பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரல்-கும்மிடிப்பூண்டி உள்பட 24 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி ரெயில் நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் 10 ஆகிய தேதிகளில் காலை 9.15 மணி முதல் மாலை 3.15 மணி வரையில் (6 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முழுவதும் ரத்து
சென்னை சென்டிரலில் இருந்து காலை 8.05, 9, 9.30, 10.30, 11.35 மணி ஆகிய நேரங்களில் கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 9.10, 9.55, 11.25 மதியம் 12, 1, 2.30 ஆகிய நேரங்களில் சென்டிரல் வரும் ரெயிகளும் ரத்துசெய்யப்படுகிறது.
