பள்ளிகளில் இனி லாஸ்ட் பெஞ்ச் இருக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.பள்ளிகளில் இனி மாணவர்களை ‘ப‘ வடிவில் அமரவைக்க வேண்டும் என இன்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு, தான் கடைசி பெஞ்ச் என்ற எண்ணம் உருவாகாத வகையில் இத்தகைய அறிவிப்பை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த மாற்றம், மாணவர்களிடையே சமத்துவமான கற்றல் சூழலை உருவாக்கவும்,ஆசிரியர்களுடனான தொடர்பை மேம்படுத்தவும் உதவும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

‘ப‘ வடிவ இருக்கை அமைப்பு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காகவும், வகுப்பறைகளில் கடைசி பெஞ்ச் என்ற கருத்தை நீக்குவதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க, ஆசிரியரை கவனிக்க வசதியாக இருக்கும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.
