செண்பகத்தோப்பு மலையில் புது புது அருவிகள் தோன்றி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரை ஒட்டிய மலை பகுதிகளில் சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்தது. அதன் விளைவாக செண்பகத்தோப்பு மலையில் புது புது அருவிகள் தோன்றி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
