மறைந்த நடிகர் மனோஜின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இயக்குனர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் உடல் நலக்குறைவால் நேற்று (மார்ச் 25) இரவு காலமானார். அவரது உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரைத்துறையினர் ஏராளமானார் நேற்று இரவு முதலே அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மனோஜின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள மனோஜ் பாரதியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி பாரதிராஜாவுக்கும் ஆறுதல் கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இன்று மாலை 4.30 மணியளவில் அவரது மனோஜின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.