வரலாற்றில் இன்று ( ஜூன்27)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஜூன் 27  கிரிகோரியன் ஆண்டின் 178 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 179 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 187 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1497 – கோர்னியக் கிளர்ச்சியாளர்கள் மைக்கேல் கோஃப், தோமசு பிளமாங்க் இலண்டன் டைபர்ன் என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டனர்.
1556 – தமது சீர்திருத்தத் திருச்சபை நம்பிக்கைகளுக்காக 13 பேர் இலண்டனில் எரியூட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
1743 – டெட்டிஞ்சென் போரில் பங்குபற்றிய பிரித்தானிய மன்னர் இரண்டாம் ஜார்ஜ், போர் ஒன்றி நேரடியாகப் பங்குகொண்ட கடைசி பிரித்தானிய முடியாட்சியாளர் ஆவார்.
1759 – கியூபெக் மீதான பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பமானது.
1760 – செரோக்கீ போராளிகள் பிரித்தானியப் படைகளை எக்கோயீ போரில் (வட கரொலைனாவில்) வென்றனர்.
1806 – பிரித்தானியப் படையினர் புவனெசு ஐரிசைக் கைப்பற்றினர்.
1806 – டச்சு இலங்கையில் கத்தோலிக்கர் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.[1]
1844 – பின்னாள் புனிதர்களின் கிறித்து சபையை நிறுவிய இரண்டாம் யோசப்பு இசுமித்தும் அவரது சகோதரரும் இலினொய், கார்த்தேசு சிறையில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டனர்.
1898 – உலகை சுற்றும் முதலாவது பயணத்தை நோவா ஸ்கோசியாவைச் சேர்ந்த யோசுவா சுலோக்கம் வெற்றிகரமாக முடித்தார்.
1905 – உருசிய-சப்பானியப் போரின் போது, பொத்தெம்கின் என்ற உருசியப் போர்க்கப்பலில் கடற்படையினர் கிளர்ச்சியில் இறங்கினர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படைகள் பியாலிசுத்தோக் நகரை பர்பரோசா நடவடிக்கையின் போது கைப்பற்றின.
1941 – உருமேனியா லாசி நகரில் யூதர்களுக்கு எதிரான படுகொலைகளை ஆரம்பித்தது. இதன் போது குறைந்தது 13,266 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
1950 – கொரியப் போரில் போரிட அமெரிக்கா தனது படைகளை அனுப்பத் தீர்மானித்தது.
1954 – சோவியத் ஒன்றியத்தின் முதலாவது அணு மின் நிலையம் ஓபினின்ஸ்க் நகரில் திறக்கப்பட்டது.
1954 – இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.
1957 – டெக்சஸ்–லூசியானா எல்லையை சூறாவளி தாக்கியதில் 400 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1973 – உருகுவை அரசுத்தலைவர் உவான் மரியா போர்டபெரி நாடாளுமன்றத்தைக் கலைத்து, நாட்டில் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தினார்.
1974 – அமெரிக்கத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன் சோவியத் ஒன்றியத்துக்கான பயணம் மேற்கொண்டார்.
1976 – ஏர் பிரான்சு 139 (டெல் அவீவ்-ஏதென்ஸ்-பாரிசு) பாலத்தீன விடுதலை இயக்கப் போராளிகளால் கடத்தப்பட்டு உகாண்டாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
1977 – சீபூத்தீ பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1979 – முகமது அலி குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
1980 – பலெர்மோ நோக்கிச் சென்ற இத்தாலியின் ஏரோலைனீ 870 விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதில் அதில் சென்ற அனைத்து 81 பேரும் உயிரிழந்தனர்.
1981 – சீனப் பொதுவுடமைக் கட்சியின் நடுவண் செயற்குழு தனது “மக்கள் சீனக் குடியரசு உருவாக்கப்பட்டதில் இருந்து நமது கட்சியின் வரலாறு பற்றிய சில கேள்விகள் பற்றிய தீர்மானத்தை” வெளியிட்டது. இதில் சீனப் பண்பாட்டுப் புரட்சியின் விளைவுகளுக்காக மா சே துங் மீது குற்றஞ்சாட்டியது.
1982 – கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை மேற்கொண்டது.
1988 – பாரிசு நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 56 பேர் உயிரிழந்தனர்.
1991 – சுலோவீனியா தனது விடுதலையை அறிவித்த இரண்டாம் நாளில் யுகோஸ்லாவியா அதன் மீது படையெடுத்தது.
1994 – சப்பானில் ஓம் சிர்க்கியோ மதக்குழுவினர் மத்சுமோட்டோ நகரில் நச்சு வாயுவைக் கசியவிட்டதில் 7 பேர் கொல்லப்பட்டனர், 660 பேர் காயமடைந்தனர்.
1998 – கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது.
2007 – 1997 முதல் பதவியில் இருந்த பிரித்தானியத் தலைமை அமைச்சர் டோனி பிளேர் பதவி துறந்தார்.
2013 – சூரியனை ஆய்வு செய்வதற்காக நாசா விண்கலம் ஒன்றை ஏவியது.
2014 – ஆந்திரப் பிரதேசம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கெயில் இந்தியா நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் வெடித்ததில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

1789 – டானியல் புவர், இலங்கையில் கல்விச்சாலைகளை நிறுவிய அமெரிக்கக் கிறித்தவ மதகுரு (இ. 1855)
1838 – பங்கிம் சந்திர சட்டர்ஜி, இந்திய ஊடகவியலாளர், கவிஞர் (இ. 1894)
1869 – எம்மா கோல்ட்மன், லித்துவேனிய-கனடிய மெய்யியலாளர், செயர்பாட்டாளர் (இ. 1940)
1872 – ஏபர் தவுசுட் கர்டிசு, அமெரிக்க வானியலாளர் (இ. 1942)
1880 – ஹெலன் கெல்லர், அமெரிக்க எழுத்தாளர், செயர்பாட்டாளர் (இ. 1968)
1899 – சி. கணபதிப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1986)
1912 – ஈ. ஆர். பிரைத்வெயிட், கயானா-அமெரிக்கப் புதின எழுத்தாளர் (இ. 2016)
1922 – அகிலன், தமிழக எழுத்தாளர் (இ. 1988)
1927 – டொமினிக் ஜீவா, ஈழத்து எழுத்தாளர், இதழாசிரியர் (இ. 2021)
1939 – ராகுல் தேவ் பர்மன், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர் (இ. 1994)
1943 – உ. இராதாகிருஷ்ணன், ஈழத்து வயலின் இசைக் கலைஞர் (இ. 2015)
1958 – மரியா சூபர், அமெரிக்க வானியலாளர்
1962 – சுனந்தா புஷ்கர், இந்திய-கனடிய தொழிலதிபர் (இ. 2014)
1963 – சுசில் குமார் சிங், இந்திய அரசியல்வாதி
1964 – பி. டி. உஷா, கேரள தடகள விளையாட்டாளர்
1975 – தோபி மக்குயர், அமெரிக்க நடிகர்
1992 – கார்த்திகா நாயர், இந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1839 – ரஞ்சித் சிங், சீக்கிய பேரரசை நிறுவியவர் (பி. 1780)
1844 – இரண்டாம் யோசப்பு இசுமித்து, பிற்காலப் புனிதர்களின் இயேசு கிறித்து சபையை நிறுவிய அமெரிக்கர் (பி. 1805)
1952 – சி. ஆர். சுப்பராமன், தென்னிந்திய இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் (பி. 1924)
1963 – ச. து. சு. யோகி, தமிழகத் தமிழறிஞர், திரைப்படப் பாடலாசிரியர், இயக்குநர் (பி. 1904)
1988 – ஆர். முத்துசாமி, ஈழத்து இசையமைப்பாளர், பாடகர் (பி. 1926)
1998 – நிகில் சக்கரவர்த்தி, இந்திய இதழிகையாளர் (பி. 1913)
2006 – கா. செ. நடராசா, ஈழத்து எழுத்தாளர், கவிஞர் (பி. 1930)
2007 – டி. எம். தியாகராஜன், தமிழக கருநாடக இசைக் கலைஞர் (பி: 1923)
2008 – சாம் மானேக்சா, இந்திய இராணுவத் தளபதி (பி. 1914)
2009 – இ. முருகையன், ஈழத்துக் கவிஞர் (பி. 1935)
2016 – ஆல்வின் டாப்லர், அமெரிக்க சமூக அறிவியலாளர், நூலாசிரியர், எழுத்தாளர் (பி. 1928)
2019 – விஜய நிர்மலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை, இயக்குநர் (பி. 1944)

சிறப்பு நாள்

பல்கலாச்சார நாள் (கனடா)
விடுதலை நாள் (சீபூத்தீ, பிரான்சிடம் இருந்து 1977)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!