ஆடி தபசு : ஊசிமுனையில் தவம் செய்த நாயகியை வழிபடுவோம்!
ஊசிமுனையில் நின்று அம்பாள் சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் மேற்கொண்டார். ஆடி மாதத்தில் அம்பாள் தபஸ் இருந்ததை பார்த்து அவருக்கு திருக்காட்சி தந்தார் என்கிறது புராணம்.
கருணைக் கடல் கோமதி அன்னை, பராசக்தியை, உமையவளை, சிவபெருமானை, மகாவிஷ்ணுவை, இருவரும் சேர்ந்த சங்கரநாராயணரை வீட்டில் இருந்தபடியே மனதார வழிபட்டு நல்லருள் பெற்றிடுவோம்.
ஊசிமுனையில் நின்று அம்பாள் சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் மேற்கொண்டார். ஆடி மாதத்தில் அம்பாள் தபஸ் இருந்ததை பார்த்து அவருக்கு திருக்காட்சி தந்தார் என்கிறது புராணம்.கருணைக் கடல் கோமதி அன்னை, பராசக்தியை, உமையவளை, சிவபெருமானை, மகாவிஷ்ணுவை, இருவரும் சேர்ந்த சங்கரநாராயணரை வீட்டில் இருந்தபடியே மனதார வழிபட்டு நல்லருள் பெற்றிடுவோம்.
ஆடித் தபசு : ஊசிமுனையில் தவம் செய்த நாயகியை வழிபடுவோம்!
சிவபெருமானை அடைய ஊசிமுனையில் அம்பாள் கடும் தவம் இருந்த நன்னாளே ஆடித்தபசு. தபசு என்றால் தவம், தபஸ் என்று பொருள்.
ஆடித்தபசு அற்புத நாள் இன்று 2025 ஆகஸ்ட் 7ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆடித்தபசு திருவிழா எல்லா சிவ தலங்களிலும் திருக்கோயில்களில் கொண்டாடப்பட்டாலும், ஆடித்தபசு என்றதும் நம் நினைவுக்கு வருவது சங்கரன்கோவில் . இங்கு பல திருவிழா சிறப்பாக நடைபெற்றாலும், ஆடித்தபசு கோலாகலமாக நடைபெறும்.
ஊசிமுனை தவம் :
ஊசிமுனையில் நின்று அம்பாள் சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் மேற்கொண்டார். ஆடி மாதத்தில் அம்பாள் தபஸ் இருந்ததை பார்த்து அவருக்கு திருக்காட்சி தந்தார் என்கிறது புராணம்.
இந்த அற்புத நாளில் யாரெல்லாம் வழிபாடு, பிரார்த்தனை செய்கின்றனரோ அவருக்கு சிவபெருமானின் பூரண அருள் கிடைக்கும்.
புராணம். இதைத்தான் ஆடித்தபசு என்று கொண்டாடுகிறோம். வழிபடுகிறோம். பிரார்த்தனை செய்கிறோம்.
இன்று 7.8.2025 வியாழக்கிழமை ஆடித்தபசுத் திருவிழா.
ஹரிஹரனாக காட்சி தரும் சங்கரன் கோயில் :
ஹரி வேறு ஹரன் வேறு என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஹரியும், ஹரனும் ஒன்று தான் என்பதை, இருவரையும் ஒன்றாக்கி பார்க்க விரும்பிய உமையவள், அதற்காக ஊசிமுனையில் கடுமையான தவம் மேற்கொண்டாள். இந்த தவத்தின் பலனாக சங்கரனும், நாராயணரும் ஒன்றாக சங்கரநாராயணனாகக் காட்சி தந்தருளினர். இந்த அற்புத காட்சி தந்த நாள் தான் ஆடித்தபசுத் திருவிழா.
கோமதி அன்னை கருணைக் கடலானவர். அவரின் கருணை கடாட்சத்தைச் சொல்லில் உணர்த்த முடியாது.
இதன் காரணமாக சங்கரன்கோயில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த ஊர்களில் பெண் குழந்தைகளுக்கு கோமதி என்ற பெயர் சூட்டுவது இன்றும் வழக்கமாக உள்ளது.
இந்த அற்புத நாளில் கோயிலுக்கு செல்ல முடியாவிட்டாலும், வீட்டிலேயே கருணைக் கடல் கோமதி அன்னை, பராசக்தியை, உமையவளை, சிவபெருமானை, மகாவிஷ்ணுவை, இருவரும் சேர்ந்த சங்கரநாராயணரை வீட்டில் இருந்தபடியே மனதார வழிபட்டு நல்லருள் பெற்றிடுவோம்.
அற்புத நாளில் காலையும், மாலையும் வீட்டில் விளக்கேற்றி, சிவன் அம்பாளுக்கு செந்நிற மலர்களை சூடியும், பெருமாள் படத்திற்கு துளசியை சாற்றி வழிபடுங்கள். மங்கல காரியங்கள் அனைத்தையும் தடையின்றி நடத்தித் தந்தருள்வார்கள்.

