‘கீழடி’ அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது அநீதி – அமர்நாத் ராமகிருஷ்ணன்

நான் கண்டுபிடித்த விஷயங்களையே மாற்றச் சொன்னால் கீழடியின் தொன்மையை சிதைக்கும் செயலாகும் என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கீழடியில் ஆய்வு மேற்கொண்டு கிமு.8 நூற்றாண்டில் என்னென்ன பயன்படுத்தப்பட்டது. அந்த கால மக்களின் நாகரிகம், விவசாயம், விலங்குகள், கலாசாரம் பழக்கவழக்கம் எப்படி இருந்தது, இரும்பு பயன்படுத்தியது என அமர்நாத் ஐஏஎஸ் கண்டுபிடித்து, இந்திய தொல்லியல் துறைக்கு ஆய்வு மேற்கொண்டிருந்தார்.

அந்த ஆய்வு அறிக்கையை கிமு 3 ஆம் நூற்றாண்டு என திருத்துமாறு மத்திய அரசு, அமர்நாத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. கீழடி தொல்லியல் ஆய்வு பொறுப்பாளராக ஸ்ரீராம் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் 3ஆம் கட்ட அகழாய்வு நடத்தி, அமர்நாத் குறிப்பிடும் படியான கண்டுபிடிப்புகள் ஏதும் இல்லை என கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐஏஎஸ் அதிகாரி அமர்நாத், ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறுகையில், கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது. நான் கண்டுபிடித்ததை திருத்தினால் நான் குற்றவாளியாகிவிடுவேன்.

நான் தாக்கல் செய்த 982 பக்கங்களில் எழுத்துப் பிழையை வேண்டுமானால் திருத்த தயாராக இருக்கிறேன். ஆனால் உண்மையை திரித்து எழுத முடியாது. கிமு 8ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்ததை கிமு. 3 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்தவை என மத்திய அரசு மாற்ற வலியுறுத்துகிறது.

நான் கண்டுபிடித்த விஷயங்களையே மாற்றச் சொன்னால் கீழடியின் தொன்மையை சிதைக்கும் செயலாகும்.

மத்திய கலாச்சாரத் துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெதாவத் எனது அறிக்கையை முதலில் படிக்கட்டும். இந்தியாவில் பலதரப்பட்ட கலாசாரங்கள் உள்ளன. அதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். சிந்து சமவெளி நாகரீகம், வேத காலம், மவுரிய, ஹர்ஷவர்தன் காலத்தையே மத்திய அரசு பேசி வருகிறது. ஆனால் சங்க கால வரலாற்றை பற்றி ஏன் மத்திய அரசு ஆய்வு செய்யவில்லை. மூன்றாவது கட்ட அகழாய்வில் ஈடுபட்ட ஸ்ரீராம், கீழடி அகழாய்வு குறித்து எந்த பின்னணியும் தெரியாதவர். அவரை ஆய்வு செய்ய சொன்னால் “ஒன்றும் இல்லை” என்றுதான் சொல்வார். இவ்வாறு அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013- ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை மத்திய அரசு சார்பில் அகழாய்வு பணியை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்டார். இந்த அகழாய்வின் போது 5000-க்கும் மேற்பட்ட பழைமை வாய்ந்த பொருள்கள் கிடைத்தன. இந்நிலையில் திடீரென அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

கீழடியில் கண்டறியப்பட்ட மனித மண்டை ஓட்டை வைத்து நம் மூதாதையர்கள் எப்படி இருந்தார்கள் என கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் இருந்த அடையாளமும், பருத்தி விளைச்சல், திணை அரிசி விளைச்சல் உள்ளிட்டவையும் இருந்தது கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!