‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஆகஸ்டு 05-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.
மேஷ ராசி அன்பர்களே!
நீங்கள் யாரிடம் பேசினாலும் வார்த்தைகளில் கவனம் வேண்டும். பணியிடத்தில் பணிகள் ஆனது அதிகமாக காணப்படும். இதனை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். துணையிடம் வெளிப்படையாக பேச வேண்டும். அப்போது தான் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிக்க முடியும். பணவரவு ஆனது குறைவாக காணப்படும். இதன் மூலம் அன்றைய நாள் செலவுகளை செய்வதற்கு சிறியதாக கடன் வாங்குவீர்கள். உங்களின் ஆரோக்கியத்தில் முதுகு வலி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் கனமான பொருட்கள் தூக்குவதை தவிர்க்க வேண்டும்.
ரிஷப ராசி அன்பர்களே!
உங்களின் செயல்களில் வெற்றியை காண்பீர்கள். பணியிடத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள். இதன் கண்டு மேல் அதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். துணையிடம் நட்பாக நடந்து கொள்வீர்கள். இதன் மூலம் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். பணவரவு ஆனது அதிகமாக காணப்படும். இதன் மூலம் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். உங்களின் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. இதன் மூலம் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.
மிதுன ராசி அன்பர்களே!
எந்த செயல் செய்தாலும் அதனை நம்பிக்கையோடு செய்ய வேண்டும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இதனை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டால் தான் வெற்றியை அடைய முடியும். துணையிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிக்க முடியும். பணவரவு ஆனது அதிகமாக காணப்படும். இதன் மூலம் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவீர்கள். உங்களின் ஆரோக்கியத்தில் தோலில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் எண்ணெய் சம்மந்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
கடக ராசி அன்பர்களே!
உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். பணியிடத்தில் பணிகளை கவனமாகவும், திட்டமிட்டும் செய்ய வேண்டும். சக பணியாளர்களுடன் விட்டு கொடுத்து செல்ல வேண்டும். துணையிடம் கடுமையாக நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். அப்போது தான் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிக்க முடியும். பணவரவு ஆனது அதிகமாக காணப்பட்டாலும் அதற்கான செலவுகள் காணப்படும். அதனால் அனாவசியமான செலவுகளை தவிர்க்க வேண்டும்.உங்களின் ஆரோக்கியத்தில் தலைவலி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் வீணாக டென்சன் ஆவதை தவிர்க்க வேண்டும்.
சிம்ம ராசி அன்பர்களே!
எந்த விஷயத்தையும் லேசாக எடுத்து கொள்ள வேண்டும். யாரிடமும் வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் பணிகள் ஆனது அதிகமாக காணப்படும். இதனை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். துணையிடம் அகந்தை போக்கை வெளிப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பணஇழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பணத்தை கவனமாக கையாள வேண்டும். உங்களின் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.
கன்னி ராசி அன்பர்களே!
உங்களின் இலக்குகளை அடைவதற்கு உகந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் பணிகளை குறித்த நேரத்திற்கு முன்பே முடித்து காட்டுவீர்கள். இதன் மூலம் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். துணையிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிக்க முடியும். பணவரவு ஆனது அதிகமாக காணப்படும். இதன் மூலம் பணத்தை எதிர்கால பயன்பாட்டிற்காக சேமிப்பீர்கள். உங்களின் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் சோர்வு நிலையில் காணப்படுவீர்கள்.
துலா ராசி அன்பர்களே!
சிறப்பான நாளாக இருக்கும். பணியிடம் உங்களுக்கு சவலானதாக இருக்கும். பணிகளை கவனமாகவும், திட்டமிட்டும் செய்ய வேண்டும். துணையிடம் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வப்போது வாக்குவாதம் செய்யாமல் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பணவரவு ஆனது அதிகமாக காணப்படும். ஆனால் இதனை முதலீடு செய்வதற்கு உகந்த நாளாக இருக்காது. உங்களின் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் சோர்வு நிலையில் காணப்படுவீர்கள்.
விருச்சிக ராசி அன்பர்களே!
எந்த விஷயத்தையும் லேசாக எடுத்து கொள்ள வேண்டும். பணியிடத்தில் பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். அப்போது தான் பணிகளில் தவறுகள் ஏற்படாமலும், குறித்த நேரத்திற்கும் முடிக்க முடியும். துணையிடம் கோபமாக நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். அப்போது தான் குடும்பத்தில் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் பராமரிக்கலாம். வரவு மற்றும் செலவு இரண்டும் கலந்து காணப்படும். உங்களின் ஆரோக்கியத்தில் செரிமான பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் அவ்வப்போது வாக்குவாதம் செய்யாமல் விட்டு கொடுத்து செல்வது நல்லது.
தனுசு ராசி அன்பர்களே!
உங்களுக்கு நன்மை மற்றும் தீமை இரண்டும் கலந்ததாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் கவனக்குறைவால் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பணியை கவனமாக செய்ய வேண்டும். துணையிடம் உங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்.அப்போது தான் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முடியும். பண வரவு ஆனது அதிகமாக காணப்படும். இதனை வைத்து எதிர்கால பயன்பாட்டிற்காக பணத்தை சேமிப்பீர்கள். உங்களின் ஆரோக்கியத்தில் முகுது வலி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் கனமான பொருட்கள் தூக்குவதை தவிர்க்க வேண்டும்.
மகரராசி அன்பர்களே!
உங்களுக்கு வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள். இதன் கண்டு மேல் அதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். துணையிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். இதனை கண்டு மேல் அதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். பணவரவு ஆனது அதிகமாக காணப்படும். இதன் மூலம் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. இதன் மூலம் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.
கும்பராசி அன்பர்களே!
உங்களின் இலக்குகளை அடைவதற்கு உகந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள். இதனை கண்டு மேல் அதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். துணையிடம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிக்க முடியும். பணவரவு சிறப்பாக காணப்படும். இதன் மூலம் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். உங்களின் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. இதன் மூலம் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.
மீனராசி அன்பர்களே!
ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள். இதன் மூலம் உங்களுக்கு மன ஆறுதலான நாளாக இருக்கும். பணியிடத்தில் பணிகள் அதிகமாக காணப்படும். இதில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பணியை கவனமாகவும், திட்டமிட்டும் செய்ய வேண்டும். துணையிடம் உங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். பணவரவு ஆனது குறைவாக காணப்படும். இதன் மூலம் பணத்தை சேமிக்க முடியவில்லை என்று கவலை அடைவீர்கள். உங்களின் ஆரோக்கியத்தில் கண்ணில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் கண் சம்மந்தப்பட்ட எந்த பிரச்சனையிலும் கவனமாக இருக்க வேண்டும்.
