கிராமப்புறங்களில் தொழில் செய்பவர்களுக்கு ‘லைசென்ஸ்’ கட்டாயம் – தமிழக அரசு உத்தரவு..!

இது டீக்கடை முதல் அனைவருக்கும் பொருந்தும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு, தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து வணிகம் அல்லது தொழில் உரிமம் (லைசென்ஸ்) வழங்குவதற்கான விதிகள்-2025 என்ற சட்டத்தை கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் கொண்டு வந்து நிறைவேற்றியது. அதற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததால், அரசாணை வெளியிடப்பட்டு தற்போது சட்டமாக அமலுக்கு வந்துள்ளது.

இதில் பழைய பேப்பர்கள்-இரும்பு பொருட்கள் விற்பனை, கொரியர் சேவைகள், அச்சகம், இறைச்சி-மீன் கடைகள், தையல் தொழில், சலவை கடைகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட 119 சேவை தொழில்களும் பட்டியிலப்பட்டு உள்ளன. இந்த தொழில்களுக்கு கிராம பஞ்சாயத்துக்கு ஏற்ற வகையில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் ரூ.30 ஆயிரம் வரை லைசென்ஸ் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!