எளிமை என்ற சொல்லுக்கு இலக்கணமாக வாழ்ந்து சாதித்த முதல்வர் ஓமந்தூரார் காலமான தினமின்று. 23.3-1947 முதல் 6-4-1949 வரை இரண்டாண்டுகள் மட்டுமே முதல்வராக இருந்தது ஓ.பி.ஆர் ஆட்சியில் இருந்தபோது கட்சிக்காரர்களுக்கோ, தன் குடும்பத்தினருக்கோ எந்தவிதச் சிறு சலுகையையோ, வேலைவாய்ப்பையோ அவர் வழங்கியதில்லை. ஓமந்தூராருக்கு முன்னர் சென்னை மாகாணத்தை ஆட்சிசெய்த ஒன்பது முதலமைச்சர்களும் அரச வம்சத்தையும், ஜமீன்தார் குடும்பத்தையும் சேர்ந்தவர்கள். அவர்களில் பலர் உயர்கல்வி பயின்றவர்கள். ஓமந்தூரார் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 8-ம் வகுப்பு வரையே படித்தவர்.அவர் பதவி ஏற்றதும் செய்த முதல் வேலை பாராட்டுக் கூட்டங்கள், வெற்றி விழாக்கள் ஆகிய அரசியல் ஆரவாரங்களுக்குத் தடைபோட்டதுதான். ஆம், அதுவரை எந்த இந்திய மாகாண முதல்வர்களும் செய்யாத நடவடிக்கைகள் இவை. முதலமைச்சரைச் சந்திப்பதற்கென வழங்கப்படும் அனுமதிச் சீட்டில், `என்ன காரணத்துக்காகச் சந்திக்க வேண்டும்?’ என ஒரு கேள்வியை இணைக்கும்படி முதன்முதலில் உத்தரவிட்டவர் ஓமந்தூரார்தான். நியாயமான காரணத்துக்காக வருவோரை மட்டுமே சந்திப்பது என்பதை, தான் முதலமைச்சராகப் பதவி ஏற்ற நாள் முதலே வழக்கமாக்கிக்கொண்டார் அவர். தனிப்பட்ட சலுகைகள், பரிந்துரைகளுக்காக வருவோரை ஓமந்தூரார் சந்திக்க அனுமதிக்கவே மாட்டார்.அப்பேர்பட்ட ஓமந்தூரார் தான் முதல்வர் பதவியேற்றிருந்த காலத்தில் ஆலயப் பிரவேசத்தை எல்லாக் கோயில்களிலும் முறைப்படுத்த ஒரு தனிச் சட்டத்தையும் தோற்றுவித்ததை வரலாறு என்றைக்கும் நினைவில் வைத்திருக்கும். அப்போதைய சென்னை மாகாணத்தில் இருந்த திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க, 1947-ம் ஆண்டுவரை ஆதிதிராவிடர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆலயப் பிரவேசச் சட்டத்தின் மூலம் அவர்கள் ஏழுமலையானை தரிசிக்கவைத்ததோடு அவர் நிற்கவில்லை. திண்டிவனம் ஆதிதிராவிடர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான குலசேகரதாஸ் என்பவரை, திருமலை-திருப்பதி கோயிலின் அறங்காவலராக நியமித்தார். ஆலயப் பிரவேச வரலாற்றில், இது தனித்துவமிக்க ஒரு சாதனை.வ் அவர் வள்ளலார் பக்தர். ஆனால், தாடி இல்லாத ராமசாமி என்றார்கள். பெரியார், கறுப்புசட்டை போட்ட ராமசாமி. இவர் வெள்ளை சட்டை போட்ட ராமசாமி என வர்ணித்தார்கள். காரணம், சமூக நீதியை நிலைநாட்டினார். கோவில் நுழைவு அதிகாரச் சட்டம் மூலம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் இந்துக் கோவில்களில் நுழைவதற்கான உரிமையை சட்டப்பூர்வமாக்கினார். அறநிலைய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றினார்.அவரை கம்யூனிஸ்ட் என்றார்கள். காரணம், ஜமீன்தாரி-இனாம்தாரி முறைகளை ஒழிக்க நடவடிக்கை எடுத்தார். விவசாயிகள் நலனுக்குத் துணை நின்றார். அவர் காந்தியவாதிதான் என்பதன் அடையாளமாக, மதுவிலக்கை முழுமையாகக் கொண்டு வந்தார். ஊழல் ஒழிப்பை முதன்மையாக்கினார். அவர்தான், இந்தியா சுதந்திரமடைந்தபோது தமிழகத்தின் (சென்னை மாகாணத்தின்) முதல்வராக இருந்த (ஓ.பி.ஆர்) ஓமந்தூர் பி.ராமசாமியார் (திண்டிவனம் அருகேயுள்ள சொந்த ஊரான ஓமந்தூரில் அவர் நினைவாக மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவி காலியானபோது, அந்த இடத்திற்கு தலைமை நீதிபதி பரிந்துரைத்த வழக்கறிஞர் என்.சோமசுந்தரத்துக்கு முதல்வர் ஓமந்தூரார் ஏற்பளித்தார். ஆனால் பிரதமர் நேருவின் அமைச்சரவையில் இருந்த கோபாலசாமி அய்யங்கார் தனது மருமகனான வழக்கறிஞர் திருவேங்கடாச்சாரியை நீதிபதியாக்க நினைத்தார். ராஜாஜி ஆதரித்தார். பிரதமர் வரை பஞ்சாயத்து போனது. ஓமந்தூராரிடம், “பிராமணரல்லாதார் அரசாங்கத்தை நடத்தப் பார்க்கிறீர்கள்” என்று நேரு குற்றம்சாட்டியபோது, ”நீங்கள் சொன்னதை வாபஸ் வாங்குங்கள். இல்லையென்றால் என் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுங்கள்” என நேருக்கு நேராக நேருவிடம் சொன்ன துணிச்சல்காரர் ஓ.பி.ஆர். வகுப்புவாதியாக (சாதி கண்ணோட்டத்தில்) செயல்படுகிறார் என்று இந்து பத்திரிகை, ஓமந்தூராரைப் பற்றி எழுதியது. உடனே அதன் ஆசிரியரை அழைத்து, உங்கள் அலுவலகத்தில் பிராமணர்கள் எத்தனை பேர் வேலை பார்க்கிறார்கள்? அதில் அய்யங்கார்கள் எத்தனை பேர்? எனக் கேட்டதுடன், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற சமூகத்தவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்களா? நீங்கள் வகுப்புவாதியா-நான் வகுப்புவாதியா? என ஒரே போடாகப் போட்டார். அதனால்தான் அறிஞர் அண்ணா தனத திராவிட நாடு இதழில், ‘காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்’ என எழுதினார்.இத்தனைக்கும் ஓமந்தூராரின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த அவினாசிலிங்கம், இந்தித் திணிப்பில் காட்டிய வேகத்தை எதிர்த்து திராவிடர் இயக்கத்தினர் போராட்டம் நடத்தி சிறை சென்ற காலம் அது. எனினும், சமூக நீதியின் அடிப்படையில் ஓமந்தூரார் அரசை ஆதரித்தனர். எளிமையின் அடையாளமான ஓமந்தூரார், அரசாங்கம் கொடுத்த பெரிய பங்களாவைத் தவிர்த்தவர். (அப்படிப்பட்டவரின் பெயரில்தான் அரசின் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்ட வளாகம், ஓமந்தூரார் அரசினர் தோட்டம் என்றழைக்கப்படுகிறது) உடல் நலக் குறைவால் ஒருமுறை அரசுப் பொதுமருத்துவஸொமனையில் ஓமந்தூரார் அனுமதிக்கப்பட்டபோது, “எல்லா மக்களுக்கும் செய்கிற வைத்தியமே எனக்கும் போதும். எனக்கு சிகிச்சை அளித்ததைப் பயன்படுத்தி எந்த டாக்டரும் சிபாரிசுக்கு வரக்கூடாது” என்றார். முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின்னர், ஓமந்தூரார் அரசியல் வாழ்வை முற்றிலுமாகத் துறந்து ஆன்மிகத்தில் ஈடுபட்டாலும் தனது மரபார்ந்த விவசாய வாழ்க்கையை மீண்டும் வாழ ஆசைப்பட்டு, தனது வியர்வை சிந்தும் உழைப்பால் வடலூர் பகுதியிலிருந்த தரிசு நிலங்களையெல்லாம் விளைநிலங்களாக மாற்றினார். இன்று அணையா ஜோதியாக வெளிச்சம் வீசும் வடலூரில் சுத்த சன்மார்க்க நிலையத்தை நிறுவ இவர்தான் முன்னின்றார். வடலூரில் வள்ளலார் குருகுலப் பள்ளி, அப்பர் அனாதைகள் இல்லம், ஏழை மாணவர்களுக்கான குடில், அப்பர் சான்றோர் இல்லம், ராமலிங்கத் தொண்டர் இல்லம் ஆகிய நிறுவனங்களை ஓமந்தூரார் ஏற்படுத்தினார்.
உடனடி நூடுல்ஸ் முதன்முறையாக விற்பனைக்கு வந்த நாள் உலக மக்களைக் கவர்ந்த இன்ஸ்டன்ட் உணவு வகைகளில் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்க்கு தனி இடம் உண்டு. இரண்டே நிமிடங்கள் போதும் சமைக்கத் தெரியாதவர்களும் சமைத்து ருசிக்கலாம் என்கிற விளம்பரத்தின் மூலமாக, மூலை முடுக்கெல்லாம் பிரபலமாகி, இன்றைக்கு தவிர்க்க முடியாத உணவாகிவிட்டது. அவசரமாக அலுவலகம் செல்லும்போதும் சரி, நேரம் கடந்து வீடு திரும்பினாலும் சரி, பேச்சுலர்கள் பசியை பெரும்பாலான நேரங்களில் தீர்ப்பது இந்த உடனடி நூடுல்ஸ்தான். நூடுல்ஸ் வெறும் உணவு மட்டுமல்ல, பல சமூகக் கலாச்சாரங்கள் இணைந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. சீனர்களின் நீண்ட ஆயுளுக்கு இதுவே காரணமாக சொல்லப்படுகிறது. ஜப்பானில் நட்பின் அடையாளமாகவும் நூடுல்சை கருத்துகின்றனர். பல நாடுகளில் குடும்ப விழாக்கள், சிறப்பு நிகழ்ச்சிகளில் நூடுல்ஸ் பரிமாறப்படுகிறது. வெற்றிகரமான தொழில்துறை உணவுகளில் ஒன்றுதான் இந்த இன்ஸ்டன்ட் நூடுல்ஸ். விலையும் குறைவு, சமைப்பதும் எளிமை என்பதால், இதை எங்கு வேண்டுமானாலும் சமைக்கலாம், சாப்பிடலாம். அதனால்தான், எவரெஸ்ட் உச்சிக்கு செல்பவர்களும் கொண்டு செல்கிறார்கள். விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கும் கொண்டு செல்கிறார்கள்… இவ்வளவு ஏன், அமெரிக்க சிறைகளில் அதிகமாக வர்த்தகம் செய்யப்படுகிற உணவுப் பொருளாகவும் இந்த இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மாறியிருக்கிறது. தொடக்கத்தில் ஒரு சிறிய கைவினைப் பொருளாக தொடங்கிய நூடுல்ஸ், இன்று உலகம் முழுவதும் பிரபலமான உணவுகளில் ஒன்றாக மாறியுள்ளது.இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் எங்கிருந்து வந்தது என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமானால் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானுக்கு மீண்டும் செல்ல வேண்டும். குண்டுவீச்சினால் பல பகுதிகள் அழிக்கப்பட்டு பெரும்பாலான மக்கள் பட்டினி கிடந்த காலம் அது. மோமோபிக்கு அன்டோ என்கிற ஜப்பானிய தொழிலதிபர் தன்னுடைய தொழிலில் நஷ்டமடைந்து கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்தார். அவர் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு மீண்டு வர நினைத்தார். கடும் குளிரில் ஒரு கப் பாரம்பரிய ரேமென் நூடுஸ்ஸுக்காக பசியோடு நீண்ட வரிசையில் காத்திருந்த ஜப்பானியர்களைக் கண்டதும் மோமோபிக்கு அன்டோவுக்கு ஒரு யோசனை தோன்றியது. அமெரிக்க அரசாங்கத்தால் ஜப்பானுக்கு வழங்கப்பட்ட கோதுமை உணவுகளை உண்பதற்கு மக்களை ஊக்குவிக்க ஜப்பானிய அரசாங்கம் வழி தேடுவதும் அன்டோவுக்குத் தெரிய வந்தது. உடனே தன்னுடைய வீட்டின் பின்புறத் தோட்டத்தில் இருக்கும் மரக்குடிலுக்குச் சென்றவர் ஓர் ஆண்டு கழித்து இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் தயாரிப்பு முறையோடு வெளியே வந்தார். அவர் நினைத்தது போலவே இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் அதிவேகமாக பிரபலமடையத் தொடங்கியது. ஜப்பானின் நவீன பொருளாதாரத்துக்கு எழுச்சியை ஊட்டி, மாணவர்களுக்கும், பசியோடு இருந்த தொழிலாளர்களுக்குமான உணவாகவே மாறிவிட்டது இன்ஸ்டன்ட் நூடுல்ஸ். மிக விரைவாக உலகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. பலருடைய சுவைக்கும் பொருந்தக்கூடிய வகையில் மாற்றியமைக்கக் கூடிய உணவாக இந்த இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்துப் படைகளின் வாஷிங்டன் எரிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமெரிக்க அரசின் கருவூலம், பாராளுமன்ற நூலகம், போர்த்துறை அலுவலகம் உள்ளிட்ட அமெரிக்க அரசுக் கட்டிடங்கள் எரிக்கப்பட்ட நாள் 812-ம் ஆண்டு போர் நடந்துகொண்டிருந்தபோது, இங்கிலாந்துப் படைகள் வாஷிங்டன் நகருக்குள் நுழைந்தன. அமெரிக்கப் படைகளுக்கும் இங்கிலாந்துப் படைகளுக்கும் இடையே நடந்த இந்தச் சண்டையில், அமெரிக்கப் படைகள் தோற்று பின்வாங்கின. அதன் பிறகு, இங்கிலாந்துப் படைகள் வாஷிங்டன் நகருக்குள் நுழைந்து, முக்கியமான அரசு கட்டிடங்களை எரித்தன. இந்த நிகழ்வு, அமெரிக்க வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகவே கருதப்படுகிறது. இந்த நிகழ்வின் போது எரிக்கப்பட்ட அமெரிக்க அரசு கட்டிடங்கள்: அமெரிக்க அரசுக் கருவூலம் பாராளுமன்ற நூலகம் போர்த்துறை அலுவலகம்
நிலவில் முதன்முதல் காலடி வைத்த அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் காலமான தினமின்று . அமெரிக்காவின் ஓகியோ நகரில் கடந்த 1930 ஆகஸ்ட் 5ம் தேதி பிறந்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங். விஞ்ஞானத்தின் மீது அளவு கடந்த ஆர்வம் கொண்டிருந்தார். படிப்பு முடித்த பின்பு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் சேர்ந்து பணியாற்றினார். அப்போது, சோவியத் யூனியனும் அமெரிக்காவும் போட்டி போட்டு விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தன. அந்த காலத்தில் நிலவுக்கு சாட்டிலைட் அனுப்புவதே பெரிய சாதனையாக கருதப்பட்டது. இந்த சூழ்நிலையில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை நாசா செயல்படுத்தியது. அப்போது விண்வெளி பயணத்துக்கு தேர்வானவர்களில் நீல் ஆம்ஸ்ட்ராங்கும் ஒருவர். கடைசியில் கடந்த 1969ம் ஆண்டு அப்போலோ11 என்ற விண்கலத்தில் நிலவுக்கு பயணமானார் நீல் ஆம்ஸ்ட்ராங். அவருடன் எட்வின் ஆல்ட்ரின் என்பவரும் உடன் சென்றார். 4 லட்சம் கி.மீ. தூரப் பயணத்துக்கு பின் 1969 ஜூ¨லை 20ம் தேதி நிலவில் அப்போலே தரையிறங்கியது. விண்கலத்தில் வெளியில் வந்த நீல் ஆம்ஸ்ட்ராங், நிலவில் முதன்முதல் தனது காலடியை பதித்தார். அப்போது உலகமே அந்த காட்சியை பார்த்து அதிசயித்தது. மேலும் நிலவில் காலடி பதித்த முதல் மனிதர் என்ற சாதனையை நீல் ஆம்ஸ்ட்ராங் ஏற்படுத்தினார். எட்வின் ஆல்ட்ரின் நிலவின் மேற்பரப்பில் 4 மணி நேரம் நடந்து சாதனை படைத்தார். அதன்பின், கடந்த 1971ம் ஆண்டு நாசாவில் இருந்து விலகிய ஆம்ஸ்ட்ராங், சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இன்ஜினியரிங் பற்றி மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்.
