கோவையில் மெட்ரோ அமைக்கும் பணிகள் தொடக்கம்..!

தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவித்தபடியே கோவையில் 40 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரயில் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

கோவையில் 5 இடங்களை மையமாக வைத்து மெட்ரோ பணிகள் நடக்க உள்ளன. அவினாசி சாலை கணியூர் வரையில்தான் முதல் கட்டமாக இந்த திட்டம் கொண்டு வரப்படும்.

அவினாசி சாலை, திருச்சி சாலை வழியாக மெட்ரோ பாதை. சத்தி சாலை, சிறுவாணி சாலை வழியாக மெட்ரோ பாதை. மேட்டுப்பாளையம் சாலைகள் வழியாக மெட்ரோ பாதைகளை அமைக்க முடிவு செய்துள்ளனர், மொத்தமாக 139 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

கோவை மெட்ரோ முதல் கட்டத்தில் 3 மால்கள், எல்எம்யூசி உயர் தெரு, ஒரு பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் ஆகியவை இணைக்கப்பட உள்ளன. அதோடு இந்த மெட்ரோ 4 ஐந்து நட்சத்திர விடுதிகள் மற்றும் ஏராளமான கல்வி நிறுவனங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இது நகரத்தின் போக்குவரத்தில் மிகப்பெரிய கேம்-சேஞ்சராக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

முதலில் கோவையில் மெட்ரோ லைட் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் எடுத்த ஆலோசனையின் முடிவில் இதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தொழில்நகரமான கோவை நகரின் வளர்ச்சியையும், முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு மெட்ரோ லைட் திட்டத்திற்குப் பதிலாக வழக்கமான மெட்ரோ ரயில் திட்டமே செயல்படுத்தப்பட முடிவுசெய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளது. அதன்படி CMRL ரூ.154 கோடியை ஒதுக்கி உள்ளது. ஏற்கனவே நிலம் கண்டறியப்பட்ட நிலையில் மெட்ரோ அமைக்கும் எந்திரங்கள், பேரிகேட்களை இன்று முதல் கோவைக்கு கொண்டு செல்ல உள்ளனர்

90% நிலம் அரசுக்கு சொந்தமான நிலமாக, சாலை பகுதியாக இருப்பதால் நிலத்தை அடையாளம் காண்பதில் சிக்கல் இல்லை. அதோடு கோவையில் விரைவில் அலுவலகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர் மெட்ரோ காரிடார் 1 பணிகள் இந்த வாரமே தொடங்க உள்ளது. இதற்கான சர்வே பணிகள் இந்த வாரம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கோவை மெட்ரோ கட்டுமானத்தில் தமிழ்நாடு அரசு சீரியஸாக இருக்கிறது. இதை மனதில் வைத்தே பணிகளை வேகமாக தொடங்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த மெட்ரோ கோவையின் முக்கியமான பல பகுதிகளை இணைக்க உள்ளது. இதனால் கோவையின் மிகப்பெரிய கேம் சேஞ்சராக இந்த மெட்ரோ பாதை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் இருப்பது போலவே அதே வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். மெட்ரோ ரயில் திட்டம் 3 கட்டங்களாக கொண்டு வரப்பட உள்ளது. சத்தி சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரை முதல் கட்ட பணியின் இறுதியில் மெட்ரோ அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கோவையில் மெட்ரோ லைட் திட்டத்திற்கு பதிலாக வழக்கமான மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மெட்ரோ லைட் என்றால் மெதுவாக செல்லும், குறைந்த பெட்டிகள் இருக்கும். ஆனால் கோவை மெட்ரோ சென்னை மெட்ரோ போலவே முழு மெட்ரோவாக செயல்படும்.

கோவை மற்றும் மதுரை மெட்ரோவை தமிழக அரசு தனது பிரதான திட்டங்களில் ஒன்றாக மாற்றி உள்ளது. இதற்கான அதிக முக்கியத்துவத்தை கொடுத்து திட்டத்தை நடத்த தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி பிப்ரவரி மாதமே இதற்காக நிலம் எடுக்க உள்ளனர்.

பெரும்பாலும் அரசு சாலைகள், சாலைகளுக்கு அருகே உள்ள இடங்களில்தான் நிலம் எடுக்க உள்ளனர் என்பதால்.. இந்த பணிகள் எளிதாக முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மெட்ரோவிற்கு மத்திய அரசின் நிதி வழங்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் மதுரை, கோயம்புத்தூருக்கு புதிதாக மெட்ரோ டிபிஆர் தயாரிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக மத்திய அரசிடம் அளிக்கப்பட்ட டிபிஆர் ரிப்போர்ட் பல்வேறு தவறுகள் காரணமாக நிராகரிக்கப்பட்டது. இதனால் கிடப்பில் கிடந்த திட்டம் தற்போது மீண்டும் புதிய டிபிஆர் தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு விரைவில் அதற்கு அனுமதி கிடைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!