வரலாற்றில் இன்று (பிப்ரவரி 17)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

பெப்ரவரி 17 (February 17) கிரிகோரியன் ஆண்டின் 48 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 317 (நெட்டாண்டுகளில் 318) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

364 – உரோமைப் பேரரசர் யோவியன் எட்டு மாத கால ஆட்சியின் பின்னர் அனத்தோலியாவில் மர்மமான முறையில் இறந்தார்.

1600 – மெய்யியலாளர் கியோர்டானோ புரூணோ உரோம் நகரில் சமய மறுப்புக்காக உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.

1739 – மராட்டியர் போர்த்துக்கீசரின் பிடியில் இருந்த வாசை நகர் (மகாராட்டிரத்தில்) மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.

1753 – சுவீடன் யூலியன் நாட்காட்டியில் இருந்து கிரெகொரியின் நாட்காட்டிக்கு மாறியது. பெப்ரவரி 17ம் நாளுக்கு அடுத்த நாள் மார்ச் 1 ஆக மாற்றப்பட்டது.

1788 – லெப்டினண்ட் போல் என்பவன் சிட்னியில் இருந்து நோர்போக் தீவுக்கு கைதிகளைக் குடியேற்றச் சென்ற போது மனிதர்களற்ற லோர்ட் ஹோவ் தீவைக் கண்டுபிடித்தான்.

1838 – தென்னாப்பிரிக்காவில் நத்தாலில் நூற்றுக்கணக்கான இடச்சுக் குடியேறிகளை சூலு இனத்தோர் கொன்றனர்.

1854 – ஐக்கிய இராச்சியம் ஆரஞ்சு விடுதலை இராச்சியத்தை விடுதலை பெற்ற நாடாக அங்கீகரித்தது.

1863 – ஜெனீவாவின் குடிமக்கள் சிலர் இணைந்து காயமடைந்தோர்க்கான பன்னாட்டு நிவாரணக் குழுவை அமைத்தனர். இது பின்னர் பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் என அழைக்கப்பட்டது.

1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: எச்.எல். ஹன்லி என்ற நீர்மூழ்கிக் கப்பல் யூஎஸ்எஸ் ஹவுசட்டோனிக் என்ற போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.

1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: தென் கரோலினாவின் கொலம்பியா நகரம் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் படைகள் வெளியேற்றத்தின் போது தீயிடப்பட்டது.

1867 – சூயசுக் கால்வாயூடாக முதலாவது கப்பல் சென்றது.

1871 – பிரான்சிய-புருசியப் போரில் பாரிசு நகரைக் கைப்பற்றிய புருசிய இராணுவம் பாரிசு நகரில் வெற்றி ஊர்வலத்தை நடத்தியது.

1881 – இலங்கையில் இரண்டாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாட்டின் மொத்தத் தொகை 2,759,738, வட மாகாணத்தில் 302,500, யாழ்ப்பாணத்தில் 40,057 ஆகக் கணக்கெடுக்கப்பட்டது.[1]

1933 – நியூஸ்வீக் முதலாவது இதழ் வெளிவந்தது.

1936 – சிறுவர்களுக்கான அதிமேதாவி மாயாவி முதற்தடவையாக வரைகதைகளில் தோன்றினார்.

1947 – வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா தனது ஒலிபரப்புச் சேவையை சோவியத் ஒன்றியத்துக்கு ஆரம்பித்தது.

1948 – இலங்கை, காலியில் பட்டாசுத் தொழிற்சாலை ஒன்று வெடித்ததில் 16 பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர்.[2]

1957 – மிசோரியில் வயோதிபர் இல்லம் தீக்கிரையாகியதில் 72 பேர் உயிரிழந்தனர்.

1959 – முதலாவது காலநிலை செய்மதி வான்கார்ட் 2 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1964 – காபொனில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அந்நாட்டின் அரசுத்தலைவர் லேயொன் உம்பா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1965 – அப்பல்லோ 11 மூலம் நிலாவிற்கு மனிதரை அனுப்புவதற்கு முன்னோட்டமாக நிலாவில் தரையிறங்குவதற்கான இடத்தைப் படம் எடுப்பதற்காக ரேஞ்சர் 8 விண்கலம் ஏவப்பட்டது.

1978 – ஐரியக் குடியரசுப் படை போராளிகள் பெல்பாஸ்ட் நகரில் உணவு விடுதி ஒன்றில் எரிகுண்டு ஒன்றை வெடிக்க வைத்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

1979 – மக்கள் சீனக் குடியரசுக்கும் வியட்நாமுக்கும் இடையில் போர் ஆரம்பமாகியது.

1982 – இலங்கைத் துடுப்பாட்ட அணி தனது முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக கொழும்பு ஓவல் அரங்கில் விளையாடியது.

1990 – இலங்கையின் ஊடகவியலாளர், மனித உரிமை செயற்பாட்டாளர் ரிச்சர்ட் டி சொய்சா கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.

1992 – நகோர்னோ கரபாக் போர்: ஆர்மீனியப் படைகள் கரதாக்லி நகர ஊடுருவலில் 20 இற்கும் அதிகமான அசர்பைசானியரைக் கொன்றனர்.

1995 – பெருவுக்கும், எக்குவதோருக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு ஐநா முயற்சியால் ஏற்படுத்தப்பட்டது.

1996 – நாசாவின் டிசுக்கவரி திட்டம் ஆரம்பமானது. 433 ஈரோசு சிறுகோளில் தரையிறங்கும் நோக்கோடு நியர் சூமேக்கர் என்ற விண்கலம் ஏவப்பட்டது.

1996 – பிலடெல்பியாவில் நடைபெற்ற சதுரங்க ஆட்டத்தில் காரி காஸ்பரொவ் ஐபிஎம்மின் டீப் புளூ மீத்திறன் கணினியை வென்றார்.

1996 – இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் 8.2 அளவு நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலை இடம்பெற்றதில் 166 பேர் உயிரிழந்தனர். 423 பேர் காயமடைந்தனர்.

2000 – விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது.

2006 – பிலிப்பீன்சில் சென் பேர்னார்ட் நகரில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 1,126 பேர் உயிருடன் புதையுண்டனர்.

2008 – கொசோவோ செர்பியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

2011 – அரேபிய வசந்தம்: முஅம்மர் அல் கதாஃபியின் ஆட்சிக்கு எதிரான லிபிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாயின.

2015 – எயிட்டியில் இடம்பெற்ற மார்டி கிரா பவனியில் ஏற்பட்ட நெரிசலில், 18 பேர் உயிரிழந்தனர், 78 பேர் காயமடைந்தனர்.

2016 – துருக்கி, அங்காரா நகரில் இராணுவ வாகனக்கள் வெடித்ததில் 29 பேர் கொல்லப்பட்டனர், 61 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

1201 – நசீருத்தீன் அத்-தூசீ, பாரசீக வானியலாளர், உயிரியலாளர் (இ. 1274)

1723 – டோபியாஸ் மேயர், செருமானிய வானியலாளர் (இ. 1762)

1781 – ரெனே லென்னக், இதயத்துடிப்பு மானியைக் கண்டுபிடித்த பிரான்சிய மருத்துவர் (இ. 1826)

1888 – ஆட்டோ ஸ்டர்ன், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1969)

1890 – ரொனால்டு பிசர், aaங்கிலேய-ஆத்திரேலிய உயிரியலாளர், கணிதவியலாளர் (இ. 1962)

1910 – கொத்தமங்கலம் சீனு, தமிழ் நாடகத், திரைப்பட நடிகர், கருநாடக இசைப் பாடகர் (இ. 2001)

1918 – சான்-சார்லஸ் கான்டின், கனடிய அரசியல்வாதி (இ. 2005)

1927 – யுவான் அல்மெய்டா, கியூபப் புரட்சியாளர் (இ. 2009)

1929 – அம்பி, ஈழத்துத் தமிழ் எழுத்தாளர், கவிஞர் (இ. 2024)

1930 – பசவ பிரேமானந்த், கேரள மெய்யியலாளர், இறைமறுப்பாளர் (இ. 2009)

1938 – அறிவானந்தன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் (இ. 2000)

1945 – இராசேந்திர சோழன், தமிழக எழுத்தாளர் (இ. 2024)

1955 – மோ யான், நோபல் பரிசு பெற்ற சீன எழுத்தாளர்

1965 – மைக்கேல் பே, அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர்

1975 – வடிவேல் பாலாஜி, தமிழ் தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர், திரைப்பட நடிகர் (இ. 2020)

1981 – ஜோசப் கார்டன்-லெவிட், அமெரிக்க நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்

1981 – பாரிஸ் ஹில்டன், அமெரிக்க நடிகை, பாடகி

1984 – ஏ பி டி வில்லியர்ஸ், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர்

1984 – சதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

1985 – சிவகார்த்திகேயன், தமிழக நடிகர்

1991 – எட் சீரன், ஆங்கிலேயப் பாடகர்

1991 – போனி ரைட், ஆங்கிலேய நடிகை, இயக்குநர்

இறப்புகள்

1553 – மூன்றாம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (பி. 1492)

1600 – கியோர்டானோ புரூணோ, இத்தாலியக் கணிதவியலாளர், வானியலாளர், மெய்யியலாளர் (பி. 1548)

1673 – மொலியர், பிரான்சிய நடிகர் (பி. 1622)

1865 – ஜார்ஜ் பிலிப்சு பாண்டு, அமெரிக்க வானியலாளர் (பி. 1825)

1874 – அடால்ப் குவெட்லெட், பெல்ச்சிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1796)

1907 – என்றி ஆல்காட், அமெரிக்க இராணுவ அதிகாரி, பிரம்மஞான சபையின் நிறுவனர் (பி. 1832)

1909 – யெரொனீமோ, அமெரிக்கப் பழங்குடித் தலைவர் (பி. 1829)

1956 – எஸ். வையாபுரிப்பிள்ளை, தமிழறிஞர், பதிப்பாளர் (பி. 1891)

1986 – ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, இந்திய-அமெரிக்க மெய்யியலாளர் (பி. 1895)

1988 – கர்ப்பூரி தாக்கூர், பீகாரின் 11வது முதலமைச்சர் (பி. 1924)

1994 – நாவற்குழியூர் நடராஜன், இலங்கைத் தமிழறிஞர், கவிஞர், வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1910)

1994 – சிமன்பாய் படேல், இந்திய அரசியல்வாதி (பி. 1929)

2010 – மணிமேகலை இராமநாதன், ஈழத்துக் கலைஞர் (பி. 1946)

2014 – ஆர். கே. ஸ்ரீகண்டன், கருநாடக இசைப் பாடகர் (பி. 1920)

2016 – எஸ். ரி. அரசு, இலங்கை நாடகக் கலைஞர், ஒப்பனைக் கலைஞர், ஒளிப்பதிவாளர், சிற்பக் கலைஞர் (பி. 1926)

சிறப்பு நாள்

விடுதலை நாள் (கொசோவோ, 2008)

புரட்சி நாள் (லிபியா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!