் குற்றவாளி, வெடிமருந்து சதித்திட்டத் தலைவர் (பி. 1573)

1674 – ஜான் மில்டன், ஆங்கிலேயக் கவிஞர், மெய்யியலாளர் (பி. 1608)

1958 – சி. கணேசையர், இலங்கைத் தமிழறிஞர் (பி. 1878)

1969 – வெசுட்டோ மெல்வின் சுலிப்பர், அமெரிக்க வானியலாளர் (பி. 1875)

1970 – நெப்போலியன் ஹில், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1883)

1987 – சக்தி கிருஷ்ணசாமி, தமிழக எழுத்தாளர், பாடலாசிரியர் திரைக்கதை ஆசிரியர் (பி. 1913)

2000 – சோ. சிவபாதசுந்தரம், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர், ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1912)

2006 – கா. காளிமுத்து, தமிழக அரசியல்வாதி (பி. 1942)

2009 – வித்தாலி கீன்ஸ்புர்க், நோபல் பரிசு பெற்ற உருசிய இயற்பியலாளர் (பி. 1916)

2013 – சிட்டிபாபு, இந்திய நடிகர் (பி. 1964)

2014 – வி. சிவசாமி, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1933)

2014 – ஐ. எஸ். முருகேசன், தமிழக மோர்சிங் இசைக் கலைஞர் (பி. 1930)

2015 – மாதுலுவாவே சோபித்த தேரர், இலங்கைப் பௌத்த துறவி, அரசியல் செயற்பாட்டாளர் (பி. 1942)

சிறப்பு நாள்

உலக நகர்ப்புறவியம் நாள்

பன்னாட்டுக் கதிரியல் நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!