இன்றைய ராசி பலன்கள் (செப்டம்பர் 17 புதன்கிழமை 2025)

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் செப்டம்பர் 16-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். வெளியூரில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். தாய்வழி உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சி தரும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர் வருகையால் செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

மகிழ்ச்சியான நாள். மனதில் தைரியம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தைவழி உறவுகள் கேட்கும் உதவியைச் செய்து தருவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசிய சக ஊழியர்கள் மனம் திருந்தி மன்னிப்பு கேட்பார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் மறையும்.

கடக ராசி அன்பர்களே!

பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். பிள்ளைகள் வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் அதனால் பெரிய பாதிப்பு எதுவுமிருக்காது. சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் எதிர்பார்த்ததைவிட குறைவாகத்தான் இருக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். நிர்வாகத்திடம் எதிர்பார்த்த சலுகை கிடைப்பது உற்சாகம் தரும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

கன்னி ராசி அன்பர்களே!

மனதில் தைரியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் உடல் நலனில் கவனம் தேவை. தாயின் தேவைக்காக செலவு செய்யவேண்டி வரும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை சற்றுக் குறைவாகவே இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

துலா ராசி அன்பர்களே!

பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதற்கு வாய்ப்பு ஏற்படும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். அரசாங்க அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி இழுபறிக்குப் பிறகு கிடைக்கும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

தெய்வ அனுக்கிரகம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். பிற்பகலுக்கு மேல் மனதில் சற்று குழப்பம் ஏற்படக்கூடும். விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் இருந்தாலும் செயல் அளவில் ஒன்று மில்லை. தாய்வழி உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் அதிகரிக்கும்.

மகரராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். அதே நேரம் திடீர் செலவுகளும் ஏற்பட்டு திக்குமுக்காட வைக்கும். அரசாங்கக் காரியங்கள் முடிவதில் இருந்து வந்த இழுபறி நிலை மாறி, அனுகூலமாக முடியும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையின் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சலித்துக்கொள்ளாமல் முடித்து பாராட்டு பெறுவீர்கள். வியாபாரத்தில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.

கும்பராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உங்கள் பொறுப்புகளை வாழ்க்கைத் துணை பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள் வார்கள். வியாபாரம் எதிர்பார்த்ததுபோலவே நடைபெறுவது மகிழ்ச்சி தரும்.

மீனராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு சகோதரர்களால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு நவீன டிசைனில் புதிய ஆடைகளை வாங்கும் யோகம் ஏற்படும். சிலருக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். லாபமும் அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!